Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    











தமிழக அரசு விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடத்தைப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

2013, செப்டம்பரில் ரகுராம் ராஜன் குழு அறிக்கையில், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறுகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் ரூ.1.27 லட்சம் கோடியாகும் இதில் இலவசத் திட்டங்களுக்கு மட்டும் ரூ.250 கோடி செலவழிக்கப்படுகிறது.

இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக் கடைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதனால் பொருளாதாரம் வளராது.

எனவே விவசாயம், தொழில் துறை, மின்சார உற்பத்தி, சேவைத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்“ என்று வைகோ தெரிவித்துள்ளார்.
On Saturday, September 13, 2014 by Unknown in ,    

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் சிலிண்டர் விலையை உயர்த்தப் போவதாக சென்னை தொழில் சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை தொழில்சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை சிலிண்டரில் அடைத்து விற்பனை செய்யும் நிலையங்கள் உள்ளன. கடுமையான மின்வெட்டு காரணமாக இதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மறுபுறம் மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்ஸிஜனுக்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களுடன் இணைத்து வரி விதிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 300 முதல் 400 சதவீதம் வரை வரியை ஏற்றியுள்ளனர். இதனால் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சமீபத்தில் ஆந்திரா, கர்நாடகாவில் சிலிண்டருக்கான விலையை ஏற்றியுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் விலையை குறைத்து வந்த நாங்கள், மேற்கண்ட நெருக்கடி காரணமாக விரைவில் விலையை உயர்த்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    



சென்னை: தீபாவளிக்கு கடந்த ஆண்டைப் போலவே அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்புரில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராகேஷ்மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே அதிக விபத்துகள் நடைபெறுகின்றன என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார். விபத்துக்களைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ரயில்வேயில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தேவையான நிதி இல்லை என்று ராகேஷ்மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
On Friday, September 12, 2014 by Unknown in ,    


பெங்களூரு: பெண் சிஷ்யை பாலியல் பலாத்கார வழக்கில், கடந்த  8ம் தேதி நடந்த ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், அவரிடம் மீண்டும் பரிசோதனை நடத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 8ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நடந்த சோதனையின் முடிவுகளை இதுவரை போலீசாரிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை. பரிசோதனை முழுமையாக முடியாததால் ரிப்போர்ட் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, பரிசோதனையிலிருந்து தப்பிக்க, சட்டத்தின் உதவியை நித்யானந்தா நாடியுள்ளார். எனினும் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 53ன்படி, வலுக்கட்டாயமாக நித்யானந்தாவை பரிசோதனைக்கு உட்படுத்த சட்டத்தில் இடமுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீண்டும் ஆண்மை பரிசோதனைக்கு உட்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது
On Friday, September 12, 2014 by Unknown in ,    


பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தியில் உள்ள தங்களது பாரம்பரியமான மீன் பிடிக்கும் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்கி கடத்தி செல்லப்படுவது பற்றி நீங்கள் கடந்த மே மாதம் பதவி ஏற்றதிலிருந்து பல தடவை உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.
சிறிது இடைவெளிக்கு பிறகு இலங்கை மீண்டும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. கடைசியாக இது தொடர்பாக உங்களுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்படுவது 3 தடவை நடந்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து 6 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற 30 மீனவர்கள் கடத்தி தலைமன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட் டுள்ளனர்.
3–வது சம்பவமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றிருந்த 4 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
இந்த பிரச்சனையில் உங்களது அரசு மேற்கொள்ளும் சரியான அணுகுமுறைக்கு நான் ஏற்கனவே பாராட்டி உள்ளேன். உங்களது அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் சரியான முறையில் செயல்பட்டனர்.
என்றாலும் இலங்கையின் அணுகுமுறை மாறவில்லை. அவர்கள் தொடர்ந்து கடுமையான போக்கையே கடைபிடிக்கிறார்கள். அப்பாவி தமிழக ஏழை மீனவர்களுக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் தந்திரமாக செயல்படுகிறார்கள். இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அவர்கள் தமிழக மீனவர்களை விடுவித்து இருந்தாலும் 64 படகுகளை இன்னும் விடுவிக்கவில்லை. இந்தப் போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் தீர்வு காண முடியும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
On Friday, September 12, 2014 by Unknown in ,    



சரக்குகள்-சேவை வரி சட்டத் திருத்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் 3 ஆம் தேதி தங்களிடம் நான் நேரில் அளித்த மனுவில், உத்தேசிக்கப்பட்டுள்ள சரக்குகள்-சேவை வரி தொடர்பாக, தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

இதையடுத்து, சரக்குகள்-சேவை வரி தொடர்பான திருத்தப்பட்ட அரசியல் சட்ட வரைவு மசோதாவைக் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இதில் இந்த வரைவு மசோதாவில், தாம் தெரிவித்திருந்த சில முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற மாநில நிதியமைச்சர்களின் மாநாட்டில், சரக்குகள்-சேவை வரி மீதான வரையறை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருப்பது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கலப்புத் திட்டத்துக்கான வரையறை ஒரு சதவீத அடிப்படை வட்டியுடன் ரூ.50 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
On Friday, September 12, 2014 by Unknown in ,    



2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றஞ் சாற்றியுள்ளார்.

தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா  இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்த போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது. இந்த இரண்டு ஊழல் வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஊழல்களை அம்பலப்படுத்திய போது மத்திய கணக்கு தணிக்கையாளராக இருந்தவர் வினோத் ராய். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர், ‘ஒரு கணக்காளன் மட்டும் அல்ல’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் இந்த ஊழல்கள் பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் மன்மோகன் சிங் மீது குற்றம் சாற்றியுள்ளார்.

வினோத் ராய் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகக் குற்றம் சாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரங்களில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க மன்மோகன் சிங்குக்கு எந்த வழியும் இல்லை.

2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் மன்மோகன் சிங் பதில் எழுதி இருக்கிறார். நான் எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து ஒரு பதில் கூட கிடையாது.

ஒரு சமயம் நான் அவரை சந்தித்த போது, ‘என்னிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள் என கருதுகிறேன்‘ என்று கூறினார். அந்த சமயத்தில் அவர் ஆ.ராசாவுக்கு ஒரு நாளைக்கு இருமுறை பதில் அளித்தார்.

அப்படி இருக்கும் போது, எடுக்கப்பட்ட முடிவுகளில் அவர் எப்படி பொறுப்பாளி ஆகாமல் இருக்க முடியும்? நிதி ரீதியாக மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும், செய்யும் பணியிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட முடியாது. அதுதான் அவருக்கு மிகுந்த கவலையாகிவிட்டது.

அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு செய்த முறை தவறானது என்று நவம்பர் 16 ஆம் தேதி மன்மோகன் சிங் என்னிடம் கூறினார்.

அதற்கு நான் அவரிடம், ‘சார் எங்கள் மதிப்பீடு சரியான முறையில் செய்யப்பட்டதுதான், அது நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முறைதான்‘ என்று பதில் அளித்தேன். இவ்வாறு வினோத் ராய் தெரிவித்தார்.

Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    



முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே பிப்ரவரி 2 ஆம் தேதி தே.மு.தி.க. சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.க்கள் பார்த்த சாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக அரசு மற்றும் காவல் துறையினரை, அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் பொன்.சிவா, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 
இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள அந்த நகலை சமர்பித்து மனுதாக்கல் செய்தனர்.
 
பின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
On Thursday, September 11, 2014 by Unknown in ,    


press, police, chennai

சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னையிலிருக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளன.

இந்தச் சுற்றறிக்கையை பகிரங்கப்படுத்திய சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான அன்பழகன், இது தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலிடம் புகார் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

சென்னை பிரஸ் கிளப்பும் இதைக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய பாரதி தமிழன், இது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

அதிகாரிகள் கவனித்துக்கொள்ள வேண்டிய பத்திரிகையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் செய்தியாளரான முத்தலீஃப், குற்றங்களைக் குறைக்க வேண்டிய காவல்துறை, குற்றங்களை மறைப்பதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால், காவல்துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி, தி.மு.க. போன்ற கட்சிகள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தி.மு.கவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், பத்திரிகையாளர்களைக் கண்காணிப்பதற்கான சென்னைக் காவல்துறையின் இத்தகைய முயற்சி, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், சென்னை நகரக் காவல்துறை இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஓய்வுபெற்றதையடுத்து, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியானதைப் போல எவ்வித சுற்றறிக்கையும் பிறப்பிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On Thursday, September 11, 2014 by Unknown in ,    


stalin, dmk, karunanithi

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவரின் உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க என்ன காரணம் என்பதை அறிவதற்காக, கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் வகுத்துத் தந்த பாதையில் தான் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"தலைவரின் அடிஒற்றி நடப்பவன்"

"இந்தச் சுற்றுப் பயணத் துவக்கத்திலேயே சில ஏடுகள் தலைமையைப் பிடிக்கத் திட்டமிட்டு ஸ்டாலின் சுற்றுப்பயணம் எனத் தலைப்பு" இட்டிருந்ததாகவும் "தலைவரையும் இந்த இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் தலைவரின் அடி ஒற்றி நடப்பவன்" என்றும் "தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகங்கள், ஓய்வறியா உழைப்பு என அத்தனை குணங்களையும் பெற்றவர்கள் தோன்றுவது எளிதல்ல; அதனை உணர்ந்தவன் நான்" என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

"தலைவருக்கும் எனக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்குக் கூறிக்கொள்வேன் - சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள்" என ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    

 
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராதா (39) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் அளித்து கூறியதாவது:அம்பத்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளேன். காலையில் சென்று மாலையில்தான் திரும்புவேன்.

எனக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பயன் இல்லை. எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அம்பத்தூர் சாரங்கபாணி தெருவில் உள்ள அக்கு பஞ்சர் மருத்துவர் சதீஷ் கண்ணாவிடம் (24) சிகிச்சை பெற்றால் எந்த வகையான நோய் என்றாலும் உடனடியாக சரியாகி விடும். பக்க விளைவுகள் ஏதும் இருக்காது. கட்டணமும் மிக மிக குறைவு என்று ஆலோசனை கூறினர். 
 
இதனால் சில தினங்களுக்கு முன் சதீஷ் கண்ணாவிடம் சிகிச்சைக்கு சென்றேன். கனிவுடன் பேசினார். நோயை உடனடியாக குணப்படுத்தி விடலாம் என்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டார். சற்று நேரத்தில் நான் மயங்கி உள்ளேன். இதை பயன்படுத்தி என்னை பல கோணங்களில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். வீடியோவும் பதிவு செய்து வைத்துள்ளார்.

அந்த படங்களை என்னிடம் காண்பித்து எனது ஆசைக்கு இணங்க மறுத்தால் ஆபாச காட்சிகளை வெளியிட்டு விடுவேன். இணையதளத்திலும் பரவி விடும். பிறகு நீ வெளியில் தலைகாட்ட முடியாது. தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று மிரட்டினார். மேலும், எனது மகளையும் வெளிநாடு கடத்தி சென்று விடுவதாக பயமுறுத்துகிறார். எனவே, அக்குபஞ்சர் மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி அழுதார். 
 
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ராஜேஷ் கண்ணா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவரை ஆய்வாளர் அன்புக்கரசி கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown in ,    
 சென்னை மெரினா காவல்நிலையம் D5 வாசலில் 15நாட்களுக்கு மேலாக சாக்கடை நீர் தேங்கியுள்ளது.காவலர்கள் மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் புகார் அளிக்கவரும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேயரிடம் நேரடியாக புகார் அளிக்கபோவதாக தெரிவிக்கின்றனர்..


       
On Thursday, September 04, 2014 by Unknown in ,    
 சென்னை அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் ராஜஸ்தான் வாலிபர் சூரியகாந்த் (40)என்பவருக்கு K .R .G .பாலகிருஷ்ணன் என்ற மருத்துவரால் இருதய மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது .மாற்று இருதயம் கொண்டுவந்த வாகனம் சரியான நேரத்திற்கு வந்ததும், அவர்களுக்கு போக்குவரத்துத்துறை வழி அமைத்து தந்ததும் காண்போரை மெய்சிலிர்க்கவைத்தது .





Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
தாம்பரம் அருகே லாரியை மடக்கி ரூ. 6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திச் சென்றதாக சென்னை ஆயுதப்படை காவலர் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட்டில் மருந்து மூலப் பொருள்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் சர்க்கரை ஆலை கழிவுப் பொருளான மொலாசஸில் இருந்து "எபிட்ரின்' என்ற ஆஸ்துமா உள்ளிட்ட சில நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருளைத் தயாரித்து சுவிட்சர்லாந்து, இராக் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 3 லாரிகளில் தலா 1,000 கிலோ மதிப்புள்ள எபிட்ரின் மருந்து மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்ய சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வல்லக்கோட்டை சந்திப்பு வழியாக தாம்பரம் நோக்கி அந்த லாரிகள் சென்றன.
2 லாரிகள் சென்றுவிட்ட நிலையில், கடைசியாக வந்த லாரியை மலைப்பட்டு கிராமத்தில் இரவு 12.30 மணிக்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் மடக்கினர்.
லாரியை, மோசூர்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (26) ஓட்டி வந்தார். அதில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அதிகாரியாக கண்ணபிரான் (52) உடன் வந்தார்.
லாரியை வலுக்கட்டாயமாக கடத்திய அந்த மர்ம நபர்கள், ஓட்டுநர் தினேஷையும், கண்ணபிரானையும் தாக்கிவிட்டு 600 கிலோ எடையுள்ள மருந்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு, லாரியை அப்படியே விட்டுவிட்டு, காரில் தப்பினர்.
அதே தினத்தில் இரவு ரோந்துப் பணியில் இருந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீஸார் அந்த காரை மடக்கினர். அப்போது, அதில் இருந்த ஒரு நபர், தான் காவலர் என்றும், அதற்கான அடையாள அட்டையையும் போலீஸாரிடம் காட்டினார்.
அதனால் அப்போது போலீஸார் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிலையில், மருந்து மூலப் பொருள்கள் கடத்தப்பட்டதாக லாரி பாதுகாப்பு அதிகாரி கண்ணபிரான் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், வேலூர் வந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படை காவலர் கார்த்திகேயனிடம் (37) போலீஸார் விசாரித்ததில் அவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது.
மேலும் அவர் கூறியதன் அடிப்படையில், வேலூரைச் சேர்ந்த ஜார்ஜ் (27), பாலாஜி (27), கார்த்திக் (30) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்கள், கார்கள் கைப்பற்றப்பட்டன.
கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட மற்றொரு க்காவலர் செல்வக்குமார் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
மதுக் கடைகளை மூடக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.2) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகளை மூட மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அமல்படுத்தக் கோரி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி என்.கிருபாகரன், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனு:
மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்காக சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தான் கல்லூரிக்கு இணைவிப்பு பெறப்பட்டுள்ளது.
கல்லூரி அருகே ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 44 சென்ட் நிலத்தை சம்பத் என்பவரிடம் இருந்து வாங்கினோம். அந்த இடம் ஆதிலட்சுமியிடம் இருந்து வேலுச்சாமி பண்டாரம் நிலம் பரிமாற்ற முறையில் பெற்றிருந்தார். பிறகு அவரிடமிருந்து சம்பத் வாங்கியுள்ளார்.
எனவே, நிலம் வாங்கியதில் எவ்வித ஒளிவுமறைவும் இல்லை. கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது.
அதனால் பாஜகவுக்கு ஆதரவு தரலாமா என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  திமுக, மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு போதிய அவகாசம் தராமல், ஜனநாயகத்துக்கு முரணாக மாநிலத் தேர்தல் ஆணையம் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை தேமுதிகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர்களையும் சந்தித்து, பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தேமுதிக அதன் முடிவை உடனே தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனினும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் தேமுதிக உறுதியாக இருந்து வருகிறது.
பாஜகவுக்கு ஆதரவு? உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில், பாஜக போட்டியிட்டால் அதற்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்பது தொடர்பாக தேமுதிகவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2016-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று பாஜக கருதுகிறது.
ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் தற்போது சரியான ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் பாஜகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக விஜயகாந்த் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பதற்கு உரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல், தமிழகத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளன.
இந்தத் தேர்தல் ஜனநாயகரீதியாக நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பெனி பதிவாளர் மனுநீதிசோழனை கோர்ட்டு காவலில் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில், மத்திய அரசு நிறுவனமான கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் உள்ளது. புதிதாக தொடங்கப்படும் கம்பெனிகள் இந்த அலுவலகத்தில்தான் பதிவு செய்யவேண்டும். இந்த அலுவலகத்தில், கம்பெனி பதிவாளவராக டாக்டர் மனுநீதி சோழன் (வயது 50) என்பவர் உள்ளார்.
இதற்கிடையில், தொழில் அதிபரும், செட்டிநாடு குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.எம்.ராமசாமியை, அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமித்து செட்டிநாடு குழுமத்தின் பொதுகுழுவில் தீர்மானம் இயற்றப்போவதாகவும், அவ்வாறு இயற்றப்போகும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறி கம்பெனி பதிவாளர் டாக்டர் மனுநீதி சோழனுக்கு எம்.ஏ.எம். ராமசாமி ரூ.10 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்போவதாகவும் சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து கடந்த 26–ந் தேதி வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று முன்தினம் லஞ்சம் பணம் வாங்கும்போது மனுநீதி சோழனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து மனுநீதி சோழனிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், இரவு 12 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீசில் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் ஒப்படைத்தனர். இரவு நேரத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அவரை மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், அவரை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு கோர்ட்டில், நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து மனுநீதிசோழனை ஒருநாள் (இன்று மதியம் வரை) கோர்ட்டு காவலில் இருந்து எடுத்து புழல் மத்திய ஜெயிலில் அடைக்கும்படி, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து, மனுநீதிசோழனை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (28–ந் தேதிக்கு) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக மனுநீதி சோழனை ஒருவாரம் (7 நாட்கள்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுநீதி சோழன் சார்பில் ஆஜரான வக்கீல் ரோகித், ‘சி.பி.ஐ. அதிகாரிகளின் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும், இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்‘ என்றும் வாதிட்டார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையையும் வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்பின்னர், மனு நீதிசோழனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அவரை படம்பிடிக்க முயன்ற கேமராமேன்களுக்கும், மனுநீதிசோழனின் நண்பர்களுக்கும் தள்ளுமுள்ளு நடந்தது.

Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    







சென்னை: தனியார் பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு சேவை வரியையும் உயர்த்தி அறிவித்துள்ளதால், தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் இயஙகும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இன்றிலிருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக ஆம்னி பஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் தேதியில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனடிப்படையில் தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்
On Monday, September 01, 2014 by Unknown in ,    


தண்டையார்பேட்டை, : மனைவியை பற்றி ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு சமையல்காரரை கொலை செய்தேன் என்று பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் (40). சமையல்காரர். இவர், கடந்த 6ம் தேதி ராயபுரம் சிங்கார தோட்டம் பகுதியில் தலை யில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ராயபுரம் போலீசார், 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். குமாருடன் பணியாற்றிய மாரியப்பன் (30) என்பவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். 
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், தென்காசி அருகே இலஞ்சி என்ற கிராமத்தில் மாரியப்பன் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாரியப்பனை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாரியப்பன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நானும் சமையல் வேலை செய்தேன். குமார் சரியாக சம்பள பணம் கொடுக்க மாட்டார்.  மேலும் என்னுடைய சம்பளத்தை வாங்கி மது வாங்கி குடித்துவிடுவார். கடந்த 6ம் தேதி இருவரும் மது குடித்தோம். அப்போது என் மனைவி பற்றி குமார் ஆபாசமாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினேன். தொடர்ந்து என் மனைவியை பற்றி மேலும் ஆபாசமாக பேசினார். இதனால் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 
இதையடுத்து, குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.