Thursday, September 29, 2016

On Thursday, September 29, 2016 by Unknown in    

அவினாசிஅவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 200–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தற்காலிகமாக பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாள் தோறும் ரூ.200 சம்பளம் என்று ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது 100 நாள் மட்டுமே வேலை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் சம்பளத்தொகை வழங்க கேட்டுள்ளனர். அதற்கு 27–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சம்பளத்தொகை வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகத்தின் முன் நேற்றுமுன்தினம் சேவூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகம் அழைத்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் சம்பளத்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய பின் கலைந்து சென்றனர்

Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

*சென்னை குமரன் காவல் நிலையத்தில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் மீது தாக்குதல் கேமரா பறிப்பு போலிசார் அராஜகம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த சக போலிசார்.*

சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் அதிமுகவினரை போலிசார் தாக்கியது தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த செய்தியை சேகரிக்க சென்ற  கேப்டன் தொலைக்காட்சி நிருபர் செளந்தரராஜன் அவர்களை தாக்கி கேமராவை பறித்து ஆயுதப்படை போலிசார் கார்த்திகேயன்  அராஜகம். சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் தூண்டுதலின் பேரில் தான் ஆயுதப்படை போலிசார் இந்த அத்து மீறலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அரங்கேறும் போது 10 க்கும் மேற்ப்பட்ட போலிசார் இருந்தும் கண்டுகொள்ளவில்லை. நிருபர் சென்று ஜெயபாலன் அவர்களிடம் முறையிட்ட போது நீ என்ன புடிங்கி விடுவாய என ஆணவமாகவும் இழிவாகவும் பேசி அவமதித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் இணை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளனர். இச்சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்ட கார்த்திகேயன், ஜெயபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

On Wednesday, September 28, 2016 by Unknown in    

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தன்னை மீறிய அதிகார அமைப்பு இல்லை என்பதுபோல செயல்படுவது சரியல்ல என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு அந்நாட்டு கடற்படைக்கு அறிவுறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை, திண்டுக்கல் பிரமுகர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை நடுநிலையுடன் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தமிழக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அவர்களுடைய அதிகாரத்தை உரிய முறையில் செயல்படுத்தும் என்றார்.

On Wednesday, September 28, 2016 by Unknown in    

 

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்திற்கு மூன்று நாட்கள் தினசரி 6000 கன  அடி  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தில்லியில் இரு மாநில உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

On Wednesday, September 28, 2016 by Unknown in    

புதுடில்லி : உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான கூகுள் நேற்று தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியது. இதனையொட்டி 'கூகுள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை வசதியை அந்நிறுவனம் செய்துள்ளது.

இந்திய மக்கள் நேற்று முதல் பொது இடங்களில் இந்த இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்கள், பல்கலைக்கழகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றில் இந்த வசதியைப் பெற முடியும். கூகுள் நிறுவனம் மத்திய ரயில்வேயின் 'ரயில்டெல்' நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே நாடுமுழுவதும் 53 ரயில் நிலையங்களில், இலவச 'வைபை' வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

On Wednesday, September 28, 2016 by Unknown in    

திருப்பூர்,2020–ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜா எம்.சண்முகம் நேற்று கூறினார்.புதிய நிர்வாகிகள்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் ஆண்டறிக்கை மற்றும் வரவு–செலவு கணக்கை தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியான வக்கீல் ராமமூர்த்தி அறிவித்தார். தலைவராக ராஜா எம்.சண்முகம், துணைத்தலைவராக வேலுசாமி, பொதுச்செயலாளராக விஜயகுமார், இணைச்செயலாளராக சம்பத்குமார், பொருளாளராக மோகன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக குமார், கொண்டசாமி, நவமணி, சின்னசாமி, ஆனந்த், துரைசாமி, குமார், என். பழனிச்சாமி, சோமசுந்தரம், மகேஷ், சண்முகம், ராஜேந்திரன், அருண் ராமசாமி, செந்தில்குமார், கோவிந்தராஜூ, முருகேசன், கே.ராமசாமி, ராமசுவாமி, கருணாநிதி, வேலுசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ரூ.1 லட்சம் கோடி

இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் ராஜா எம்.சண்முகத்திடம், முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல் பொறுப்புகளை ஒப்படைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் தலைவர் ராஜா எம்.சண்முகம் பேசியதாவது:–உழைப்பால் உயர்ந்த ஊர் திருப்பூர். தொழில் வளர்ச்சி பெற்ற இந்த ஊருக்கு நம்மால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில், தொழிலாளர் நலன், சமுதாயம் ஆகிய மூன்று வகையான பார்வைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில் பார்வையில் திருப்பூரில் பின்னலாடை வாரியம் அமைப்பது, டிசைனர் ஸ்டூடியோ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். தொழிலை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்ல டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு, பயிற்சி கூடம் அமைக்கப்படும்.தொழிலாளர் நலன் என்ற பார்வையில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்படும். சமுதாய பார்வையில், ‘மூன்றாம் கண்’ திட்டம் விரிவுபடுத்தி நகர பாதுகாப்பு பலப்படுத்தும் வகையில் மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தற்போது ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் நடக்கிறது. 2020–ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முடிவில் பொதுச்செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

On Wednesday, September 28, 2016 by Unknown in    

திருப்பூர்,புதுப்பட திருட்டு வி.சி.டி.க்களை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த படங்களை திருட்டு வி.சி.டி.க்களாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று பதிவிறக்கம் செய்வது மற்றும் திருட்டு வி.சி.டி. பிரச்சினைகளால் இந்த தொழில் நசிந்து வருகிறது. திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் ஆன்–லைன் மூலம் புதியபடங்களை பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்கள் உதவியை பயன்படுத்தி தடுப்பதோடு, திருட்டு வி.சி.டி.க்களாக விற்பனை செய்வதையும் தடுத்து அந்த செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

On Wednesday, September 28, 2016 by Unknown in    

பல்லடம்பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் முற்றுகைபல்லடம் அருகே சாமளாபுரம், பூமலூர், பள்ளிபாளையம், வலையபாளையம், கிடாத்துறை புதூர், பரமசிவம்பாளையம், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் கடந்த 11–ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 18–ந் தேதி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வந்து சேரவில்லை.அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்லடத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அத்துடன் அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் செந்தில்குமரனிடம், இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பரபரப்புஅதற்கு செயற்பொறியாளர் செந்தில்குமரன் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறது. நாங்களும் ஆய்வு செய்து வருகிறோம். பெரியகுமாரபாளையத்தில் வாய்க்காலை அடைத்து உங்கள் பகுதிக்கு தண்ணீர் வர திறந்துவிடப்படும். நாளை (இன்று) காலை உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

On Wednesday, September 28, 2016 by Unknown in    

திருப்பூர்பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றுமாலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள பி.எஸ்.என்.எல்.மெயின் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார்.பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளை தலைவர் குமாரவேல், செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு தொலை தொடர்பு தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் விஸ்வநாதன், கிளை செயலாளர் ரமேஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.