Tuesday, February 20, 2018

On Tuesday, February 20, 2018 by Tamilnewstv   
திருச்சி நாகமங்கலம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் 33வது பள்ளி ஆண்டு விழா  குருகுல முதல்வர் யூஜின் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூஃப்லைன்ஸ், நாகமங்கலம் பங்குத் தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு, மனிதவிடியல் மோகன் ஆகியோர் கலந்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பல்வேறு அறிவுரை களை வழங்கினார்கள்.

இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் அன்பரசன் உட்பட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
On Tuesday, February 20, 2018 by Tamilnewstv in ,    
பிஷப்ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு  பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி இன்று துவங்கியது.

 இப்போட்டியை ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை  இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி அன்று மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற  வீரா்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய கால்பந்து வீரர் லெட்சுமணன் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.
On Tuesday, February 20, 2018 by Tamilnewstv   

 திருச்சி 17.2.18
திருச்சிராப்பள்ளி விடுதலைசிறுத்தை கட்சியின்சார்பாக கட்சியில்இணைந்த தொழிலதிபர் எம்.கே முருகன்அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன்மஹாலில் நடைபெற்றது
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலை சிறுத்தை சட்சியில் தம்மை ;இணைத்துக்கொண்ட தொழிலதிபர் எம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அவர்ர்களுக்கு அறிமுக விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்திருச்சி நெறியாளர் வேலு குணவேந்தன் வழக்கறிஞர் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன்முன்னிலை வகுத்தனர்தொழிலாளர்விடுதலை முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்வரவேற்புரையாற்றினார்.அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்)புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்);கனியமுதன(தொகுதிசெயலாளர்);சுபாசதீஷ்(தொகுதிசெயலாளர்)நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினர்.நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன்பொறியாளர் அணி சந்திரசேகரன்(மாநில துணை செயலாளர்)கிருஷ்ணா மதன்ராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேற்கு தொகுதி செயலாளர் சதீஷ் வழக்கறிஞர் நன்றியுரையாற்றினார்.


   

Monday, February 05, 2018

On Monday, February 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 5.2.18


ஏஆர்எஸ்ஸ்டீல் இன்று முதன்மையான பவர்பாண்ட் ஸ்டீலை அறிமுகப்படுத்தியது
நேகா அரோரா கூறுகையில் உயர் தரமுள்ள ஸ்டீல் புராடக்டுகளை தயாரிக்கும் முன்னணி கம்பேனியான ஏ ஆர் எ ஸ் புரட்சிகரமான ஸ்டீலான கம்பியை தமிழ்நாட்டு விற்பனைக்கு இதை சிம்டி அஷ்வனி குமார் பாட்டியா இன்று அறிமுகப்படுத்தினார் என்றும் நாளுக்கு நாள் பெருகி வரும் சிறந்த ஸ்டீல் தேவையை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்துகிறது என்றும் ஸ்மார்ட் சிட்டி உ ருவாக்கும் போன்ற புராஜக்டுகள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கம்பேனி தயாரித்துள்ளது என்று கூறினார்
On Monday, February 05, 2018 by Tamilnewstv   
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
கடந்த 27.01.2018 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கூட்டத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அந்தக் கூட்டத்தில் மருத்துவ கல்லுரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத்திருத்த மசோதாக்களுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகட்சி சார்பாக  மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அருள் , பொருளாளர் சந்தன மொழி  மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ தண்டபாணி, நீலவாணன்(தெற்கு மாவட்ட செயலாளர் ) மாவட்ட துணை செயலாளர் சரவணன், தில்லைநகர் பகுதி செயலாளர் குணா, செம்பட்டு மாரிமுத்து, காந்தி (மாநகர மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்
மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்ககள் வெல்ல மண்டி சோமு, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tuesday, December 26, 2017

On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமிதிருக்கோவில் : 














 பகல் பத்து 8-ம் நாள் - இன்று ஸ்ரீநம்பெருமாள்  ஆண்டாள் முத்துசாயக்கொண்டை ,  இரத்தின அபயஹஸ்தம் , முத்து சரம், வெள்ளை மகராண்டி , அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி மாநகர காவல் ஆணையர்அறிவிப்பு

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி
பரமபதவாசல் திறப்பு திருவிழா 28.12.2017 இரவு 1200 மணிமுதல் 29.12.2017 இரவு வரை

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த வருடம் 19.12.2017-ம் தேதி முதல் 28.12.2017-ம் தேதி வரை பகல்பத்து திருவிழாவாகவும் 29.12.2017-ம் தேதி முதல் 08.01.2018-ம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 29.12.2017-ம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் திருவரங்கம் வரவுள்ளார்கள். பரமபதவாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு கீழ்க்கண்ட வழிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்டுகிறது.
பரமபத வாசல் திறப்பிற்கு முன்பு

29.12.2017-ம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு பக்தர்கள் இரவு
12-மணிக்கு மேல் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் மேற்கு புறமாக அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக முன்னுரிமை அடிப்படையில் கட்டணமில்லா தரிசனத்திற்கு செல்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதிக்கப்படும் பக்தர்கள் பவித்திர மண்டபம் வாகன மேடை துரைப்பிரகாரம் உள்கொடை மண்டபம் பிரசன்ன முன்மண்டபம் ஆகிய இடங்களில் சென்று அமர வேண்டும்.
ரெங்கா ரெங்கா கோபுரத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக சந்தன மண்டபம் செல்ல ரூ.3000ஃ-க்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள் சிறப்பு பணியாளர்கள் அர்ச்சகர்கள் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
ரெங்கா ரெங்கா கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக கருவூலமேடை செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுள்ள  உபயதாரர்கள் மற்றும் கிளிமண்டபம் செல்ல ரூ.500ஃ-க்கான கட்டண நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மற்றும் சிங்கிள் ஸ்பிரில் பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக அமைக்கப்பட்டுள்ள மூன்று வழிகளிலும் 29.12.2017-ம் தேதி இரவு 1200 மணிமுதல் அதிகாலை 0200 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கிழக்குவாசல் வழியாகவோ (வெள்ளைக் கோபுரம்) வடக்கு வாசல் வழியாகவோ பரமபதவாசல் திறப்பிற்கு முன்பு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

-2-

பரமபத வாசல் திறப்பிற்கு பின்பு

பரமபதவாசல் திறப்பிற்கு பின்பு ரெங்கா ரெங்கா கோபுரம் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக  சொர்க்கவாசல் மட்டும் செல்பவர்கள்; கார்த்திகை கோபுரம் ஆர்யபடாள்; கோபுரம் பவித்ர மண்டபம் துரைப்பிரகாரம் வழியாக பரமபத வாசல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ரெங்கா ரெங்கா கோபுரம் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக மூலவர் முத்தங்கி சேவைக்கு கட்டணமில்லா தரிசனத்திற்கு செல்பவர்கள் கார்த்திகை கோபுரம் பிரசாத ஸ்டால் பின்புறமுள்ள ஸ்ரீ ஜெயந்தி மண்டபம் ஆரியபடாள் கோபுரம் நாழிகேட்டான் கோபுரம் வழியாக வரிசையாக அனுப்பப்படுவார்கள். மூலவர் முத்தங்கி சேவை முடிந்து தொண்டைமான் கேட் வழியாக வெளிப்புறம் சென்று பரமபதவாசலை அடைய வேண்டும்.
ரெங்கா ரெங்கா கோபுரம் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக கோவில் பணியாளர்கள் சிறப்பு பணியாளர்கள் அர்ச்சகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பரமபதவாசல் திறப்பிற்கு பின்பு கிழக்கு வாசலில் (வெள்ளைக் கோபுரம்) தென்புறமாக அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக ரூ.250ஃ- கட்டண தரிசனத்தில் மூலவர் முத்தங்கி சேவைக்கு செல்பவர்கள் வெளிமணல் வெளிஉள்மணல் வெளிஆரியபடாள்; நுழைவுவாயில்பிரசாத ஸ்டால் பின்புறமுள்ள ஸ்ரீ ஜெயந்தி மண்டபம் ஊஞ்சல் மண்டபம் மடப்பள்ளி நாழிகேட்டான் நுழைவுவாயில் வழியாக மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் மூலவர் முத்தங்கி சேவை முடிந்த பின்னர்  தொண்டைமான் கேட் வழியாக பரமபதவாசல் செல்லவேண்டும்.
பரமபதவாசல் மற்றும் மூலவர் முத்தங்கி சேவை முடிந்து அனைத்து பக்தர்களும் வெள்ளைக் கோபுரம் வழியாக வெளியே செல்லவேண்டும்.
பரமபதவாசல்  திறப்பிற்கு பின்பு 29.12.2017-ம் தேதி காலை 06.00 மணிக்கு மேல் வடக்கு வாசல் வழியாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் வெள்ளை கோபுரம் வழியாக சேவார்த்திகள் மட்டும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு நம்பெருமாள் உற்சவர் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் முடிந்தபின்பு வெள்ளை கோபுரம் (கிழக்கு வாசல்) வழியாக வெளியே செல்ல வேண்டும். 
பரமபதவாசல் திறப்பு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் காவல்துறை மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டுத்துறை  அலுவலரிடம் முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும்.


திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் 
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 29.12.2017 அன்று நடைபெறுவதை முன்னிட்டு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

பேருந்து போக்குவரத்து மாற்றம் : (28.12.2017-ம் தேதி இரவு 08.00 மணி முதல்  29.12.2017- ம் தேதி மதியம் 02.00 மணி வரை)

மத்திய பேருந்து நிலையம்ää சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள்
அண்ணாசிலை - ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - லு ரோடு சந்திப்பு - சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு - நெல்சன் ரோடு - சிங்க பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் - நெல்சன் ரோடு - காந்திரோடு - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை -  அண்ணாசிலை - சத்திரம் பேருந்து நிலையம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடிää மணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகர பேருந்து வழித்தடங்கள்.

அண்ணாசிலை - ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - லு ரோடு சந்திப்பு - சோதனை சாவடி எண்.6 - கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம்  - பஞ்சக்கரை ரோடு - நெல்சன் ரோடு - சிங்க பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் - நெல்சன் ரோடு - காந்திரோடு - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை -  அண்ணாசிலை - சத்திரம் பேருந்து நிலையம்.

பெரம்பலூர்ää அரியலூர்ää துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகர பேருந்துகள் வழக்கமான பாதை வழியாகவே சென்று வர வேண்டும்.

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்

முக்கிய நபர்களின் வாகனங்கள்:
அண்ணாசிலை - மாம்பழச்சாலை - அம்மாமண்டபம் ரோடு - ராகவேந்திரா ஆர்ச் -  பீட்-42 - திருவள்ளுவர் தெரு - மேற்கு சித்திரை வீதி வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.


வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் :
ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - லு ரோடு சந்திப்பு - சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு - வடக்கு மொட்டை கோபுரம் - வடக்கு சித்திரை வீதி வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்:


கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள்
காவல் சோதனைச்சாவடி எண்.7 - அன்பிலார்சிலை சந்திப்பு - அண்ணாசிலை வழியாக தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் பேருந்துகளை எடுத்து செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குவரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்
காவல் சோதனைச்சாவடி எண்.7 - அன்பிலார்சிலை சந்திப்பு - அண்ணாசிலை - ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - ‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு - மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

மதுரைää புதுக்கோட்டைää தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாபேருந்துகள்
பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு - ‘லு” ரோடு சந்திப்பு - காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

மதுரைää புதுக்கோட்டைää தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு - ‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு வழியாக மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.


சென்னைää அரியலூர்ää சேலம்ää மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள்:

‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.



சென்னைää சேலம்ää அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு - மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில்  நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.


வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு ஆட்டோவில் வருகை தரும் வயதானவர்கள் ஃ மாற்றுத்திறனாளிகள்

திருவானைக்காவல் சந்திப்பு - காந்தி ரோடு - தேவி தியேட்டர் சந்திப்பு - வடக்கு தேவி ரோடு - கீழசித்திரவீதி வந்து அவர்களை இறக்கிவிட்டு பின்னர் வடக்கு தேவி ரோடு - தெற்கு தேவி ரோடு - வீரேஸ்வரம் - அம்மாமண்டபம் ரோடு - மாம்பழச்சாலை வழியாக செல்ல வேண்டும். 

உத்திரை வீதியில் குடியிருப்பவர் வாகனங்கள் :

உத்திரை வீதியில் குடியிருப்பவர்கள் 28.12.2017ம் தேதி முதல் 29.12.2017ம் தேதி வரை தங்களது வாகனங்களை வடக்கு சித்திரைவீதியில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.



கனரக சரக்கு வாகன போக்குவரத்து மாற்றம் : ( 28.12.2017 ம் தேதி மதியம் 02.00 மணி முதல் 30.12.2017 ம் தேதி காலை 06.00 மணி வரை )
 
கனரகää சரக்கு வாகனங்கள்

கரூர் மார்க்கத்திலிருந்து திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் கனரகää சரக்கு வாகனங்கள் குளித்தலை - முசிறி - ழே.1 டோல்கேட் - சென்னை புறவழிச்சாலை வந்தடைந்து தொடர்ந்து தஞ்சை புதுக்கோட்டை மார்க்கத்தில் செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து கரூர் மார்க்கமாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வராமல் “லு” ரோடு சந்திப்பு - ழே.1 டோல்கேட் - முசிறி வழியாக செல்லவேண்டும்.
On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி டிகளத்தூர் தலைமுறைகளை கடந்து அரியவகை மூலிகைகளை பாதுகாக்கும் விவசாயி  மோகன கிருஷ்ணன் எயிட்ஸை கட்டுப்படுத்தும் மூலிகையும் உண்டு என விளக்கம் 
உலகில் நாளுக்கு நாள் உருவாகும் புதிய வகையான நோய்களுகள் என்று கருதகூடிய பல நோய்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு நம்முடைய முன்னோர்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டு அதற்க்கு உரிய மூலிகை மருந்துகளை கொண்டு தங்களை தாங்களே குணப்படுத்தி, அந்த மூலிகைகளையும் பாதுகாத்து வந்தனா். 
ஆனால் தற்போது பெருகி உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கிய இடம் மருந்துகளுக்கு தான் அதிலும் தற்காலிகமாக ஒரு வலியை, ஒருநோயை கட்டுப்படுத்த கூடிய ஆங்கில மருந்துகள் மனிதனின் வாழ்நாளை குறைத்துவிட்டது என்றே கூறலாம் இயங்கையோடு, இயற்கை மூலிகைகளை கொண்டு வாழ்ந்த முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல நுறூ ஆண்டுகளை கடந்தும் வாழ்ந்தும் வந்துள்ளனா்.
இன்றை ஆங்கில மருத்துவத்திற்க்கு மத்தியிலும் தன்னுடைய தோட்டத்தில், வீட்டில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைகளை பாதுகாத்து வளா்த்து வரும் விவசாயி மோகனகிருஷ்ணனை  நேரில் சந்தித்த போது….
திருச்சியிலிருந்து சுமார் 40 கிலோமீ தொலைவில் உள்ள எதுமலையடுத்த டிகளத்தூர் கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் ஆயிரகணக்கான மூலிகைகளை பாதுகாத்து வருகிறார். தமிழகத்தில் எங்கும் கிடைக்காத பல மூலிகைகள் இவரிடம் கிடைக்கும் என்றால் அது ஆச்சரியமாக தான் உள்ளது. 
இதன் பராமரிப்பு பற்றி கூறுகையில் என்னிடம் எல்லா வகையான மூலிகைகளும் உள்ளது. அழிந்து கொண்டிருக்கும் மூலிகைகள், அழிந்துவிட்ட மூலிகைகள், என்று என்னுடைய முப்பாட்டன் காலத்தில் இருந்து இதனை நாங்கள் பராமரித்து வருகிறோம். அவா்கள் எல்லாம் வைத்தியா்களாக இருந்தார்கள். அவா்களுக்கு பின் நான் இந்த மூலிகைகளை வைத்து பராமரித்து வருகிறேன். தற்போது தண்ணீருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பல மூலிகைகள் தண்ணீர் இல்லாமல் வளரக்கூடியது தான், இருந்தாலும் கொஞ்சம் தண்ணீர் இருந்தால் வெயிலிலும் பனியிலும் வாடாமல் நன்றாக வளரும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தாவரவியல் பற்றி படிக்கும் மாணவா்கள் அதிகம் என்னிடம் தான் மூலிகைகளை ஆராய்ச்சிகாக கொண்டு செல்வார்கள். 300க்கும் மேற்பட்ட அழிந்து கொண்டிருக்கும் மூலிகைகளை நான் பராமரித்து வருகிறேன். தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் நிரப்பி அதனை ஊற்றி காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. கிணற்றை ஆழப்படுத்த மானியம் வழங்கினால் நான் இந்த மூலிகைகள் அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார். 
தற்போது வெண் நாவல், மர மஞ்சள், அதிமதுரம், வெண் தூதுவளை, வெண் கொழிஞ்சி, சோழ வெங்கை(மரம்), தங்காயில்(மரம்), டிவிடிவி(மரம்), கும்பிலியம்(மரம்), உள்ளிட்ட பலவை தமிழகத்தில் கிடைப்பதில்லை, அவை அனைத்தும் நான் வைத்திருக்கிறேன். அதேபோன்று ஈஸ்வரமூலி(பெருமருந்து கொடி) எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மூலிகை, நித்திகல்யாணி கேன்சரை குணப்படுத்தும் மூலிகை, சர்பகந்தா பாம்பு கடி மற்றும் விஷ கடிக்கு, ஒடுவன் தாவர பூச்சிகொல்லி ராசாயன பூச்சிகொல்லிகளை தெளிப்பதைவிட இதன் இலையை அரைத்து தெளித்தால் பூச்சிகள் இறந்துவிடும். இந்த இலையை மனிதா்கள் அறைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் போதும் அவா்கள் உடனடியாக இறந்துவிடுவார்கள். மேலும் மெல்லிபெரா என்று சொல்லகூடிய வேலி மரம் விவசாயிகளின் தோழன் என்றே சொல்லலாம் இதில் வேலி அமைத்தால் யானை கூட நிலத்திற்க்குள் நுழைய முடியாது. ஆஸ்துமா கொடி(நெஞ்சருப்பான்) – காசநோய்க்கு உகந்த மருந்து, வெள்ள அருகு – சளி, இருமலுக்கு சிறந்தது, வெள்ள எருக்கு சொறி சிறங்கு உள்ளிட்டவற்றிற்கு மிக சிறந்த மருந்து. தற்போது இதுபோன்ற சில முக்கிய மூலிகைகள் கிடைப்பதில்லை. எனவே தான் இந்த மூலிகைகளை பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறேன். இப்போது நான் இந்த பணியை செய்து வருகிறேன். ஆனால் எனக்கு பின்னால் இதை யார் செய்ய போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஏன் என்றால் இதில் பெரிதாக எந்தவித வருமானமும் இல்லை. அக்கம்பகத்தில் உள்ள விவசாயிகள் யாரும் பயிரிடுவதில்லை. ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து அதனை விற்பதில் தான் தங்களுடைய முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். மண்ணுக்கு இருந்த தேவை மாறி இன்று கறிக்கு தேவை அதிகமாகிவிட்டது. ஆடு, கோழியில் தான் நல்ல லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார். மூலிகைகள் பாதுகாக்கபட வேண்டும் நல்ல உள்ளம் கொண்டவா்கள் யாராவது இருந்தால் எங்களுடைய கிணற்றை ஆழப்படுத்தி கொடுத்தால் போதும் தற்போது 13 மீட்டர் ஆழம் இருக்கு, அதை 30 மீட்டராக உயர்த்தி கொடுத்தால் போதும் தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருக்கும் இந்த மூலிகைகளையும் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார். மூலிகைகளை காப்பாற்ற முன்வாருங்கள், எதிர்காலத்தில் நம்முடைய மூலிகைகளை கொண்டு இயற்கை மருத்துவத்திற்க்கு மாறுங்கள் என்று அறைகூவல் விடுகிறார் விவசாயி மோகன கிருஷ்ணன் .

பேட்டி ....மோகன கிருஷ்ணன் 
On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி மண்ணச்சன்னல்லூர் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பூமிநாதர்  கோவிலுக்கு வாங்க 

இந்துக்களின் ஐதீகப்படி ஒவ்வொரு செயல்களுக்கும், ஒவ்வொரு நோய்களுக்கும், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் என்று பல கோவில்கள், தெய்வங்கள் என்று தேடி அலைந்து வழிபடும் கலாச்சாரம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை. 
அப்படிப்பட்ட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று நிலம்(மண்) தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகக் கூறப்படும் திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில் மிகச்சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக பக்தர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 
18ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு என்று ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. சிவனுக்கு என்று பல பெயர்கள் உண்டு, அதில் இங்கு எடுத்துள்ள அவதாரம் பூமிநாதன் என்ற அவதாரம் தான். 
அந்தகாசுரன் என்று சொல்லப்படும் ஒரு அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்து வந்துள்ளான். அரக்கனின் தொல்லையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்த தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டுள்ளனர். தேவர்களின் கோரிக்கைக்கு இணங்கச் சிவபெருமான் அரக்கனை அழித்தபோது அவருடைய நெற்றியிலிருந்து ஒரு துளி வியர்வையைப் பூமியில் விழுந்து பூதமாக மாறியது. அந்தப் பூதம் யுத்த களத்தில் கிடந்த உடல்களை தின்று பசி அடங்காத பூதம் தன்னுடைய பசியை தீர்த்து வைக்க வேண்டும் என்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. அதன் முன் தோன்றிய சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்று கூறியவுடன் இந்த மூன்று உலகங்களையும் அழிக்கும் திறன் எனக்கு வேண்டும் என்று கேட்டவுடன் சிவபெருமான் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வரத்தை அளித்தார். 
முதலாவதாகப் பூமியை விழுங்க முயற்சித்த பூதத்தை தேவர்கள் தடுத்து நிறுத்தி பூதத்தை கீழே தள்ளி குப்புறப்படுக வைத்து பூதத்தை அழுத்தி பிடித்துள்ளனர். இதனால் தன்னுடைய பசிக்கான உணவைத் தேடி அலைய முடியாததால் தனக்கான உணவை நீங்களே வழங்க வேண்டும் என்று முறையிட்டது. எனவே முதலாவதாக விழுங்கும் 45 தேவர்களின் சக்தி பூதத்தை அழுத்திப் பிடித்திருக்கும் என்றும், உனக்கான உணவு பண்டங்கள் பூமியில் உள்ள மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் இருந்து வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும் என்றும், வரம் அளித்தனர். மேலும் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 36 நிமிடங்கள் நீ எழுவதற்கு அனுமதி அளிக்கிறோம் என்றும், இன்று முதல் வாஸ்துபுருஷன் என்று அழைக்கப்படுவாய் என்றும் வரம் அளித்தனர். அதற்கு நன்றிக் கடனாக பூதமாகிய நீ பூமியில் எழுப்பப்படும் வீடு, கட்டிடங்களை எந்தவித குறைபாடுமின்றி, தங்கு தடையில்லாமல் முடித்துத் தர வேண்டும் என்றனர். அந்தப் பூதத்தின் முகம் இந்த மண்ணில் புதைந்ததால் தான் அது மண்ணச்சநல்லுர் என்று அழைக்கப்படுவதாக வரலாறு கூறப்படுகிறது. 
தற்போது இந்தக் கோவிலில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக உள்ளார். பெரும்பாலான கோவில்களில் பைரவர் தெற்கு நோக்கி அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தக் கோவிலில் மேற்கு பார்த்த திசையில் அமர்ந்திருக்கிறார். 
இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் வீடு கட்ட துவங்கும் முன்பும், நிலம் வாங்கும் முன்பு, நிலத்தில் வடகிழக்கு திசையில் இருந்து ஒருகைபிடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வாஸ்து நாள் அன்று பூமிநாதர் கோவிலுக்கு அந்த மண்ணை எடுத்து வந்து தன்னுடைய பெயரில் அர்ச்சனை செய்து, அந்த மண் முடிப்புடன் கருவறையை 36 முறை சுற்றிவந்து முகப்பு மண்டபத்தில் கட்டிவிட வேண்டும். வீடோ, கட்டிடமோ கட்ட துவங்கும் போது மீண்டும் மண்டபத்தில் கட்டிய மண் முடிப்பைக் கோவில் வளாகத்தில் உள்ள வில்வ மரத்தில் கொட்டிவிட்டு வன்னிய மரத்தின் கீழ் உள்ள மண்ணில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்துச் சென்று வடகிழக்கு மூலையில் போடுவதால் தங்கு தடையின்றி கட்டிட பணிகள் நிறைவடையும் என்று கூறுகின்றனர். 
மேலும் நிலம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்தாலும், அந்த நிலத்தில் இருந்து இடத்திற்கு சொந்தமான இரத்த உறவுகள் ஒருபிடி மண்ணுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் வழக்குகள் அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும், அப்படிக் கொண்டு வரும் நிலம் தொடர்பான பிரச்சனையில் உண்மைத் தன்மை இல்லாமல் இருந்தால் சிவன் சொத்தை அடைய நினைத்தால் சர்வநாசம் என்று கூறுகின்றனர். 
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலைத் தேடி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்று பகுதிகளில் கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, சேலம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களுடன் வந்து செல்கின்றனர். இன்றுவரை நிலம் தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கோவிலுக்கு வந்தவர்கள் சிவனின் அருளினால் நன்மையை மட்டுமே பெற்று சென்றுள்ளதாக கூறுகின்றனர்.


பேட்டி .....சிவத்தொண்டன்