Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்.
நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.


திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக விளங்கி வருவதுடன் அதற்கான தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதோடு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வகையில் மணப்பாறையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு வகையான வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி அபாராதம் விதித்தனர். இதுமட்டுமின்றி பலருக்கும் முகக்கவசம் வழங்கியதோடு, சிலருக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
காசநோய், தொழுநோய் உள்ளிட்ட பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள்.
மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா ஊரடங்காக இந்த கால கட்டத்தில் காசநோய், தொழுநோய், ஆட்கொல்லி நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களும் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதே போல் மணப்பாறை பகுதியில் கொரோனா முடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு தாசில்தார் தமிழ்கனி அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கினார்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் 

மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. வைதேகி மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.   மேலும் பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகி திரு.ஜெயகுமார் கலந்து கொண்டார்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
DYFI சார்பில் அரசாணை51ஐரத்துசெய்ய வயிற்றில் ஈரத் துணிகட்டி போராட்டம்
திருச்சி மாநகரில் (DYFI)  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற கோரியும்

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான தண்டனை வழங்கிட கோரியும் மாநிலம் முழுவதும் வயிற்றில் ஈர துணி கட்டி முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக திருவெறும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பா.லெனின் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையிலும்
பாலக்கரை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் S.சுரேஷ் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையிலும் கீழ்புதூரில் நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் இரட்டமலை தலைமையிலும் நடைபெற்றது.

Tuesday, May 12, 2020

On Tuesday, May 12, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் அதிமுக சார்பாக 500 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது..!

கொரோனாவின் நோய் தொற்று பரவல் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, 


 
இதனால் மக்களுக்கு அன்றாட பொருட்களை பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நிவாரணங்களை வழங்கி வருகின்றன, தமிழகத்தில் அதிமுக சார்பாக பல்வேறு இடங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது தற்பொழுது சமயபுரம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக சமயபுரம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, 


 வார்டு வாரியாக சுமார் 500 பேருக்கு இன்று வழங்கப்பட்டது, இதில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டது ,மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

 இந்நிகழ்வில் சமயபுரம் பேரூராட்சி  தலைவர் சின்னையன், நகர செயலாளர் சம்பத்குமார், நகரத் துணைச் செயலாளர் மனோகரன், ராஜேந்திரன், மணிகண்டன், மணிராஜ், குப்புசாமி, கண்ணன், வேல்முருகன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி

  கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகளாவிய பூட்டுதல் காரணமாக மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டனர்.

 கொரோனா பாதிப்பினால் உலகளவில் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

 அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த பலர் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.இந்த வகையில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த சுமார் 400 பயணிகள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

 இந்நிலையில் மலேசியாவில் தவித்துவந்த 177 தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, 177 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று (மே 9) இரவு 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. 

  திருச்சி வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இந்தப் பரிசோதனை பணியை நேரில் பார்வையிட்டார்.

 தவித்த 177 தமிழர்கள் திருச்சி வந்தடைந்தனர்அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 

 எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 40 நாள்களுக்கு மேலாக மலேசியாவில் தவித்துவந்த இவர்கள் தமிழ்நாடு திரும்பியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

  மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 
962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்பு 30 பேருந்துகளில் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்

 நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்
  

 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில்  வாழும் புலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர்.
  
  ஊரடங்கு உத்தரவால் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதால் வெளிமாநில தொழிலாளர்களைப் அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில் நிலை ஏற்பட்டு செய்திருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 962 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர் அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் சோதனை செய்த பின்பே வெளியே செல்ல அனுமதித்தனர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

  ரயில் நிலையத்தின் வெளியே 30அரசு பேருந்துகள் அந்தந்த மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் மூலம் ஒரு பேருந்திற்கு 25 முதல் 30நபர் வரை  என  அழைத்துச்சென்றனர் அதேபோல பேருந்தில் செல்பவர்களுக்கு குடிநீர் உணவு வைக்கப்பட்டுள்ளன இந்த பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி. நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களுக்கு அழைத்த செல்லப் பட்டனர்.

 ரயில் நிலையத்தின் வெளியே போக்குவரத்து ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் என பலரும் ரயிலில் இருந்து வரும் பயணிகளை கூட்டிச் செல்வதற்காகவும் அவர்களுக்குத் தேவையான முக கவசம், சானி டைசரை கொடுத்தனர். மேலும் ரயிலிலிருந்து  அனைவரும் சென்ற பின்பு ரயில் நிலையத்தில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
  
  திருச்சியை சேர்ந்த 29 பேர் நபர்கள் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைபடுத்திய பின்னர்  தங்களது வீடுகளுக்கு அனுப்பட உள்ளனர்.

 மேலும் மற்ற மாவட்டங்களினும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தி அசத்தும்  ஊராட்சி நடுநிலை பள்ளி.

ஆச்சரியத்துடன் பார்க்கும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள்.

              திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்டிராய்டு செல்போன் மூலமாக  ஆன் லைன் வகுப்புகளை பள்ளித் தலைமையாசிரியர் நடத்தி வருகிறார்.

     எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் தொடர் விடுமுறையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இப் பள்ளியில் கல்வி பயிலும் 6  வகுப்பில் 9 மாணவி, 7 மாணவர்களும்,  7 ம் வகுப்பில் 2 மாணவர்களும், 6  மாணவிகளும் என 22 மாணவ மாணவிகளுக்கு   பொது ஆங்கிலம், பொது கணிதம் ஆகிய பாடங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மீட் என்ற ஆப் மூலமாக மாணவ மாணவிகளின் அன்ராய்டு செல்போன் மூலமாக  இனையதளம் வழியாக ஆன் லைன் வகுப்புகளை கடந்த ஏப்ரல் 27 ம் தேதி முதல் தினசரி காலை  10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.

         இந்த பாடங்களை பள்ளி ஆசிரியை ஒருவர் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஆசிரியர்கள் இருவர் நடத்துகின்றனர். இந்த ஆசிரிய ஆசிரியைகள் நடத்தும் பாடங்களை பள்ளித் தலைமையாசிரியர்  திருமாவளவன் தனது செல்போன் மூலமாக கண்காணித்து வருகிறார்.

      இது குறித்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் செய்தியாளரிடம் கூறியதாவது ..

                          இந்த வகுப்புகளை  மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதனை  அவரது பெற்றோர்கள், கிராம மக்கள்  ஆச்சரியப்படும் வகையில் இவ் வகுப்புகள் அமைந்துள்ளதெனவும்,  விடுமுறை காலங்களில் செல்போன்களில் எந்நேரமும் விளையாடு பொழுதைக் கழித்த குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக கல்வி கற்றலுக்காக  பயன்படுத்துவதால் பெற்றோர்கள் மட்டுமல்லாது மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்..

    திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் ஜி. கே தொழிற்பூங்கா வின் ஒரு பகுதியில் எவர்செண்டாய் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் இரும்பு தூண் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 1000 த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
  

 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் கம்பெனியிலேயே தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவை அரசு சற்று தளர்த்தியுள்ளதால், கம்பெனி மீண்டும் செயல்பட துவங்கியது.        
   

 ஆனால் பீகார், உத்திரபிரதேசம் , ஒரிசா,மகராஸ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தினைச் சேர்ந்த 122 பேருக்கு தற்போது போதிய உணவு வழங்க வில்லையெனவும், வேலை பார்த்ததற்கு உரிய  சம்பளம் தரவில்லை எனவும், தற்போது தங்குவதற்கும் இடம் தர கம்பெனி நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் கூறினார்.
    

   இது தொடர்பாக கம்பெனி நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின. போரில் கம்பெனி அலுவர்களுடன் போலீஸார் பேசியதில் விரைவில் சம்பளம் வழங்குவதாகவும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி் வருவதாகவும் , வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் கம்பெனி வளாகத்திற்கு திரும்பிச் சென்றனர்.