Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in
திருச்சி 27.9.16
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவளகம் கோஅபிஷேகபுரம் கோட்டம் அரியமங்கலம் கோட்டம் பொன்மலை கோட்டம் ஆகிய இடங்களி;ல் 65மாமன்ற உறுப்பினருக்கானதேர்தல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு ; கொடுக்கப்பட்டன
திருச்சியில் அஇஅதிமுக சார்பில் இன்று வேட்பு மனு மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தேர்தல் அலுவலகர்களிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் டைமன்ட்திருப்பதி தியாகராஜன் ராஜேந்திரன் ரதிமாலா சந்திரா கார்த்திகேயன் நத்தர்ஷா நாகநாதர் பாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யவும் எவ்வித இடையூறுகலும் ஏற்படா வண்ணம் பலத்த காவல்துறையினர் மற்றும் உயர்அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
On Tuesday, September 27, 2016 by Tamilnewstv in
திருச்சி 27.9.16

திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அலுவளகம் முறைகேடாக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்ததாக பொது மக்கள் 55,14,12,8,21 பகுதி செயலாளர் ஆகியோர் தலைமையில் முற்றுகை

அப்போழுது அவர்கள் கூறியது நாங்கள் பல வருடங்களாக அஇஅதிமுகாவில் உள்ளோம் ஆனால் அமைச்சர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அம்மாவின் உருவ பொம்மையை எரித்து போரட்டம் நடத்திய 55வார்டு பூபதியின் மனைவிக்கும்; அதே போன்;று கலீலு ரஹ10மானுக்கும் இதுபோன்ற பல இடங்களில் பல்வேறு தவாறான நபர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பணம் வாங்கிக்கொண்டு அம்மாவிற்கு தெரியாமல்; இச்செயலை செய்துள்ளார் என்றும் சிலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன அதை பொருட்படு;த்தாமல் அமைச்சர் இச்செயல்களை செய்து வருகிறார் என்
று கூறினர்.


பேட்டி பொது மக்கள்
On Tuesday, September 27, 2016 by Unknown in    

 

ஹிந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வரும் அவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மனைவி ஷாலினி தாக்கரே மற்றும் நிர்வாகிகளில் ஒருவரான ஏமி கோப்கர் ஆகியோர், "பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும்' என்றனர்.

இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதிக்குச் சென்றிருந்த இளையராஜாவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ராஜா, இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது என்றார். ரஹ்மான் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தபோது, ரஹ்மான் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். ஆனால் நானும் அதேபோல எண்ணவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்றார். 

On Tuesday, September 27, 2016 by Unknown in    

பாட்டியாலா: பாட்டியாலா அருகே, 100 வயது மிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயலில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே, தாவுப் காலன் கிராமத்தில் திங்கள் இரவு அந்த மூதாட்டி வாசலில் தூங்கி கொண்டிருந்தார். குடும்பத்தினர் காலையில் பார்த்த போது, மூதாட்டி மாயமாகியிருந்தார். அவரை தேடிப்பார்த்த போது, அருகில் உள்ள வயலில், அரை நிர்வாண நிலையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். 

இது தொடர்பாக மரணமடைந்த பாட்டியின் பேரன் கூறுகையில், தனது பாட்டியில் கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது தலையில் காயம் இருந்தது என்றார்.

போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு கற்பழிப்பு குறித்த புகாரினை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் கட்ட விசாரணையில், சொத்து தகராறில் கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை. போதைக்கு அடிமையானவர்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்

On Tuesday, September 27, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே திருப்பூர் மாநகர போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர், அதன் சார்பு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் ஆங்காங்கே வைத்துள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கிகள் மற்றும் படைக்கலன்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் அல்லது அனுமதி பெற்ற படைக்கலன் பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய துப்பாக்கிகளை உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது

On Tuesday, September 27, 2016 by Unknown in    

திருப்பூர்உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 3–ந் தேதி கடைசி நாள் ஆகும். அரசு விடுமுறை அல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு பெறப்படும்.இதையொட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பு மனு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.இதுபோல் திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஏராளமானோர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சென்று வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்

Monday, September 26, 2016

On Monday, September 26, 2016 by Unknown in    

தாராபுரம்,தாராபுரம் அருகே அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வயது குழந்தையின் ஒரு கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.பஸ்கள் மோதல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சேவக்கம்பட்டியைச்சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. இவரது மனைவி அனிதா இவர்களுக்கு தேஷிகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் பின்பக்க இருக்கையில் அனிதா குழந்தையுடன் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.பஸ் தாராபுரம் திருப்பூர் சாலையில் காதப்புள்ளபட்டிக்கு முன்புள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. குழந்தை தனது வலது கையை வெளியே நீட்டி விளையாடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், மணிகண்டன் பயணம் செய்த அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.வலது கை துண்டானதுஇந்த விபத்தில் குழந்தை தேஷிகாவின் வலது கை அதே இடத்தில் துண்டாகி கீழே விழுந்து விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் குழந்தை தேஷிகாவையும், துண்டாகிக்கிடந்த குழந்தையின் கையையும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவிகள் செய்யப்பட்டது. துண்டான கையை டாக்டர்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தினார்கள்.பிறகு தேஷிகாவோடு அவரது கையையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தேஷிகாவின் துண்டான கையை மீண்டும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது பெண் குழந்தையின் கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

On Monday, September 26, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் மாநகராட்சி 25–வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மேட்டுபாளையம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஒரு வளைவில் மழைநீர் வடிகாலின் அகலம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதியில் வடிகாலின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூட மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.இந்தநிலையில் வடிகாலின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் திடீரென திருப்பூர் பி.என்.ரோட்டில் சாலைமறியல் செய்ய முயன்றனர். இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த பொதுமக்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

On Monday, September 26, 2016 by Unknown in