Friday, September 26, 2014

On Friday, September 26, 2014 by farook press in ,    
ருப்பூர்செப்.26-
ிருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான உள்கட்டமைப்புமருத்துவர்கள் வசதி கோரியும்,இங்குள்ள சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
19 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் ஏழைஎளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும்,நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வாய்ப்புள்ளது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையே.ஆனால் இங்கு தேவையான படுக்கை வசதிகள்போதுமான மருத்துவர்கள்செவிலியர்கள்ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்குத் தேவையான உபகரண வசதி இல்லை.முழு நேர மருந்தகம்ரத்த வங்கி பணியாளர் இல்லைவிபத்துக் காயம்தலைக்காய சிகிச்சை வசதி இல்லைபிணவறையில் போதிய வசதி இல்லைஇது போதாதென்று மகப்பேறு பிரிவு உள்பட அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் கையூட்டுப் பெறுவது வாடிக்கையாகிவிட்டதுஇதனால் ஏழைஎளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அரசு தலைமை மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்முறைகேடு,லஞ்சத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும்மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக உயர்த்தக் கோரியும் சனியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி கூறியுள்ளார்.
On Friday, September 26, 2014 by farook press in ,    
திருப்பூர், செப்.26-
பெரும்பான்மை மதவாத அரசியலை எதிர்கொள்ள சிறுபான்மை மதவாத அரசியல் துணை செய்யாது. இதனால் பெரும்பான்மை மக்கள் அச்சத்தின் பிடியில் தள்ளப்படுவார்கள். எனவே ஜனநாயக அரசியலின் மூலம்தான் மதவாத அரசியலை முறியடிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் கே.தங்கவேல் பேசியதாவது:
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு திருப்பூரில் மதவாத சக்திகள் செயல்பாடு அதிகரித்துள்ளன. இவற்றை உழைப்பாளி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறமதத்தினரின் வழிபாட்டு உரிமையில் தலையிட்டு இந்து மதவெறியர்கள் தகராறு செய்யும்போது, அரசு நிர்வாகம், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்காமல், சிறுபான்மை மதத்தினரை விட்டுக் கொடுத்து போங்கள் என புத்திமதி சொல்கின்றனர். அரசு நிர்வாகமே இந்து அமைப்புகளுக்கு ஒருதலைப்பட்சமாக சாய்மானமாக நடந்து கொள்கின்றனர்.
ஏதேனும் கோரிக்கை அல்லது பிரச்சனைக்காக கம்யூனிஸ்ட் கட்சியோ, இதர அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் ஏகப்பட்ட கெடுபிடி செய்யும் காவல் துறையினர், இந்து மத அமைப்புகளுக்கு அவர்களே வேண்டிய பாதுகாப்புகளைச் செய்து தருகின்றனர்.
10 சதவிகிதம் முஸ்லீம்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக மதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என கம்யூனிஸ்ட்டுகளைச் சொல்லும் இந்து மதவெறியர்கள் 80 சதவிகிதம் இருக்கக்கூடிய இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான் மதத்தை அரசியலுடன் கலக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கைக்காக அவர்கள் மதத்தைப் பயன்படுத்தவில்லை. மக்களின் மதஉணர்வை பயன்படுத்தி அரசியல் நடத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். அதில் அவர்கள் தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். எனவே இதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக இருக்கிறது.
இந்து மதவாத அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு சிறுபான்மை மத அரசியலைச் சில அமைப்புகள் கையில் எடுக்கின்றன. முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என மத அரசியலில் ஈடுபட்டால், ஒரு மத அரசியலை எதிர்க்க மற்றொரு மத அரசியல் என்று போகும்போது அது பெரும்பான்மை மக்களிடம் அச்ச உணர்வைத்தான் ஏற்படுத்தும். எனவே மத அரசியலுக்கு மத அரசியல் மாற்றாகாது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அரசியலில் ஈடுபடும்போதுதான் மதவாத அரசியலைத் தடுக்க முடியும். அதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று கே.தங்கவேல் கூறினார்.
On Friday, September 26, 2014 by farook press in ,    
நரேந்திர மோடி குறித்து உ.வாசுகி கிண்டல்
திருப்பூர்செப்.26-
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மனோகரா திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல நீண்ட வசனத்தைப் பேசிக் கொண்டிருந்த நரேந்திர மோடிபிரதமர் ஆன பிறகு எந்த முக்கியப் பிரச்சனையிலும் வாய் திறந்து பேசாமல்மன்மோகன் சிங் போல,மௌன சாமியார் ஆகிவிட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய உ.வாசுகி கூறியதாவதுஜம்மு காஷ்மீருக்கு 370சிறப்பு அந்தஸ்து இருப்பது போல குஜராத்மகாராஷ்டிராவின் சில பிரதேசங்களுக்கும் 371 பிரிவு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. 371 ஏ முதல் ஐ வரை நாகாலாந்துஅஸ்ஸாம்மணிப்பூர்ஆந்திரா,சிக்கிம்மிஜோராம்அருணாசலபிரதேசம்கோவாவுக்கும் சில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுஆனால் மோடி முதல்வராக இருந்த குஜராத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பற்றி அவரோ அவர் கட்சியோ வாய் திறந்தார்களாகாஷ்மீர் பிரச்சனையில் மட்டும் இவர்கள் 370 பிரிவை நீக்க வேண்டும் எனப் பேசுவதில் சிறுபான்மை மத எதிர்ப்பு அரசியல் செய்கின்றனர்.
இந்த அரசியல் சட்ட பிரிவு சேர்க்கப்பட்டபோது நேரு அமைச்சரவையில் சியாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்து அவரும் இதை ஏற்றுக் கொண்டார்சில காலம் கழித்து அவரே 370பிரிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்இடையில் என்ன நடந்ததுகாஷ்மீர் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்.நிலக்கிழார்களுக்கு ஒரு பைசா கூட இழப்பீடு தராமல் நிலச்சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டதுஅப்போது நிலத்தை இழந்த நிலக்கிழார்கள் இந்துக்களாக இருந்தனர்நிலம் பெற்ற ஏழை விவசாயிகள் இஸ்லாமியர்களாக இருந்தனர்காஷ்மீரில் நிலம் இழந்த நிலப்பிரபு வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் சியாமா பிரசாத் முகர்ஜி பேசினார்உள்ளே இருந்த வர்க்கப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மதரீதியான பிரச்சனையாக, 370 பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளைப் பார்த்து முன்வைக்கப்படும் கேள்வி, "இந்தியாவில் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்மக்கள் உங்களை நிராகரித்து விட்டார்கள்"என்கின்றனர்அரசியல் என்பது எம்.எல்ஏ., எம்.பிவெற்றி பெறுவது மட்டுமல்லஇந்த நாட்டின் உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில்விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான போராட்டத்தில்பெண்கள்மாணவர்கள்,இளைஞர்கள்ஒடுக்கப்பட்டதாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னே நிற்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக மனோகரா திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் போல் நீண்ட வசனம் பேசிக் கொண்டிருந்த மோடி,பிரதமர் ஆனபிறகுமன்மோகன் சிங் போல மௌன சாமியாராகிவிட்டார்நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தின் மூலம் மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளைத்தான் பாஜக அமல்படுத்துகிறதுஇது ஐ.மு.கூட்டணி 3ன் ஆட்சி என்று காங்கிரஸ் காரர்களே சொல்கிறார்கள்இடதுசாரிகள் சொல்வதும் அதுவேதான்.பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசும்பாஜகவும் ஒரே கொள்கையைத்தான் அமல்படுத்துகிறார்கள்இவர்களுக்கு வித்தியாசம் கிடையாதுஇவர்களது பொருளாதாரக் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல.
கல்வியில் காவிமயம்பொருளாதாரத்தில் கார்ப்பரேட் மயம் என பாஜக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதுஆனால் இதைப் பற்றியெல்லாம் வாய் திறந்து பேசக்கூடியவராக தமிழகத்தை ஆளும் முதல்வர் ஜெயலலிதா இல்லைஇந்த நிலையில் மக்களைத் திரட்டும் வேலையில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு உ.வாசுகி பேசினார்.
On Friday, September 26, 2014 by farook press in ,    
இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா அரசு முயற்சிப்பது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும்இது புத்திசாலித்தனமானதல்ல என்று
​​தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கௌரவத் தலைவர் 
பேராசிரியர் அருணன் கூறினார்.
திருப்பூரில் வியாழக்கிழமை
​இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது சட்டப் பிரிவும் என்ற
 சிறப்புக் கருத்தர
​ம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில்
 அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு குறித்து பேராசிரியர் அருணன் பேசியதாவதுஇந்தியாவின் சௌந்தர்ய பூமியாக காஷ்மீர் இருந்ததுஆனால் இப்போது காஷ்மீர் சிக்கலில் சிக்கி நிற்கிறது.காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது கிடையாதுஅரசியல் சட்டத்தின் 370 வது பிரிவுகாஷ்மீரை இந்தியாவுடன் இணைத்திருக்கும் முக்கியப் பிரிவாக இருக்கிறது.அதை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சொல்வது இந்திய ஒற்றுமை மீது நம்பிக்கை இல்லாமல் அதை பிளக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகும்இப்படிச் செய்வதன் மூலம் பாஜகவும்ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறோம்.ஒரே இந்தியா எனச் சொல்லி தாங்கள்தான் ஒற்றுமைக்காக நிற்பதாக பாஜவினர் பம்மாத்து செய்கின்றனர்அவர்களது நிலைபாடு புத்திசாலித்தனமானதல்ல. 370வது பிரிவை நீக்கினால் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசப் பிரச்சையாக பாகிஸ்தான் மாற்றிவிடும்பாகிஸ்தானும்பிரிவினைவாதிகளும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
370வது சட்டப் பிரிவால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலம் வாங்க முடியாது என்று கூறுகின்றனர்இன்றைக்கு பாஜகவினர் அதானிக்கும்அம்பானிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விற்றுவிட வேண்டும் என துடிக்கின்றனர்காஷ்மீரில் மட்டுமல்ல வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற உரிமை வேறு சில அரசியல் சட்டப் பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
370வது பிரிவை நீக்க வேண்டும் என்பதற்காக பெண் உரிமைபெண் சொத்துரிமை போன்ற பலபிரச்சனைகளில் வம்பாக முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள்நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33சதவிகிதம் இட ஒதுக்கீடு பற்றி மூச்சுக்கூட விடாமல் காஷ்மீரில் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள்இவர்களுக்கு பெண் உரிமை பிரச்சனையில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் காஷ்மீர் சட்டமன்றத்திலே இப்போதே குரல் கொடுக்கலாமே?
370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது வரலாற்று கண்ணோட்டத்திலும்மாநில சுயாட்சிக் கண்ணோட்டத்திலும் தவறானதுமக்கள் ஒற்றுமை ஓங்க வேண்டும்தேச ஒற்றுமை வளர வேண்டும் என விரும்புவோர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார் பேராசிரியர அருணன்.
மதசார்பின்மை அவசியம்
"இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மைஎன்ற தலைப்பில்மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின
​ர்​
மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவதுநம் நாட்டில் மதச்சார்பின்மை என்பதை பலரும் தவறாக அர்த்தம் கொள்கின்றனர்எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்று செயல்படுகின்றனர்ஆனால் மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களில் இருந்தும் அரசும்அரசியலும் விலகி இருப்பது என்றுதான் அர்த்தம்இன்று 
​செவ்வாய் கிரகத்துக்கு ​
மங்கள்யா
​ன்
 விண்கலம் அனுப்பும் சாதனையை இந்திய விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள்.அந்த இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் மதநம்பிக்கை உடையவர்அவர் மதநம்பிக்கை கொண்டிருப்பது பிரச்சனை இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் விண்கலம் செலுத்தும்போதுஅவர் திருப்பதி கோயிலுக்குச் சென்று அந்த ராக்கெட் மாதிரியை வைத்து வழிபாடு நடத்திவிட்டு வருவது சரியல்லஇஸ்லாமியகிறிஸ்துவ,புத்தசீக்கிய மத நம்பிக்கை இருப்பவர்கள் இதுபோல் செய்தால் சரியாக இருக்குமாஅரசு செலவில் அரசுத் துறையில் செயல்படுத்தும் ஒரு திட்டத்தில் யாருடைய மதநம்பிக்கையையும் பயன்படுத்தக் கூடாது.
இன்று மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மதச்சார்பின்மை மிகப்பெரிய கேள்விக் குறியாகி நிற்கிறதுமதச்சார்பின்மை பாதுகாக்கப்பட்டால்தான் நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க முடியும் என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.
தத்துவப் போராட்டம்
அறிமுக உரை ஆற்றிய மார்க்சிஸ்ட் ஆசிரியர்குழு உறுப்பினர் பேராசிரியர் சந்திரா கூறியதாவதுதிராவிட இயக்கம் இன்றைக்கு தத்துவார்த்தரீதியாக தோல்வி அடைந்து செயல்பட முடியாத நிலையில் போய் நிற்கிறதுசாதியமதவாத எதிர்ப்புப் போராட்டத்தைத் தத்துவார்த்தரீதியாக நடத்தக்கூடிய வல்லமை கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது.
ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் செயல்படும் பாஜக ஆட்சி கல்வியை இந்தியமயமாக்க வேண்டும் எனச் சொல்லி இந்து மயம் ஆக்க முயற்சிக்கிறதுகல்வித்துறையில் அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான கல்வியைக் கொடுக்க முயல்கின்றனர்மிக நுணுக்கமாக சின்னச்சின்ன விசயங்களில் இந்துத்துவ சக்திகள் தங்கள் கருத்தைத் திணிக்கின்றனர்.
​ ​
இதற்கு எதிராக சரியான நிலைபாட்டை சுயமாக கற்றுத் தெரிந்து செயல்பட மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.
On Friday, September 26, 2014 by Unknown in ,    
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின்போது ஆபாச நடனம் ஆடியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் அரசு வக்கீல் கந்தசாமி தெரிவித்தார்.
மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய் துள்ளார். அதில் கூறப் பட்டுள்ளதாவது:–
கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் வடஇந்திய நடிகர்–நடிகைகள் கலந்து கொண்டு ஆபாச நடனம் ஆடினர். அவர்களது செயல்பாடு பார்த்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இது கலாச்சாரத்திற்கு எதிரானது.
இதுகுறித்து நடவடிக்கை கேட்டு போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் கந்தசாமி ஆஜராகி, மனுதாரர் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருபாகரன் மனு மீதான விசாரணையை முடித்து வைத்தார்.
On Friday, September 26, 2014 by Unknown in ,    
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவி இன்று உண்ணாவிரதம்
மதுரையில் இன்று சட்டக் கல்லூரி மாணவி நந்தினி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந் தார்.
மதுரை சட்டக்கல்லூரியின் 2–ம் ஆண்டு மாணவி நந்தினி. இவர் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார். இதற்காக பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று சட்டக்கல்லூரி வளாகத்தில் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பூரண மது விலக்கை வருகிற 2–ந் தேதிக்குள் அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வரும் மாணவி நந்தினியை சக மாணவ–மாணவிகள் பாராட்டினர்.
On Friday, September 26, 2014 by Unknown in , ,    

உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்
On Friday, September 26, 2014 by Unknown in ,    
babanasamஅகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட் டும். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். குடும்பத்துடன் வருபவர்கள் தவிர கள்ளக்காதல் ஜோடிகளின் புகலிடமாகவும் இது திகழ்கிறது. மாலை 5 மணிக்கு மேல் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வனத்துறையினர் 2 பேர் கீழே இறங்கி வந்தனர். அப்போது அகஸ்தியர் அருவிக்கு செல்லும் மெயின் சாலையில் நீண்ட நேரமாக ஒரு பைக் நிற்பதை கவனித்தனர். அதன் அருகில் யாரும் இல்லாததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யாராவது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பைக்கை இங்கு விட்டுச் சென்றனரா என்ற பதைபதைப்புடன் அவர்கள் பழைய பாதை படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்று தேடினர்.
அப்போது ஒரு மறைவிடத்தி லிருந்து �சிணுங்கல்� சத்தம் கேட்கவே அதிர்ச்சியுடன் சென்று பார்த்தனர். அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்தபடி சிரித்து பேசிக்கொண்டிருந் தார். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் திடுக்கிட்டு எழுந்து வந்தனர். அவர்களிடம் வனத்துறை ஊழியர்கள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
உடனே அந்த நபர், தான் போலீஸ்காரர் என்றும் விருதுநகரில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியதோடு அதற்கான அடையாள அட்டையையும் எடுத்து காண்பித்தார். இதையடுத்து அந்த ஜோடியை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீஸ்காரருடன் வந்த பெண் கள்ளக்காதலியாக இருக்கக்கூடும் என்றும் விருதுநகரில் இருந்து அவரை பைக்கில் அழைத்து வந்திருக்ககூடும் என்றும் தெரிகிறது
On Friday, September 26, 2014 by Unknown in ,    

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது, தீர்ப்பின்போது ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக எந்த வழிகாட்டுதலும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது