Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by TAMIL NEWS TV in ,    


லாரிகள் சிறைபிடிப்பு
அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை ஆழப்படுத்த ஈரோடு கனிமவளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் மண் அள்ள டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி லாரிகளில் சென்று கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அங்கு வந்து லாரிகளை சிறைபிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார், வருவாய் ஆய்வாளர் அழகேசன், கெட்டிசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
அவர்கள் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள், ‘ஏரியில் அள்ளப்படும் மண் ஒரு லாரிக்கு ரூ.200 என்று விற்கப்படுகிறது. எண்ணமங்கலம், அந்தியூர், கெட்டிசமுத்திரம், கோவிலூர், பச்சாம்பாளையம், சின்னதம்பிபாளையம் உள்பட அந்தியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்துக்கு வண்டல் மண்ணை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே ஏரியில் அள்ளப்படும் மண்ணை விவசாயிகளுக்கே மட்டுமே விற்க வேண்டும். செங்கல் சூளைக்கோ, சாலை அமைக்கவோ பயன்படுத்தக்கூடாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை யாரும் ஏரியில் மண் அள்ளிச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
On Wednesday, August 27, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோட்டில் பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தனியார் கார் ஷோரூம் காசாளரிடம் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்த விவரங்கள் வருமாறு:-

காசாளர்

ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ஷோரூம் பணத்தை பெருந்துறை ரோடு யு.ஆர்.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு ஷோரூமில் இருந்து சிவக்குமார் மொபட்டில் புறப்பட்டார்.

அவர் ரூ.6 லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்து வழக்கம்போல அவரது மொபட்டின் முன்பகுதியில் வைத்து இருந்தார். வங்கி அருகே சென்ற அவர், வங்கிக்கு செல்லும் வழியில் உள்ள சாலை தடுப்பு சுவரை சுற்றி வந்தார்.

மிளகாய் பொடி வீச்சு

தடுப்பு சுவரை கடந்து வருவதற்காக மொபட்டின் வேகத்தை சிவக்குமார் கட்டுப்படுத்தினார். அந்த நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிவக்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை வீசினார். மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் சிவக்குமார் எரிச்சலில் அலறித்துடித்தபடி தடுமாறி கீழே விழுந்தார்.

அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மொபட்டில் இருந்த ரூ.6 லட்சம் கொண்ட பணப்பையை கொள்ளையடித்துக்கொண்டு சிட்டாக பறந்து விட்டனர். கண் எரிச்சலில் துடித்துக்கொண்டிருந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ரோட்டில் இருந்து ஓரமாக அழைத்து வந்தனர்.

ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

இதுபற்றி தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காசாளர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கண்வலியால் துடித்துக்கொண்டு இருந்ததால் உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்.

பட்டப்பகலில்

கொள்ளை சம்பவம் நடந்த இடம் எப்போதும் பரபரப்பான பகுதியாகும். ஏராளமான வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு வைத்து உள்ளனர். அவர்கள் தினமும் இங்கே வருவதை கண்காணித்த கொள்ளையர்கள்தான் திட்டமிட்டு இந்த கொள்ளையில் துணிகரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும், சம்பவம் காலை 10 மணி அளவில் நடந்து உள்ளது.

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் ஏட்டுகள் ஆனந்த், தனசேகரன், பாபு மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    












On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். 
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார். 
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார். 
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் துயர்துடைப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிராணிகள் துயர்தடுப்பு சங்க கட்டிடத்தினை புனரமைப்பது, மேலும் வாகனங்களில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரும்போது அதிக அளவு கொண்டு வருவது, கால்நடைகளை துன்புறுத்துவது போன்ற செயல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் வெறிநாய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பிராணிகள் துயர்துடைப்பு சங்கத்திற்கு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வரும் 2ம் தேதி முதல் கல்விக்கடன் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 
2ம் தேதி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், 3ம் தேதி அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், 4ம் தேதி பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளிலும், 5ம் தேதி பவானிசாகர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 9ம் தேதி நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திலும், 10ம் தேதி கோபி ஊராட்சி ஒன்றியத்திலும், 11ம் தேதி பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திலும், 12ம் தேதி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திலும், 16ம் தேதி சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திலும், 17ம் தேதி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திலும், 18ம் தேதி கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திலும், 19ம் தேதி தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திலும், 26ம் தேதி தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. 
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோருடன் கல்விக்கடன் பெற விரும்புவோரின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியின் அனுமதி கடிதம், அரசின் கலந்தாய்வு கடிதம், ரேசன் கார்டு ஆகியவற்றின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். 
இந்த கல்விக்கடன் முகாம்களில் அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த வங்கியாளர்கள் கலந்து கொண்டு தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வார்கள். 
ஈரோடு மாவட்டத்தில் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்களை மாணவ, மாணவிகள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    

அந்தியூர், ; ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு ரூ.44 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் காவல் நிலையம் கவுந்தபாடி செல்லும் மெயின்ரோட்டில் 1998ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியில் இயங்கி வருவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மூலம் ஆப்பக்கூடல் காவல் நிலையம் கட்டிடம் கட்ட ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு பவானி மெயின் ரோட்டில், கால்நடை மருத்துவமனை அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. புதியதாக கட்டப்படும் காவல் நிலையம் இரண்டு அடுக்குமாடிகளை கொண்டது.
 பூமி பூஜையில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாலக்கால் போட்டு பணியைத் துவக்கிவைத்தார். எஸ்.ஐ.க்கள் மணி, ராமதிலகம், பூபதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆயத்த விளக்க வாயிற்கூட்டம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு நடந்தது. தொமுச தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரவை தலைவர் நடராஜன், மாவட்ட திமுக செயலாளர் ராஜா, மாநகர செயலாளர் குமார்முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    


உயர்கல்வியில் வளர்ச்சி
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அறக்கட்டளை செயலாளர் பி.சி.பழனிசாமி தலைமை தாங்கினார். தலைவர் ஈ.கே.லிங்கமூர்த்தி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
உலகில் உள்ள நாடுகளில் உயர் கல்வித்துறையில் இந்தியா மிகப்பெரிய நாடாக வளர்ச்சி அடைந்து உள்ளது. 1990–ம் ஆண்டில் உயர்கல்வியை பொருத்தவரை இந்தியாவில் 190 பல்கலைக்கழகங்களும், 7 ஆயிரத்து 350 கல்லூரிகளும் இருந்தன. இதில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 25 ஆயிரம் மாணவ–மாணவிகள் படித்து வந்தனர்.
தற்போது இது படிப்படியாக உயர்ந்து 2011–ம் ஆண்டு 610 பல்கலைக்கழகங்களும், 31 ஆயிரத்து 320 கல்லூரிகளும் என்ற வளர்ச்சியை எட்டியதுடன் 1 கோடியே 46 லட்சத்து 24 ஆயிரத்து 990 மாணவ–மாணவிகள் உயர்கல்வி படித்து உள்ளனர். இது உலக அரங்கில் உயர்கல்வியில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இந்திய வளர்ச்சி கண்டு உள்ளது.
பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் திறமையானவர்களாக உருவாக நாம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சிறந்த பேராசிரியரால் திறமை வாய்ந்த, தலைமை பண்பு கொண்ட பல மாணவர்களை உருவாக்க முடியும். எனவே மாணவ–மாணவிகளுக்கு பேராசிரியர்கள்தான் சிறந்த முன்உதாரணம்.
மாணவ–மாணவிகள் தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சமுதாயம் மற்றும் வர்த்தகத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முயலவேண்டும்.
என்ஜினீயரிங் மாணவ–மாணவிகளில் 1,000 பேரில் ஒருவர்தான் தொழில் முனைவோராக மாறுகின்றனர். மீதம் உள்ள 999 பேரும் வேலை தேடுபவர்களாக இருக்கின்றனர். இந்தநிலையை இளம் என்ஜினீயர்கள் அனைவரும் மாற்ற வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக ஒவ்வொரு இளம் என்ஜினீயர்களும் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என்ஜினீயர்கள் இந்தியாவின் ஒரு சொத்து என்பதை உணரவேண்டும். இந்த நாட்டை நிர்மாணிப்பதில் என்ஜினீயரிங் துறையின் பங்கு மிகவும் மகத்தானது. ஆராய்ச்சி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறவில்லை. எனவே ஆராய்ச்சி துறையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் வளர்ச்சி
1970–ம் ஆண்டுகளில் என்ஜினீயரிங் துறை ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி ஆண்களை பின்னுக்கு தள்ளிவிட்டு என்ஜினீயரிங் துறையின் தலைமை பொறுப்பில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.
வாழ்க்கையில் வெற்றி சுலபமாக கிடைத்து விடுவது இல்லை. அதற்காக பல சவால்களை வாழ்க்கையில் துணிந்து சந்திக்க வேண்டும். நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவை வெற்றி பெறுவதற்கான வழிகள் என்பதை உணர்ந்து மாணவ–மாணவிகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
இதைத்தொடர்ந்து கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில், கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் வி.கே.முத்துசாமி, பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் சி.குமாரசாமி, கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தன், மெட்ரிக் பள்ளி தாளாளர் கே.செங்கோட்டுவேலன் உள்பட பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் மாணவ–மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    


ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நுழைவு வாயில் கதவு திறப்பு விழா, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடந்தது. ஜேசீஸ் இயக்க உலக தலைவர் டி.பாஸ்கரன் தலைமை தாங்கி நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாமை ஜேசீஸ் தேசிய தலைவர் தீபக் நகார் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை 17–வது மண்டல ஜேசீஸ் நிர்வாகி எஸ்.எம்.பழனியப்பன் தொடங்கி வைத்தார். ரத்ததான முகாமில் 64 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவ முகாமில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. வீரப்பன் சத்திரம் பகுதி கழகம் சார்பில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கட்சியின் அவை தலைவர் பொன்.சேர்மன்தலைமை தாங்கி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    

கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்கு காலை 7 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் காலை 10 மணியில் இருந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர்.என். கிட்டு சாமி, செல்வகுமார சின்னையன் எம்.பி., மாநில விதை நேர்த்திக்குழு உறுப்பினர் புதூர் கலைமணி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் சரவணன், திருப்பணி கமிட்டி தலைவர் டாக்டர் நடராஜன், பேரூராட்சி துணை தலைவர் மனோகரன் பொயதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். வரிசையாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.
முன்னதாக அமைச்சர் தங்கமணிக்கு கோவில் சார்பாக செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார்.
On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோட்டை அடுத்த கூரைபாளையத்தில் நந்தா சென்ட்ரல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விளையாட்டு விழா நந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடந்தது. பள்ளியின் முதன்மை முதல்வர் லிடியா ஜோஸ்வா வரவேற்றார்.
விழாவில் ஒலிம்பிக் தீபத்தை அர்ஜுனா விருதுபெற்ற ஒலிம்பிக் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இதன்பிறகு மாணவ– மாணவிகளின் உடற்பயிற்சி நடனம், ஏரோபிக் நடனம், கிரிக்கெட்டி நடனம், யோகா போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்கேட்டிங் மாணவர்களும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
விழாவில் ரிலே, 10 மீட்டர் ஒட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவர் சிபி அஷ்வந்த் முதல் பரிசும், சதிஷ் குமார் 2–வது பரிசும், அஜித் 3–வது பரிசும், பெற்றனர்.
அனைத்து போட்டி களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் விளையாட்டு அறிக்கையை உடல்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் வாசித்தார். நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்த குமார் பிரதீப், முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.
On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு குமலன் குட்டை பகுதியில் ஒரு தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. இங்கு கேசியராக சிவகுமார் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் காலையில் பெருந்துறை ரோட்டில் யு.ஆர்.பி. நகரில் உள்ள ஸ்டேட் பாங்கில் கம்பெனி பணத்தை கட்ட செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை 10 மணியளவில் சிவகுமார், கம்பெனி பணம் ரூ.6 லட்சத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தனது மொபட்டில் வங்கிக்கு சென்றார். பண பையை மொபட்டுக்கு முன்னால் வைத்திருந்தார்.
பெருந்துறை ரோட்டில் வங்கிக்கு செல்ல வேண்டும் சென்டர் மீடியனை சுற்றி தான் செல்ல வேண்டும். இதனால் மொபட்டை மெதுவாக வலதுபக்கம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், வேகமாக வந்தனர். திடீரென அவர்கள் 2 பேரும் , மொபட்டில் நின்றிருந்த சிவகுமார் அருகே வந்ததும் அவரது கண்ணில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்து கண் எரிச்சல் தாங்காமல் அவர் கூச்சல் போட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 2 வாலிபர்களும் மொபட்டில் முன் இருந்த ரூ.6 லட்சம் பணபையை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
பட்டப்பகலில் அதுவும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோட்டில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு நின்ற பொதுமக்களும் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கார்த்திக் மற்றும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்ணில் மிளகாய் தூவப்பட்டதால் சிவகுமார், தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிவகுமார் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இன்று பட்டப்பகலில் நடுரோட்டில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.6 லட்சம் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    
தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற விலையில்லா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தில் மிகவும் முக்கியமான உன்னதமான இடம் வகிப்பது விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலெக்டரின் தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த ஆடுகளை எப்படி பராமரித்து இனப்பெருக்கம் செய்வது? என்பது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பயனாளிகளின் விருப்பப்படி 6 முதல் 8 மாதம் வயதுள்ள ஆடுகள் சந்தையில் இருந்து வாங்கி தரப்படுகிறது. அந்த ஆடுகள் வாங்கியவுடன் அதற்கு காப்பீடு செய்யப்படுகிறது.
கால்நடை துறைகளின் மூலம் மாதம் ஒரு முறை அரசால் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, தொடர் சிகிச்சை போன்ற பராமரிப்பு நடவடிக்கை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 147 கிராமங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 932 பயனாளிகளுக்கு ரூ.18 கோடி செலவில் 55 ஆயிரத்து 728 ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆடுகள் இதுவரை 60 ஆயிரத்து 215 குட்டிகள் போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த விலையில்லா ஆடுகள் பெற்ற பயனாளிகள் பலர் தங்கள் வாழ்வை வளமாக்கி உள்ளனர். இவர்களில் பெருந்துறை அருகே உள்ள கந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் என்ற பெண் கூறியதாவது:–
என் கணவர் பெயர் வெள்ளியங்கிரி. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவசாய கூலி தொழிலாளர்களான எங்களுக்கு பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பித்தேன். என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 வெள்ளாடுகள் வாங்கினேன். நல்ல முறையில் அதனை வளர்த்து வந்தோம். அந்த ஆடுகள் 60 குட்டிகளை ஈன்றுள்ளது. என் மகளை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைக்கவும் மற்றும் மகனின் படிப்பு செலவுக்கும் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய கடனை அடைப்பதற்காக 34 ஆடுகளை விற்றேன். இதன் மூலம் எனக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கிடைத்தது. இந்த பணத்தை கொண்டு படிப்பு செலவுக்கு வாங்கிய கடனை அடைந்தேன். மீதி பணத்தை மகளின் திருமணத்துக்கு சேமித்து வைத்துள்ளேன்.
ஆடுகள் மூலம் கிடைத்த வருமானத்தில் என் மகள் என்ஜினீயரிங் முடித்து இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள். இத் திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு நன்றியை காணிக்கையாக்கி கொள்கிறேன்.
இவ்வாறு நல்லம்மாள் கூறினார்.
அதே பகுதியை சேர்ந்த குமுதா என்ற பெண் கூறியதாவது:–
விலையில்லா ஆடுகள் திட்டத்தின் மூலம் 4 ஆடுகள் பெற்றேன். இதுவரை இந்த ஆடுகள் 57 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் 34 ஆடுகளை விற்று என் ஊரிலேயே ரூ.1½ லட்சம் மதிப்பில் 4 சென்ட் நிலம் வாங்கி உள்ளேன்.
என் வாழ்நாள் கனவான சொந்த இடம் வாங்குவதை இத்திட்டம் மூலம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். 
On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் எலக்டிரிக் லோகோ செட், மற்றும் டீசல் லோகோ செட் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள ரெயில்வே காலனி பகுதிகளையும் அவர் சுற்றி பார்வையிட்டார்.
பின்னர் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும் ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு ரெயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
On Monday, August 25, 2014 by TAMIL NEWS TV in ,    





Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    
தந்தை இறப்பு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் செலம்பன்பாறை தோட்டத்தில் வசித்து வருபவர் நடராஜ் (வயது 48). இவர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நடராஜின் தந்தை குப்புசாமி. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் தந்தை குப்புசாமியின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நடராஜ் வீட்டில் ஏ.டி.எம். கார்டை பார்த்தார். ஆனால் ஏ.டி.எம். கார்டை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று தந்தையின் கணக்குகளை சரி பார்த்தார். அப்போது அதில் கடந்த 3 மாதங்களில் யாரோ ரூ.16,400 பணம் எடுத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் நடராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில் நடராஜின் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்த திருச்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்கிற சிவா (வயது 26) என்பவர், நடராஜின் தந்தை குப்புசாமியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சிவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவா வேலாம்பாளையத்தில் உள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிவாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் குப்புசாமி இறப்பதற்கு முன் அவருடைய வங்கி ஏ.டி.எம். மின் ரகசிய எண்ணை (பாஸ்வேர்ட்) சிவாவிடம் கூறியுள்ளார். குப்புசாமி இறந்த பின்பு வீட்டின் அலமாரியில் இருந்த அவருடைய ஏ.டி.எம். கார்டை திருடி கடந்த 3 மாதங்களாக சிவா பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    

கோரிக்கை மனு
இதுகுறித்து தடப்பள்ளி–அரக்கன்கோட்டை–பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
மாநில அளவில் 1,267 உள்வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வட்டத்திற்கும் ஒரு நில அளவர்கள் (சர்வேயர்) நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் 1,267 உள்வட்டத்திற்கு 800–க்கும் குறைவான நில அளவர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 35 உள்வட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 20 நில அளவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.
நில அளவர்கள்
விவசாயிகளுடைய நிலம் சார்ந்த பிரச்சினைகள், நீர் வழித்தடங்களில் உள்ள பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நில அளவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் நில அளவீடு பணிகளுக்கு விவசாயிகள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை நில அளவீடு (சர்வே) செய்து “அளவீடு கற்கள்“ நட வேண்டும். நில அளவீடு செய்வதற்கு புவியியல் தொழில்நுட்பம் (ஜி.பி.எஸ்.), சி.ஸ்டார் எனப்படும் தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. புவியியல் தொழில்நுட்ப கருவிகள் ஈரோடு மாவட்ட நில அளவர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறையை பயன்படுத்தி நில அளவீட்டு பிரச்சினையை சரிசெய்ய வருவாய்த்துறை முயற்சி செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நில அளவர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.
On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    




தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைகளை அதிகாரிகள் நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ரெ.சதீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் வந்திருந்த விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூறினார்கள்.
அதன் விவரம் வருமாறு:–
பயிர்க்கடன்
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மை பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் பாசன காலம் முழுவதும் தண்ணீர் அளவு குறையாமல் விட வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் அனைத்து பாசனங்களும் விவசாயத்துக்காக திறக்கப்பட்டு இருப்பதால் விதை மற்றும் இடுபொருட்கள் தேவை அதிகரித்து இருக்கிறது. இவற்றை வேளாண்மை அதிகாரிகள் அதிக அளவில் கையிருப்பு வைக்க வேண்டும். குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை தேவையான அளவு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு கடன் பெற்று, வறட்சி காரணமாக திரும்ப செலுத்த முடியாதவர்களின் நிலுவையை காரணம் காட்டி கடன் வழங்குவதை தடுக்க கூடாது.
போலி மருந்து
ஈரோடு மாவட்டத்தில் போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நடமாட்டம் உள்ளது. சமீபத்தில் 4 இடங்களில் போலி உர பிரச்சினை ஏற்பட்டது. கடந்தவாரம் கோபியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயியின் வயலில் போலி பூச்சிக்கொல்லி மருந்தால் 2 ஏக்கர் நெற்பயிர் கருகியது. இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரை அழைத்து கூட்டம் போட்டு அனுப்பி விடுகிறார்கள். இதுபோல் இல்லாமல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.20 கோடி நிலுவைத்தொகையை கடந்த ஜனவரி மாதமே வழங்குவதாக முத்தரப்பு கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஆனால் ஆகஸ்டு மாதம் நிறைவடைந்தும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிப்பு
மத்திய அரசு வேளாண் விளைபொருட்களுக்கு ஆதாரவிலை அறிவித்தபின்னர் மாநில அரசு விலை அறிவிக்கக்கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் விவசாயிகளுக்கு பாதகமாக உள்ளது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதுபோல் விவசாய நிலங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்ட உள்ளாட்சி அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. இது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஒரு இடத்தில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் இல்லை என்றால் உடனடியாக அடுத்த இடத்தில் தோண்டுவோம். ஆனால் அனுமதி பெறுவது என்றால் 2 மாத காலம் காத்திருக்க வேண்டும். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
ஈரோடு சத்தி ரோடு 30 அடிக்கு அகலப்படுத்தப்படுவதாக தெரிகிறது. அப்படி விரிவுபடுத்தப்படும்போது மரங்களை வெட்டாமல் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை கூறினார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசினார்கள்.