Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் நாகூர் ஹனீபாவின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் நாகூர் ஹனீபாவின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள்.
பிரபல பாடகர் நாகூர் ஹனீபா வின் உடல் அவரது சொந்த ஊரான நாகூரில் நேற்று மாலை இஸ்லாமிய முறைப்படி நல்ல டக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய மற்றும் திராவிட இயக்கப் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற நாகூர் ஹனீபா உடல்நலக்குறைவால் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் மாலை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான நாகூருக்கு நேற்று அதிகாலை எடுத்துவரப்பட்டது.
நாகூர் தெற்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வடக்கு மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, திண்டுக்கல் பெரிய சாமி, எஸ்.என்.எம். உபயதுல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, தமுமுக எம்எல்ஏ ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக-வினர், நாகூர் ஜமாத்தார் மற்றும் ஏராள மான பொதுமக்கள் அஞ்சலி செலுத் தினர். பின்னர், மாலை 5 மணிய ளவில் அவரது உடல் ஊர்வல மாகக் கொண்டு செல்லப்பட்டு, நாகூர் தர்காவில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள அடக்க தலத்தில் இஸ்லாமிய முறைப்படி நல்ல டக்கம் செய்யப்பட்டது.

Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
மின் கட்டணத்தை நுகர்வோர் முன் பணமாக செலுத்தினால் 6 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மின் வாரியம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்திலும், கடனிலும் சிக்கியுள்ளது. படிப்படியாக நிதி சீரமைப்பு மற்றும் மின்சார உற்பத்தி, விநியோக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் கூடுதலாக நிதி அளித்து மின் வாரிய இயக்கத்துக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையில், மின்சார நிதி நிலையை மேம்படுத்தவும், நுகர்வோரின் காத்திருப்பைத் தவிர்க்கவும், மின் பயன்பாட்டுக் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது.
இதில் தற்போது புதிய அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் பயன்பாட்டுக்கான உத்தேச மின் கட்டணத்தை முன் கூட்டியே (அட்வான்ஸ்) செலுத்தினால், அந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வீதம், ஒரு மாதத்துக்குக் கணக்கிட்டு வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மின் இணைப்பு வைப்புத் தொகைக்கு, மின் வாரியம் ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டி வழங்கும் திட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
On Thursday, January 22, 2015 by Unknown in ,    
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பது, ‘உலக தமிழர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது’ என்று தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இந்தியா–இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்று, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும், அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசியல் சட்டத்தில், 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
 
தமிழர்கள் அங்கே வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்கப்படும் என்பதற்கு அந்த சட்டத்திருத்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.
 
மேலும் சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியையும் ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கும், மாகாண வாரியாக உயர் நீதிமன்றங்களை அமைப்பதற்கும் அந்த சட்டத்திருத்தம் உறுதி அளித்திருந்தது.
 
ஆனால் அதற்கு பிறகு பொறுப்புக்கு வந்த இலங்கை அரசுகள் அந்த சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், 13 ஆவது சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
 
அதனால், மாகாணங்களுக்கு அங்கே இதுவரை அதிகாரப்பகிர்வு கிடைக்கவில்லை. எனவே இந்த 13 ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசு இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
 
திமுக வின் சார்பில் பல முறை இந்த 13 ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி வந்தோம்.
 
இந்த பிரச்சினையில்தான் தற்போது இலங்கையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சிறிசேனாவின் அரசில் பிரதமர் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே முதல் முறையாக கூடிய நாடாளுமன்றத்திலே 13 ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
 
அவர் பேசும்போது, ‘‘மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வகை செய்யும் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையிலும் சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்“ என்றெல்லாம் கூறியிருப்பது, இலங்கை தமிழர்கள்பால் அக்கறை கொண்ட உலகத் தமிழர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
 
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறிசேனாவின் அரசு இந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்றும், இலங்கை தமிழர்களுக்கு தேவையானவற்றை பேச்சுவார்த்தை மூலம் விரைவிலே தீர்வுகாண முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்

Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    





தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெப்போலியன் ரசிகர் மன்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நெப்போலியன் கலந்துகொண்டு பேசும்போது, “தமிழக பாஜகவில் வரும் மார்ச் மாதத் துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர் களை மன்றத்தின் சார்பாக சேர்க்க வேண்டும். பாஜக பொதுக் கூட்டங் களில் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளோடு இணைந்து மன்றத்தினர் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெருமையை பரப்பும் நோக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மாவட்ட தலைவர்களை கொண்ட இணைய தள குழு ஒன்றையும் நெப்போலியன் அமைத்தார்.
இக்கூட்டத்தின்போது நெப்போலியன் பாஜகவில் இணை யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் கவுரி சங்கர் நன்றி கூறினார்.
On Monday, January 05, 2015 by Unknown in ,    




ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் விஜய் ரூ.2 லட்சம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
பாலா என்ற குழந்தைக்கு எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் பகிரப்பட்டன.
Help Baby Bala - Bone Marrow Transplatation Operation என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டு, அக்குழந்தையின் புகைப்படத்துடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை அறிந்த விஜய், உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
இது குறித்து பாலாவின் தந்தை முருகனிடம் பேசியபோது, "எனது குழந்தைக்கு மொத்தமாக சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு செலவு செய்வதற்கு என்னிடம் பண வசதி இல்லை. முதல் ஆளாக நடிகர் விஜய் 2 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் 1 லட்ச ரூபாய் அளித்தார்.
சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் தொகை அனுப்பி இருக்கிறார்கள். இதுவரை 4 லட்ச ரூபாய் வந்திருக்கிறது. இன்னும் 16 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. என் குழந்தைக்கு பணம் என்பதையும் தாண்டி அனைவரது பிரார்த்தனை மிகவும் முக்கியம்.
என் குழந்தைப் பற்றிய முழுமையான விவரங்கள் அனைத்துமே (https://www.facebook.com/helpbabybala) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தத் தொழிலாளர்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 11 தொழிற்சங்கங்களின் பேரவை கூட்டம் கடந்த 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் கடந்த 26ஆம் தேதி அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
 
இதைத் தொடர்ந்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27ஆம் தேதி தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடந்தது.
 
இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி 29ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன..
 
ஆனால், திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு போக்குவரத்து பணிமனைகளின் முன்பும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால், அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களை கொண்டு பேருந்துகளை இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
 
இந்நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரபாகர்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், தமிழகத்தில் இன்று வழக்கம் போல பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
 
சென்னையைப் பொறுத்தவரை “போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினாலும், இன்று வழக்கம் போலவே மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.
 
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படும்” என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் தெரிவித்தார்.
 
எனினும் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக 11 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 இந்தப் போராட்டம்  தீவிமடையும் என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்வரை தொடரும் என்றும் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    
செங்கல்பட்டு–விழுப்புரம் வழித்தடத்தில் பேரணி–திண்டிவனம் இடையே பாராமரிப்பு பணி இன்று நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
எழும்பூரில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படக்கூடிய மதுரை வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். மதியம் 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி–திருப்பதி எக்ஸ்பிரஸ் மதியம் 2.35 மணிக்கு புறப்படும்.
மேல்மருவத்தூர்–விழுப்புரம் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 9.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.35 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. 

Monday, October 27, 2014

On Monday, October 27, 2014 by Unknown in ,    

சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி முறையாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலித்து வருகிறோம். பின்னர் முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அரசு ஆய்வு செய்து, மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதில் சில மாற்றங்களை செய்து முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

மாதிரி கட்டணம் விவரம்:- முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8-ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை ரூ.10-ம், 4 முதல் 6 கிலோ மீட்டர் வரை ரூ.11-ம், 6 முதல் 9 கிலோ மீட்டர் வரை ரூ.14-ம், 9 முதல் 12 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை ரூ.17-ம், 15 முதல் 18 கிலோ மீட்டர் வரை ரூ.18-ம், 18 முதல் 21 கிலோ மீட்டர் வரை ரூ.19-ம், 21 முதல் 24 கிலோ மீட்டர் வரை ரூ.20-ம், 27 கிலோ மீட்டருக்கு ரூ.23-ம் கட்டணமாக வசூலிக்க மாதிரி கட்டண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் தமிழக அரசு இதனை முறையாக பரிசீலித்து விரைவில் அறிவிக்க உள்ளது.

மெட்ரோ ரெயில் சேவையில் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், மேதின பூங்கா முதல் சென்டிரல், மே தின பூங்கா முதல் ஏஜி-டி.எம்.எஸ், சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ், நேரு பூங்கா முதல் எழும்பூர், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி முதல் ஷெனாய் நகர் இடையே தலா இரண்டு மார்க்கத்திலும் 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) வீதம் 14 எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பச்சையப்பன் கல்லூரியிலிருந்து, நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் இடையே தலா ஒன்று வீதம் 2 எந்திரங்களும், கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா வரை உள்ள பகுதிகளில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதில் கீழ்ப்பாக்கம் முதல் நேரு பூங்கா மற்றும் மேதின பூங்கா முதல் சென்டிரல் வரை உள்ள பணிகள் தொடங்கப்படவில்லை. மீதம் உள்ள அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி 21 கிலோ மீட்டர் தூரம் அதாவது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

முதல் சுரங்கம்தோண்டும் எந்திரம் ஷெனாய் நகரிலிருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர் மற்றும் திருமங்கலம் ஆகிய 4 ரெயில் நிலையங்களின் இடையே உள்ள 2 ஆயிரத்து 797 மீட்டர் தூரத்தை கடந்து வெற்றிகரமாக திருமங்கலம் ரெயில்நிலையத்தை அடுத்துள்ள வளைவு வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

Friday, October 24, 2014

On Friday, October 24, 2014 by Unknown in ,    
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
மதுரை சேடப்பட்டியில் பிறந்த அவர் நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடித்ததால், ரசிகர்கள் அவரை ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர் என்று அழைத்தனர்.
தேனி சட்டப்பேரவை தொகுதியில் 1962-ல் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய வரலாற்றில் தேர்தலில் வென்ற முதல் நடிகர் என்ற பெருமையும் எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு.
எஸ்.எஸ்.ஆர் சில ஆண்டுகள் திமுகவிலும் அதன்பின் அதிமுக விலும் இருந்து வந்தார். பின்னர், அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற அவர், சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் மனைவி தாமரைச்செல்வி மற்றும் மகன் கண்ணனோடு வாழ்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக எஸ்.எஸ்.ஆர். நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கவலைக்கிடமான நிலையில் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை, பூம்புகார், மறக்க முடியுமா, பார் மகளே பார், குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
On Friday, October 24, 2014 by Unknown in ,    
சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்களின் மூலம் 3000க்கும் அதிகமான திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு வழக்கிற்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய ஆய்வுகளைச் செய்தபோது, 2013ஆம் ஆண்டில் ராயபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் 1559 காதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே ஆண்டில் வடசென்னை பதிவு அலுவலகத்தில் 1937 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த திருமணங்கள் எல்லாம் முதலில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரகசியமாக நடப்பதாகவும் பின்னர் வழக்கறிஞர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கம் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி போலிப்பதிவு திருமணங்களின் பின்னணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு துணை போன பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்களால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்திருக்கும் உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் காதல் ஜோடிகளுக்கு தங்களது அறையில் ரகசிய திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும், அப்படி திருமணம் செய்து வைத்த்தாகப் புகார் வந்தால், அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருமணத்தைப் பதிவுசெய்யும்போது, தம்பதி இருவரும் வருவதை பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Thursday, October 23, 2014

On Thursday, October 23, 2014 by Unknown in ,    
விருகம்பாக்கத்தில் அடகு கடை அதிபர் கொலை: 60 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை கே.கே.நகர் பங்காரு நாயுடு காலனியைச் சேர்ந்தவர் ஹிரா ராம் (54). அடகு கடை அதிபர். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஹிரா ராம் அடகு கடை உள்ளது. செல்போன் ரீஜார்ஜும் செய்து வந்தார்.

நேற்று தீபாவளி தினம் என்றாலும் வழக்கம் போல் கடையை திறந்தார். நேற்று மாலை 5 மணியளவில் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஒரு தங்க நகையை அடகு வைக்க வேண்டும் என்றனர். நகையை உரசிப் பார்த்து, எடை போட்டார். நகையை லாக்கரில் வைத்து விட்டு, பணத்தை எடுப்பதற்காக லாக்கர் அறைக்குள் சென்றார். 

அப்போது, அங்கு புகுந்த 2 பேர் ஹிரா ராமை திடீரென்று அரிவாளால் வெட்டினார்கள். அவர் மீது 4 வெட்டுகள் விழுந்தன. ரத்தம் பீறிட அவர் தரையில் சாய்த்தார். இதற்குள் அங்கு அடகு வைப்பது போல் நின்று கொண்டிருந்தவர்கள் அறைக்குள் புகுந்து லாக்கரில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றனர். 16 நகை பாக்ஸ்கள் காலியாக கிடந்தன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 60 முதல் 100 பவுன் இருக்கலாம் என்று தெரிகிறது. 

இரவு 8.30 மணியளவில் ஹிரா ராம் ரத்த வெள்ளத்தில் கடைக்குள் விழுந்து கிடப்பது அவரது மகன் ஆனந்த் மூலம் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் (பொறுப்பு) திருஞானம், தி.நகர் துணை கமிஷனர் பகலவன், அசோக் நகர் உதவி கமிஷனர் ஆறுமுகம், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். கை ரேகை நிபுணர்கள் வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. 

நகை கடை அதிபர் ஹிரா ராம் வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார். 2½ கிலோ நகை – பணம் தப்பின. லாக்கரில் இருந்த பணம் மற்றும் 105 பைகளிலும், தனியாகவும் இருந்த 2½ கிலோ அடகு நகைகள் தப்பின. 3 ரீஜார்ஜ் செல்போன்கள், 3 அடகு சீட்டுகள் ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். 

அடகு கடைக்குள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பயன்படுத்தபப்டும் வெட்டரிவாள் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனவே அந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் தங்கி இருந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. 

எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள ஆற்காடு சாலையில் இருக்கும் இந்த அடகு கடையில், அதன் அதிபரை வெட்டி விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று தீபாவளி தினம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரம் பார்த்து இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை நன்கு அறிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

செல்போன் ரீஜார்ஜ் செய்தவர்கள், ஹிரா ராம் போனில் பேசியவர்கள், நகை அடகு வைத்தவர்கள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். கடையை நோட்டமிட்டு திட்டம் போட்டு கொள்ளையடித்தார்களா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்து விட்டு அதை மறைப்பதற்காக நகைகளை அள்ளிச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலை – கொள்ளை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையுண்ட ஹிரா ராம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ரமாபாய் (50). இவர்களுக்கு காஞ்சனா, மஞ்சு என்ற மகள்களும், ஆனந்த் (22) என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்த் சி.ஏ. படித்து வருகிறார். நேற்று மாலை 5.30 மணிக்கு ஆனந்த் மோட்டார்சைக்கிளில் தங்கள் அடகு கடை முன்பாக சென்றுள்ளார். அப்போது தந்தை ஹிரா ராம் உள்ளே இல்லை. எனவே வெளியே சென்று இருப்பார் என்று நினைத்துக் கொண்டார். 

இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய ஆனந்த் அப்போதும் தந்தை வீட்டுக்கு வராததால் அடகு கடைக்கு சென்றுள்ளார். அங்கு ‘லாக்கர்’ அறையில் ஹிரா ராம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறி துடித்தார். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஹிரா ராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 5 மணிக்கே ஆனந்த் கடைக்குள் வந்து இருந்தால் கொள்ளையர்கள் சிக்கி இருக்கலாம். ஹிரா ராமும் உயிர் பிழைத்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
On Thursday, October 23, 2014 by Unknown in ,    

வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக கோவிலை சுற்றி தென்னை ஓலையால் கூரை வேயப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அம்மன் கோவில் அருகில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று பாய்ந்து சென்று கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த ஓலை கூரை மீது விழுந்தது. இதில் ஓலை தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அந்த பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைத்தனர். இதில் கோவிலை சுற்றி கட்டியிருந்த ஓலை கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.

Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
நெஞ்சை படபடக்க வைக்கும் ‘‘பேய் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று நடிகை லட்சுமிராய் கூறினார்.முனி–1’, ‘முனி–2’, ‘காஞ்சனா’ ஆகிய படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ், இப்போது ‘கங்கா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதையடுத்து, அவர் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
இதில், இடைவேளைக்கு முன்பு ஒரு படமும், இடைவேளைக்கு பின்னர் இன்னொரு படமும் இடம்பெறும் என்றும், ஒரு படத்துக்கு ‘கிழவன்’ என்றும், இன்னொரு படத்துக்கு ‘கருப்பு துரை’ என்றும் பெயர் சூட்டியிருப்பதாக அவர் கூறினார். ‘கருப்பு துரை’ என்ற படத்தில் லட்சுமிராய் கதாநாயகியாக நடிக்கிறார்.இதுதொடர்பாக ராகவா லாரன்சும், லட்சுமிராயும் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு லட்சுமிராய் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– சமீபகாலமாக உங்களைப்பற்றிய பரபரப்புகள் அடங்கியிருக்கிறதே... என்ன விஷயம்?
பதில்:– ‘‘நான் பரபரப்புகளில் இருந்து விலகி இருக்கிறேன். நானுண்டு என் வேலை உண்டு என்று ஒதுங்கியிருக்கிறேன். கிசுகிசுக்களுக்கு இடம்கொடுக்காமல் நடந்துகொள்கிறேன்.
கேள்வி:– உங்களுக்கு வரப்போகிற கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
பதில்:– நல்ல மனிதராக இருக்க வேண்டும்.
கேள்வி:– எப்படிப்பட்ட ஆண்களை உங்களுக்கு பிடிக்கும்?
பதில்:– ஆண்களைப்பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை.
பேய் வேடம் 
கேள்வி:– இப்போது வருகிற பெரும்பாலான கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்களே?, அதுபோல் உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?
பதில்:– தமிழ் படஉலகில் இப்போது பேய் படங்கள் அதிகமாக வருகின்றன. அடுத்து வரஇருக்கும் ‘அரண்மனை’யும் பேய் படம்தான். அந்த படத்திலும் நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், நெஞ்சை படபடக்க வைக்கும் வகையில் முழுமையான ஒரு பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
கேள்வி:– பெரும்பாலும் நீங்கள் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தானே நடிக்கிறீர்கள்?
பதில்:– இப்போதெல்லாம் பல கதாநாயகிகள் அல்லது பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள்தான் வருகின்றன. படங்களுக்கான பட்ஜெட் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால், இதுபோன்ற ‘மல்டி ஸ்டார்’ படங்கள் வருகின லட்சுமிராய் கூறினார்.

Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by Unknown in ,    



ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுதிதியுள்ளது.
 
இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
"நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் வேளையில், ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு அந்நாடு முயற்சிக்கலாம்.
 
எந்தச் சூழ்நிலையிலும் அந்நாட்டின் வலையில் சிக்கி நாம் இரையாகிவிடக் கூடாது. இதை நமது அரசு மனதில் கொள்ள வேண்டும்.
 
இந்த விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மனிதத்துவக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் இணைய வேண்டும் என்பது போன்ற அவர்களின் தந்திரமான பேச்சுக்கு நாம் உடன்பட்டுவிடக் கூடாது.
 
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக எந்த சர்வதேச நாடு அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தாலும், அந்த நாடு ஐ.நா வின் ஒப்புதலை பெற்றாக வேண்டும்.
 
அதை மீறி செயல்படும் நாடு நீதிக்கு எதிராக செயல்படுவது போலாகும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    


 
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் தூண்டித்துவிட்டார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், உடனடியாக சென்னை பெருநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவுப்படி, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திருவான்மியூரில் உள்ள அஜித் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் அங்கு எந்த வெடி பொருளும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    




சிறுவன் அசுவத்தாமன் குடும்பத்தினருடன் நடிகர் சிம்பு
சிறுவன் அசுவத்தாமன் குடும்பத்தினருடன் நடிகர் சிம்பு
"என் மகன் அசுவத்தாமன் தற்போது நன்றாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிம்பு சார்தான்" என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுவனின் மருத்துவச் செலவை நடிகர் சிம்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அச்சிறுவன் நன்றாக இருப்பதாக தகவல்கள், புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்த ஒரு நிலைத்தகவலை ரீ-ட்விட் செய்தார். சிம்புவின் இந்த நல்லெண்ண நடவடிக்கை, அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
உண்மையில் என்ன தான் நடந்தது, என்பதை அறிய அசுவத்தாமனின் தந்தை சண்முகத்தினைத் தொடர்பு கொண்டு பேசினேன். தனது மகனுக்கு சிம்பு செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"எனது பெயர் சண்முகம். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனது மகன் அசுவத்தாமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஆனால், வலி குறையவில்லை என்றவுடன் திருவண்ணாமலையில் பெரிய மருத்துவமனையை அணுகினோம்.
சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள இலவச பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்று கூறி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள்தான் பண உதவிகள் செய்து வந்தார்கள். ஆனால், பணம் அதிகம் தேவைப்பட்டது.
எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபனுக்கு இரவு 11:30 மணிக்கு போன் செய்து எனது மகன் பற்றிய விவரங்களை கூறினேன். 12:30 மணிக்கு என்னை சிம்பு அழைத்தார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சிம்புவே ராமச்சந்திரா மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்களுக்கு போன்செய்து, அவரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். அவனை பார்க்கும்போது எல்லாம் சிம்பு செய்த உதவி தான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.
சந்தானம் சாரும் கொஞ்சம் உதவிகள் செய்தார். எனது மகனுக்கு அதிகமான உதவிகள் செய்தது சிம்பு சார் தான். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் எல்லாம் சொல்லிவிட முடியாது.
மருத்துமனையில் இருந்து சிம்பு சாரைப் பார்க்க எனது மகனை அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், வேறு ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவர் பேசியவுடன் கண்கள் குளமாக நின்றுக் கொண்டிருந்தேன்" என்றார்.
On Sunday, September 21, 2014 by Unknown in ,    




நளினி சிதம்பரம் | கோப்புப் படம்
நளினி சிதம்பரம் | கோப்புப் படம்
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
சென்னையில் சனிக்கிழமை மாலை நளினி சிதம்பரம் விசாரிக்கப்பட்டதாக, சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது சிறையில் உள்ள சாரதா நிதி நிறுவன தலைவர் சுதிப்த சென் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நளினி சிதம்பரத்தை சிபிஐ விசாரித்திருப்பதாக தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.
சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சதாப்தி ராய், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, குனால் கோஷ் போன்றோர் அதன் 'பிராண்ட் அம்பாசடர்'களாகச் செயல்பட்டார்கள். இவையெல்லாம் மக்களை இந்த நிறுவனத்தின்பால் மேலும் மேலும் ஈர்த்தன.
இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட 'செபி' அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 2009-ல் 'செபி' நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, 'செபி'யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. ஒருநாள் விஷயம் வெடித்து முறைகேடு வெளியே வந்தது.
சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டபோது, மேற்கு வங்கக் காவல் துறை விசாரித்தால் போதும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி சியாமள சென் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். ஊழலை வெளிக்கொணர்வதைவிட, மறைக்கவே மாநில அரசு முயல்கிறது என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. அதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சாரதாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். அவர்களில் 83% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகச் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி சிதம்பரம்...
சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்த சென், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் விவகாரம் தொடர்பாக சிபிஐ-க்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் பலர் தன்னிடம் இருந்து மிரட்டி பணத்தைப் பறித்துக் கொண்டு, பிரச்னைகள் ஏற்பட்டால் என்னைக் காப்பதாக உறுதியளித்தனர்' என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு டிவி சேனலை கையக்கப்படுத்தும் ஒப்பந்தத்தில் நளினி சிதம்பரம் சட்ட ஆலோசகராக பங்கு வகித்ததாகவும், அதற்காக அவருக்கு ரூ.1 கோடியை கட்டணமாக செலுத்தியதாகவும் அந்தக் கடிதத்தில் சுகிப்த சென் குறிப்பிட்டுள்ளதுதான் சிபிஐ-யின் விசாரிப்புக்கு காரணம்.
சிபிஐ விசாரணை குறித்து கருத்து கேட்க, பிடிஐ செய்தி நிறுவனம் அவரைத் தொடர்புகொண்டபோது, அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
அதேவேளையில், ஓர் ஆண்டு முழுவதும் சட்ட உதவிகள் செய்ததற்கு ரூ.1 கோடி கட்டணமாக பெறப்பட்டது என்றும், அது வெளிப்படையான விஷயம் என்றும் நளினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
On Sunday, September 21, 2014 by Unknown in ,    




ஆவின் பால் கலப்பட முறைகேட்டால் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
ஆவின் கூட்டுறவு நிலையங்களில் சேகரிக்கப்படும் பால், சென்னைக்கு கொண்டு வரப்படும் வழியில் திருடப்பட்டு, எடுக்கப்படும் பாலுக்கு நிகரான அளவு  தண்ணீர் அதில் கலக்கப்படுவதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.
 
இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரரும், அ.தி.மு.க. பிரமுகருமான வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
இதையடுத்து அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினமும் சுமார் 1,500 லிட்டர் பால் திருடப்பட்டதாகவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் திருட்டு நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி, ஆவின் நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் வைத்தியநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது இதுகுறித்த முழுமையான தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    


 


சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய  மழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு  சில இடங்களில் நேற்று காலை, மழை பெய்தது. நேற்று பெரும்பாலும்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், நேற்று காலை  குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதேபோல தமிழகத்தின்  பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இன்றும் மழை பெய்யக்கூடும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்ப சலனம்  காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது  இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் கலவை,  திண்டிவனம், காவேரிபாக்கத்தில் தலா 6 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.  ஆரணி, திருபுவனம், திருவண்ணாமலை, சோழிங்கநல்லூர், மதுரை  விமான நிலையத்தில் தலா 4 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர், போளூர்,  புதுக்கோட்டை, ஆம்பூர், திருவேலங்காடு, உத்திரமேரூர், செய்யாறு,  ஆர்.கே.பேட்டையில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    


 


தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை எல்லாம் களைந்திட, தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட தேமுதிகவினர் அனைவரும் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் சரியான நிலையை எடுத்து, தமிழகத்தின் மாபெரும் சக்தியாக தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கான பணியைச் சிறப்புடன் செய்து, அவர்களது மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும்.

இந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவன் மூலமும், வீடுதோறும் துண்டு அறிக்கைகள் கொடுப்பதன் மூலமும் பொதுமக்களின் கவனத்தை தேமுதிகவினர் ஈர்க்க வேண்டும்“ என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.