Monday, December 11, 2017

On Monday, December 11, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 11.12.17 


திருநங்கைகளின் கிருஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி புத்தூர் அண்ணல்காந்தி நினைவு மருத்துவமனை எதிரே உள்ள ஒய்எம்சிஎ வில் நடைபெற்றது



ஒஎம்சிஎ பொதுச்செயலாளர் பார்நபாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகள் பைபிள் வாசித்தும்தங்களுடைய நடனத்தை ஆடியும் தங்களுடை திறமை வெளிப்படுத்தினர் அதில் சிறந்து நடனமாடிய திருநங்கைகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு கிருஸ்துமஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.பின்னர் கேக்குகள் வழங்கப்பட்டு ம் பரிசுகளும்வழங்கப்பட்டது

On Monday, December 11, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 11.12.2017

செயின் பறிப்பு கொள்ளையர்கள் இருவர் கைது
நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம் மீட்பு

திருச்சி மாநகரத்தில்; தனியாக செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.யு.அமல்ராஜ்; உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.


மேற்படி செயின் பறிப்பு தொடர்பாக 09.12.2017-ம் தேதி காலை பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய்பாபா கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக TN-55-S-9514  என்ற இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்களை இரகசிய தகவலின்பேரில் நிறுத்தி விசாரிக்க அவர்கள் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த பிரின்ஸ் (27/17)த/பெ.மார்ட்டின் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த ராஜதுரை (55/17)த/பெ.கோபால் எனவும் அதில் பிரின்ஸ் என்பவர் திருச்சி மாநகரம் காந்திசந்தை காவல்நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும்  அவருக்கு கண்டோன்மெண்ட் திருவெறும்பூர் அமர்வு நீதிமன்றம்பெரம்பலூர்பாடாலூர் ஆகிய காவல்நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்தது.
மேற்படி நபர்களை விசாரிக்க கடந்த 04.08.2017-ம் தேதி 1) செந்தண்ணீர்புரம் பாலம் அருகில்பைபாஸ் ரோடு 2) கே.கே.நகர் பகுதி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் மற்றும் கடந்த 02.12.2017-ம் தேதி 3) ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஜெயம் மளிகை கடை, குளாப்பட்டி ரோடு ஆகிய இடங்களில் தனியாக சென்ற பெண்களிடம் கழுத்திலிருந்து செயின்களை பறித்து சென்றதாக கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அவர்களின் வசமிருந்து ரூ. 200000மதிப்புள்ள 10¼ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய வTN-55-S-9514 என்ற இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகளை 09.12.2017-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மேற்படி தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தும்அவரிடமிருந்து மேற்படி திருட்டு சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார். 

Thursday, November 30, 2017

On Thursday, November 30, 2017 by Tamilnewstv in ,    





திருச்சி ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் (RLLF)   தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது .இதில் விஜியா செயலாளர், ஜெயபாலஜி செயல் தலைவர், செயல் பொதுத் தலைவர் வீரவேல், தாமஸ் இணை செயலாலி ர் ,மணிமொழி (விடுதலை சிறுத்தை கட்சி பொருளாளர் )முன்னிலை வகுத்தானர்.



சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பாளர் பேரரிவாளன் கலந்து கொண்டு சிறப்புறையற்றினார்.

திருச்சி கோட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர். மேலும் தீர்மானங்களாக இரயில்வே துறையை தனியார் மயமாக்குதல் மற்றும் வேலை விடுப்பு குறைப்பு கூறித்து முழக்கமிட்டனர்.


பேட்டி -  திருச்சி வீரவளவன்

Saturday, November 18, 2017

On Saturday, November 18, 2017 by Tamilnewstv in    
பழங்காலப் பொருட்கள் கண்காட்சி.
ஸ்ரீ  சிவானந்தா பாலாலயா பள்ளி சார்பில் நவம்பர் 18, 19  தேதிகளில் பழங்காலப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி,   ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு, இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள  ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டுணரும் வகையில் அம்மி, ஆட்டுக்கல், கல்சட்டி,   ஆயுதங்கள், உரல் , திருக்கை, படிகள், எடைக் கற்கள், அஞ்சறைப் பெட்டி , சிலம்பு , விளையாட்டு பொருட்கள், பித்தளை கலைப் பொருட்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் மேஜர் ஜென்ரல் பாபு, முதல்வர்கள் பானுமதி, சரஸ்வதி, துணை முதல்வர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.  கண்காட்சியினை மூன் டி.வி. நிர்வாக இயக்குநர் ஷானவாஸ்கான் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

Wednesday, November 08, 2017

On Wednesday, November 08, 2017 by Tamilnewstv   
திருச்சி
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அடித்துக்கொலை என மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டியன். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 
ஆறுமுகப்பாண்டி கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய பாலக்கரையை சேர்ந்த ஆரிப் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆர்pப் மாரடைப்பில் இறந்துவிடவே ஆரிபின் மனைவி ரம்ஜானிடம் பணத்தை திருப்பி தருமாறு  பலமுறை கேட்டு வந்துள்ளார். இந்த சு10ழ்நிலையில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ரம்ஜான் கூறவே பணத்தை  வாங்குவதற்காக நேற்று  காலை ரம்ஜான் வீட்டிற்கு வந்த ஆறுமகப்பாண்டிக்கும் ரம்ஜானுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகப்பாண்டி ரம்ஜானின் கைää கால்களில் கத்தியால் குத்தியதால் ரம்ஜான் மயங்கி விழுந்தார். ரம்ஜான் இறந்துவிட்டதாக கருதிய ஆறுமுகப்பாண்டி போலீஸ் விசாரணைக்கு பயந்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பாலக்கரை போலீசார் இறந்த உடலைமீட்டு உடற்கூறு சோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு  தனது இரு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்த ஆறுமுகப்பாண்டியன் மனைவி வசந்தி தனது கணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அடித்து கொலை செய்து விட்டனர் எனவே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது  இதனையடுத்து அங்கு வந்த பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். 
பேட்டி வசந்தி இறந்த ஆறுமுக பாண்டியன் மனைவி

Sunday, October 08, 2017

On Sunday, October 08, 2017 by Tamilnewstv in    
திருச்சி 8.10.17
திருச்சி தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச்சங்கம் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர்நலத்துறை) சார்பில் மாநில எழுச்சி மாநாடு புனித ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில தலைவர் செந்தில் குமார் கூறுகையில் மேல்நிலைப்பள்ளி இல்லாத மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிபை;பள்ளிகளாக தரம் உயர்த்தக்கோருதல். ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களை தேர்வு செய்து டாக்டர். அம்பேத்கர் பெயரில் விருது வழங்க கோருதல்.மாணவர்களின் நலன்கருதி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் 9 முதுகலைப்பட்டதாரி பணியிடங்கள் உருவாக்கித்தர கோருதல்.மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கல்வி அதிகாரி (ஆதிந) பணியிடம் ஒன்றை உ ருவாக்கித்தரக்கோருதல்.தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அலுவலக பணியிடங்களான உதவியாளர்ääஇளநிலை உதவியாளர்ääஅலுவலக உதவியாளர்ää காவலர் மற்றும் ஏவலர் பணிடங்களை உருவாக்கித்தர கோருதல்.
நலத்துறை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பிடக்கோருதல்என்பதனை வழியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
பேட்டி...செந்தில்குமார்
On Sunday, October 08, 2017 by Tamilnewstv in    
8.10.17
அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்கு
 திருச்சி : தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்க மாநாடு "EMICON 2017 " அப்போலோ சிறப்பு மருத்துவமனை மூன்றாம் ஆண்டாக  ஞாயிற்றுக்கிழமை, ஹோட்டல் சங்கத்தில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திருச்சி அப்போலோ சிறப்பு  மருத்துவமனையின் மருத்துவமனை நிர்வாகி மற்றும் துணை மருத்துவ இயக்குனர் டாக்டர் S . செந்தில்குமார் அவர்கள் வரவேற்று பேசினார். 

இந்த சிறப்பு மருத்துவ கருத்தரங்க நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் திருச்சி கி. ஆ. . விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் டீன் பேராசிரியர் டாக்டர் G . அனிதா அவர்கள், திருச்சி IIM இயக்குனர் டாக்டர். பீமராய மேட்ரி அவர்கள், திருச்சி மருத்துவ கல்வி துறையின் கெளரவ இயக்குனர் மற்றும் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் முதுநிலை இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் M . சென்னியப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

சிறப்பு விருந்தினர் திருச்சி கி . ஆ. ப . விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் டீன் பேராசிரியர் டாக்டர் G . அனிதா அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வியந்தததுடன் மட்டுமல்லாது, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கையாள கூடிய மருத்துவர்கள் மற்றும் அதிநவீன அவசர சிகிச்சை பிரிவையும் கொண்டிருப்பதை வெகுவாக பாராட்டினார். அது மட்டுமில்லாது மருத்துவர்களுக்கு பயனளிக்க கூடிய இது போன்ற மருத்துவ கருத்தரங்குகளை நடத்துவது குறித்து முயற்சியை பாராட்டியதுடன் மட்டுமல்லாது, மேலும் இது போன்று நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டுகோள் விடுத்தார். 

திருச்சி IIM இயக்குனர் டாக்டர் பீமராய மெட்ரி மருத்துவ துறை அடையும் முன்னேற்றங்கள் மற்றும் அதில் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் பங்களிப்பு குறித்து பேசினார். 

இந்த சிறப்பு கருத்தரங்க மாநாட்டில், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமத் மன்சூர் அவர்கள், தமிழ்நாடு ஓமந்தூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் கதிரியாக்கு மருத்துவர் டாக்டர். பெரியகருப்பன் அவர்கள், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் பத்மாவதி வெங்கடசுப்பு அவர்கள், திருச்சி ராணா மருத்துவமனை பொதுமருத்துவர் டாக்டர் M . பிரபு குமார் அவர்கள் மற்றும் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் M . அருள் ஒளி ஆகியோர் அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் அவர்களின் நன்றியுரையுடன் இனிதாய் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த அதிநவீனசிகிச்சை முறைகளானது கலந்துரையாடல் மற்றும் சிறப்புரைகளாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 200 கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவரச சிகிச்சை, தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர்கள் இந்த மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Thursday, October 05, 2017

On Thursday, October 05, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே  தீராம் பாளையத்தில் உள்ள காந்திய நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் 2லட்சம் மரக்கன்றுகள் வழங்கினார் அதனை ஊக்குவிக்கும் விதமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தீராம் பாளையம் காந்திய நடுநிலைப் பள்ளியை தத்தெடுத்து விதைப்பந்து தயாரித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர், 


(விதைப்பந்து என்பது மர செடி விதைகளை செம்மண் உருண்டை செய்து அதன் நடுவில் வைத்து அதைபந்து போல் உருட்டி வைத்து அதனை நம் நினைக்கும் இடத்தில் வீசி விட்டால் மழை காலத்திலோ அல்லது அதன் மீது தண்ணீர் பட்டாலோ அந்த விதை முலைத்து விடும்) அதே போன்று பிளக்ஸ் பேனர்கள் வைத்து மாணவ மாணவியர்க்கு பேனா பென்சில் வைக்க பர்ஸ் வடிவமைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் திருமலைராஜ், முன்னால் துணை ஒன்றிய தலைவர் ராமசாமி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கோபி கிருஷ்ணன் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் தங்கரமேஷ் ,முனைவர் அருண் பிரகாஷ் கலந்து  கொண்டனர்.                 


பேட்டி ... முனைவர் அருண் பிரகாஷ்
பேட்டி ... மாணவி யோக லெட்சுமி


Monday, September 25, 2017

On Monday, September 25, 2017 by Tamilnewstv in    
திருச்சி – 25.09.17

கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்

திருச்சி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குபவர்களுக்கு தங்கநாணயம் வழங்குதல் என மாநகராட்சி தூய்மை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே திடக்கழிவு மேலாண்மையினை மேம்படுத்தவும் தூய்மை திருச்சி தூதுவராக இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் தில்லைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக குப்பைகளை அப்புறப்படுத்திய ரெசிடென்சிக்கு விருது வழங்கப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்கு மக்களும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதற்கு இருவண்ண குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பசுமையினைப்பேணும்வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பேசிய ஜேம்ஸ்வசந்தன், திருச்சியினை தூய்மையாக வைத்திருக்க அனைவரும்பாடுபடவேண்டும், தொடர்ந்து தூய்மை பட்டியலில் திருச்சி தக்கவைப்பதன்மூலம் நம்மை பாதுகாக்க முடியும் என்றார், மேலும் கமலஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாகவும், அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், நல்லது செய்யும் எண்ணமுடைய எவரும் அரசியலுக்கு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.