Sunday, April 15, 2018

திருச்சி 15.4.18
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும் 

திருச்சி ஸ்ரீரங்கம்காந்தி ரோடு வடக்கு தெரு செல்லும் வழியில் ஸ்ரீமகா கணபதி மற்றும் ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளதுஅந்த கோயிலின் மகிமையை    பூசாரி தியாகராஜன் கூறும்    போது 37 ஆண்டுகளுக்கு முன்வேப்ப மரத்தில் பால் சுரந்தது அதனால் இந்த இடத்தில் அம்மன் உருவானது இந்த கோயிலுக்கு 1990 ஆண்டு முதல்கும்பாபிஷேகம் நடைபெற்றது 2004ஆம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும் அம்மை நோய் வந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம் அம்மை நோய் வந்தவர்கள்மகாசக்தி வணங்கினால் அம்மை நோய்தீர்ந்து பூரண குணமடைவார்கள் என்றார்மேலும் சமயபுரம் அம்மன் தேருக்கு முதல் சமயபுரம் அம்மனுக்கு இந்த கோயிலிருந்து பால் குடம் பக்தர்கள் கொண்டு செல்கின்றனர் என்றார்தைப்பூசம் அன்று கொல்லிடம்அற்றிலிருந்து மாகசக்தி அம்மன் உற்ச்சவர் அழைத்து வரப்படுவார் எ ன்று கூறினார்
பேட்டி......   தியாகராஜன் பூசாரி 

Thursday, March 29, 2018

On Thursday, March 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
On Thursday, March 29, 2018 by Tamilnewstv in ,    
 திருச்சி 29.03.18

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி..

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் CBl மெத்தனம் காட்டுகிறது திருச்சி தெளகித் சுல்தானா வழக்கு சங்கர சுப்பு வழக்கறிஞர் மகன் கொலையில் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என CBl மெத்தனப் போக்கை கண்டித்து பேட்டியளித்த எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கடைசி நாள் இன்று . உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு இன்றோடு முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. கர்நாடக சட்டப் பேரவை தேர்தலை கருத்தில்  கொண்டே மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.

தமிழக அரசு மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தகவல்கள்  வெளிவருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன என்று தெரியவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்.

ஆனால் அதுவும் கூட நமக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேறு எந்த ஒரு அமைப்பை உருவாக்கினாலும், அது நமக்கு உரிய நீரை பெற்றுத்தரக் கூடிய அமைப்பாக இருக்காது.

காவிரி நடுவர் மன்றம் அறிவித்த இறுதி தீர்ப்பில் சட்டப்படி Creates Scheme என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு அந்த Scheme என்றால் என்ன  என்று விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் காலம் தாழ்த்துகிற சதி முயற்சி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி நீர் தமிழக மக்களுக்கு கிடைப்பதற்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லை என்றால் எந்த உத்திரவாதமும் இல்லை.

காத்திருப்பதால் எந்த நீதியை அளிக்காது எனவே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகு கடுமையான ஒரு அழுத்தத்தை கொடுக்க ஏதுவாக இருக்கும். 

நவநீத கிருஷ்ணன் தற்கொலை செய்யப் போவதாக சொல்வது சரியான நிலைபாடு அல்ல, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது. அல்லது இதுவும் ஒரு நாடகம் என்று மக்கள் கருத நேரிடும். அதை தவிர்த்து பதவி விலகுவது நேர்மையான, நியாமான அணுகு முறையாக இருக்கும். செய்யவும் முடியும்.

50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கின்றார்கள் என்றால், மிகப் பெரிய அரசியலமைப்பு சட்ட நெருக்கடியாக அது மாறும். சர்வதேச அரசியலின் கவனத்தை அது ஈர்க்கும். ஒரு தீர்வு எட்டும். இதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தை இன்னும் 10 அல்லது 25 ஆண்டுகளில் குடிநீருக்கு அலையும், தவிக்கும் ஒரு மாநிலமாக மாற்றுவர்கள். அதற்கான அடித்தளம் தான், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், போன்ற பணிகள் எல்லாம்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரால் ஒட்டு மொத்த டெல்டா மாவட்டத்தையே அவர்கள் வேட்டையாட போகிறார்கள். புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த கடற்கரை பகுதியும், ஹைட்ரோ கார்பன் இருப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள். அதை பெட்ரோலியம் சோன் அல்லது கெமிக்கல் சோன் என்று அறிவிக்கப் போகிறார்கள். இதனால் தமிழக நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அங்கிருந்து மக்கள் புலம்பெயர, இடம் பெயர வேண்டிய நெருக்கடி உருவாகும். இது மிகவும் ஆபத்தானது தமிழகத்தை திட்டமிட்டே பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறதோ என்ற கவலை இருக்கிறது. 

31 ஆம் தேதி நியூட்ரினோ திட்டத்தை முற்றாக கைவிட வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது ஆதரவும் அளிக்கிறது

கூட்டுறவு சங்க தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சி ஆதிக்கம் செய்யும் ஒரு தேர்தல், தலித்துக்களோ, பெண்களோ பங்கேற்க முடியாத, இட ஒதுக்கீடு இல்லாத தேர்தல், அதற்கு தேர்தல் என்று அறிவிக்காமல் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களையே நியமித்துவிட்டு போகலாம்.

Wednesday, March 28, 2018

On Wednesday, March 28, 2018 by Tamilnewstv in    
 தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். கே.சாத்தனூர் அய்மான் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறும் 15-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர்
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வுக்குப் பிறகு மாலை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசமணி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் கார் மூலம் புறப்பட்ட ஆளுநர் வயர்லஸ் சாலை, உடையான்பட்டி ரயில்வே கேட் வழியாக கே. சாத்தனூர் அய்மான் மகளிர் கல்லூரிக்கு சென்றிருக்கின்றார்.
முன்னதாக ஆளுநர் கார் செல்லும் பாதையான வயர்லஸ் சாலையில் நேற்று மாநகராட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், சாலையோர மரங்கள் சிலவும் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த சாலையில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.
வயர்லஸ் சாலையில் கடைகள் வைத்திருந்த பலரும், ஆளுநர் ரோட்டுல போவதற்காக ரோட்டிலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள கடைகளையும், மரங்களையும் அகற்றி எங்க வயித்துல அடிக்கிறாங்களே என புலம்பியவர்களால் இன்று ஆளுநர் பயணப்பாதையில் ஏதும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு  விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்
 மாணவிகள் உட்பட இளங்கலை மற்றும் முதுகலை  பயின்ற 247 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
பேசுகையில்: பெண்கள் உலகளவில் அரசியல், பாதுகாப்புத்துறை, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தங்களை ஈடுபடுத்தியிருப்பது பெருமைக்குரியதாய் இருக்கின்றது என எடுத்துரைத்தார்.

மேலும், இவ்விழாவில் நிர்வாகக் குழு தலைவர் ஜெய்லானி சம்சுதீன், துணை தலைவர் ஹசன் அஹமது, கல்லூரி தாளாளர் சாகுல் ஹமீது, கல்லூரி முதல்வர் சுபத்ரா, பேராசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Monday, March 26, 2018

On Monday, March 26, 2018 by Tamilnewstv   
திருச்சி :
விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேட்டி :
மதிமுக வைகோ அவர்களின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் குழு டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் அல்லது அந்த துறையின் அமைச்சரையாவது சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது, தவிர்க்கிறது.
நாம் உரிய அரசியல் அழுத்தத்தை கொடுத்த வேண்டும். மத்திய அரசு தமிழக்கத்தை வஞ்சிகிறது.

டெல்டா மாவட்டங்களை சீரழிக்க கூடிய வகையில் மேலும் 28 இடங்களில் ஹெட்ரோபான் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நாளை அம்மாபேட்டையில் நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும்.

தேனீ மாவட்டத்திள்ள ஆராய்ச்சி கூடம் தேர்வு செய்யும் இடத்தை கைவிட வேண்டும்.

விவசாயிகள் தொடர்ந்து பாஜகவினர் தாக்குதல் கேள்விக்கு,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.

தமிழிசைக்கு தமிழக அரசு ஊக்கம் கொடுக்கிறது.

டெல்லியில் எம்.பிக்கள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு போராட்டமாக தான் இருக்கிறது.

ஆப்ரேஷன் திராவிடன் என்ற பெயரில் 1800 கோடி செலவில்  தமிழகத்தில் ஆட்சியை பிடித்த அமிர்ஷா புதிய திட்டம் தீட்டுவதாக என்ற கேள்விக்கு
இது வசந்தி அப்படி முயற்சித்தால் மூக்கு உடைபடுவார்கள்.

திருச்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் கனகவல்லி புது மனதம்பதி யரை விமான நிலையத்தில் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்றனர்
On Monday, March 26, 2018 by Tamilnewstv   
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி  வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சயை   சேர்ந்த  ஜலாலுதீன் என்பவரது
உடைமைகளை சோதனை செய்தனர்.  அப்போது    அவர்  உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 36.57லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1040கிராம் தங்கத்தையும்  இதே விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த அழகேசன் என்பவர் அணிந்து வந்த 138 கிராம் மதிப்பு 4.07 லட்சம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Saturday, March 24, 2018

On Saturday, March 24, 2018 by Tamilnewstv in    
திருச்சி      24.3.18

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலிருந்து பேரணியாக தொடங்கி தபால் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழகத்தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.
உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும்  வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு.  காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி யை முடக்கிவிடுகிறது . தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி யை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது .12  மாவட்டங்களின் விவசாயம் 20மாவட்டங்களின்குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு.

எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி எம் சி நீர்  உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசில் தமிழக எம் பி க்களுக்கு வேலயில்லை; எனவே அவர்கள்  அனைவரும் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி  திருச்சி தலைமை தபால் நிலையம் முன்புமுற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tuesday, March 20, 2018

On Tuesday, March 20, 2018 by Tamilnewstv   
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குடி போலீசார் விசாரணை.

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆலந்துறை. இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தனுசு கோபி (14) இவர் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தூர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் துவாக்குடி போலீசில் தனது மகன் காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று மாலை தனுசு கோபியின் சைக்கிள் துரை குவாரி அருகே நிற்பதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தனுசு கோபியின் பெற்றோர்,  உறவினர் குவாரியை சுற்றி தேடினர். தனுசு கோபி சுமார் 200 அடி பள்ளத்தில் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து சிறுவன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Tuesday, March 20, 2018 by Tamilnewstv in ,    
VHP சார்பாக அயோத்தியில் தொடங்கி இராமேஸ்வரம் வரை  முடியும்  ரதயாத்திரையை தமிழ்நாட்டில் செங்கோட்டை வழியாக வருவதை நிறுத்த வேண்டும் என்றும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைக்கவே இந்த ரதயாத்திரை என்று இதை இன்று செங்கோட்டையில் நுழையவிடக்கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தும் மேலும் இதை செங்கோட்டையில் தடுக்க செல்வோம் என்று இன்று செல்ல இருந்த அனைத்து கட்சி தலைவரகளையும் கைது செய்தது காவல்துறை. மேலும் இதை தடுக்க சென்ற SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உள்பட பல இயக்கங்களின், கட்சிகளின் தலைவர்களை  காவல்துறையின் கைது நடவடிக்கை கண்டித்து திருச்சி மாவட்டம் சார்பாக SDPI கட்சி சார்பாக  திருச்சி மாவட்ட செயலாளர் இமாம் ஹஸ்ஸான் தலைமையில் திருச்சி டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்க் அருகில் தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.

SDPI கட்சியின் நிர்வாகிகளான திருச்சி மாவட்ட செயலாளர் ரபிங் முகமது, பொருளாலர் முஸ்தபா, முன்னால் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் கட்சியின் செயல்வீரர்கள் என 40க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.