Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கோபி மொடச்சூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் பவானி புதிய பஸ்நிலையத்தில் இருந்து மைலம்பாடி வழியாக செல்லும் பஸ்சில்ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது இவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு முன்பு பஸ் டிரைவர் போன்று காக்கிச்சட்டை அணிந்த ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது ஆறுமுகத்துக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மறைத்து வைத்து இருந்த பிளேடால் ஆறுமுகத்தை கழுத்து, மார்பு மற்றும் கைகளில் அறுத்துவிட்டு தப்பி ஓடினார். அந்த மர்மநபரை பிடிக்க ஆறுமுகம் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். ஆனால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை பிளேடல் கீறிவிட்டு தப்பிஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஈரோட்டில் வியாபாரியை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறித்த போலி நிருபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பர்னஸ் ஆயில் மோசடி

கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பர்னஸ் ஆயில் பெங்களூரில் இருந்து டேங்கர் லாரிகளில் ஈரோடு மாவட்டம் நசியனூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது இந்த ஆயிலை டிரைவர்கள் சிலர் தங்கள் லாரிகளில் இருந்து திருடி குறைந்த விலைக்கு நசியனூர் மற்றும் பல பகுதிகளில் விற்பதாக கூறப்படுகிறது. லாரியில் இருந்து எடுக்கப்பட்ட பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக அதே அளவில் ஏதாவது பழைய ஆயிலை லாரியில் ஏற்கனவே உள்ள பர்னஸ் ஆயிலுடன் டிரைவர்கள் கலந்து விடுவார்கள்.

இந்த பர்னஸ் ஆயிலை பெறும் தொழிற்சாலை நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற மோசடி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

பழைய இரும்பு வியாபாரி

ஈரோடு அருகே உள்ள நசியனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). பழைய இரும்பு வியாபாரி. அந்த பகுதியில் கடை வைத்து உள்ளார்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்ற டிரைவர் பெங்களூரில் இருந்து லாரியில் பர்னஸ் ஆயிலுடன் நேற்று முன்தினம் நசியனூர் வந்தார். பின்னர் ராமசாமியின் கடை முன்பு லாரியை நிறுத்தினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கடை முன்பு பேசிக்கொண்டிருந்தனர்.

மிரட்டல்

அப்போது 4 பேர் 2 மோட்டார்சைக்கிளில் ராமசாமியின் கடை முன்பு வந்து நின்றனர். பின்னர் அவர்கள், ‘தாங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு மாத இதழ் பத்திரிகையில் வேலை செய்கிறோம். சென்னையை சேர்ந்த வேலு பிரபாகரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். கோபால் திருச்செங்கோடு தாலுகா போட்டோ கிராபர். சிவக்குமார் (42) ஈரோடு தாலுகா நிருபர் மற்றும் போட்டோ கிராபர். பிரகாஷ் பத்திரிகையின் ஈரோடு பகுதி முகவர்‘ என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ராமசாமியை பார்த்து ‘நீங்கள் பெங்களூரில் இருந்து வரும் லாரிகளில் பர்னஸ் ஆயிலை திருடி விற்பனை செய்து வருகிறீர்கள். இது சட்டப்படி குற்றம். நீங்கள் பர்னஸ் ஆயில் திருடுவது போன்ற படம் எடுத்து உள்ளோம். எனவே இந்த செய்தியை எங்கள் பத்திரிகையில் படத்துடன் வெளியிட்டுவிடுவோம். அப்படி செய்தி வெளிவந்தால் உங்கள் மானம், மரியாதை ஆகியவை போய்விடும். மேலும் போலீஸ், வழக்கு என்று அலையவேண்டி வரும்‘ என்றும் மிரட்டினர்.

ரூ.1¼ லட்சம் பறிப்பு

அவர்களின் மிரட்டலை கண்டு பயந்த ராமசாமி நான் லாரியில் இருந்து பர்னஸ் ஆயிலை திருடும் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூறிப்பார்த்தார். ஆனால் அவர்கள் ராமசாமியை தொடர்ந்து மிரட்டினர். அதுமட்டுமின்றி இந்த செய்தி எங்கள் பத்திரிகையில் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஆள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

அவர்களின் மிரட்டலில் பயந்து போன ராமசாமி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை வாங்கி அந்த 4 பேரிடம் கொடுத்தார்.

லாரி உரிமையாளரிடம்...

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சட்டென்று அங்கு நின்று கொண்டிருந்த லாரியில் ஏறி பர்னஸ் ஆயில் கொண்டு வருவதற்கான அனுமதி கடிதம் மற்றும் லாரியின் உரிமையாளரான கோவையை சேர்ந்த செந்தில் என்பவரின் செல்போன் எண்ணையும் எடுத்தனர்.

நீங்கள் (ராமசாமி) பணம் தராவிட்டால் என்ன. நீங்கள் கொடுக்க வேண்டிய மீதி பணத்தை லாரி உரிமையாளரிடம் (அதாவது செந்திலிடம்) நாங்கள் வாங்கி விடுவோம் என்றனர். அப்படியும் லாரி உரிமையாளர் கொடுக்காவிட்டால் இந்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவோம். இதனால் அவருடைய பர்னஸ் ஆயில் ஒப்பந்தம் ரத்தாவதுடன், லாரியையே பறிமுதல் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறிவிட்டு அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து ராமசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வந்தார்.

இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நிருபரும், போட்டோ கிராபருமான சிவக்குமார் நிற்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலி நிருபர் கைது

தகவல் அறிந்ததும் போலீசார் வீரப்பன்சத்திரம் விரைந்து சென்று அங்கு மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மோட்டார்சைக்கிள், பத்திரிகை அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேலு பிரபாகரன், கோபால், பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு போலி நிருபர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு உள்பட மொத்தம் 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

7 உள்ளாட்சி பதவிகள்

பின்னர் கடந்த 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு, பவானி நகராட்சி 7-வது வார்டு, சத்தியமங்கலம் ஒன்றியம் 15-வது வார்டு மற்றும் கோபி ஒன்றியம் 8-வது வார்டு ஆகிய 6 வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன் நகர் ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. பிற பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

24 பேர் போட்டி

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் போட்டியில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1.டி.பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.)

2.பி.பிரபு (காங்கிரஸ்)

3.கே.மணி (பா.ஜனதா),

4.பி.ராஜா (மா.கம்யூனிஸ்டு)

5.கே.சுரேஷ் (சுயே.)

6.செந்தில்குமார் (சுயே.)

7.மெய்வேல்(சுயே.)

8.மோகனசுந்தரம் (சுயே.)

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்குகிறது

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கை விரலில் வைக்கப்படும் மை மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அந்தந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கதிரம்பட்டி மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அடிப்படை வசதிகள்

கதிரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வடிகால் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி உள்பட பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

இங்குள்ளவர்கள் வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி ஆகியவையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். மேலும் அரசின் சார்பில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ. தலைமையில் மனு

இதேப்பகுதியில் மின்வாரியத்தின் துணை மின்நிலையமும், மின்வாரிய குடியிருப்புகளும் உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த கிராமம் என்ற ஜனாதிபதி விருதையும் இந்த கிராமம் பெற்று உள்ளது. எனவே இங்குள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வீடுகளை அகற்ற...

கதிரம்பட்டி ஊராட்சியில் மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு வேறு வீடுகள் எதுவும் இல்லை.

இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே இங்குள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதில், மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஈரோடு ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.

அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.

போலீஸ் விசாரணை

இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.


Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by Anonymous in    
திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்றத் தலைவர் ரூபி சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் கந்தசாமி, தமிழ் சங்கச் செயலாளர் ப.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில், திருவள்ளுவர் சிலை உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைத்தால், சாலை அகலப்படுத்தும் போது இடையூறு ஏற்படும். எனவே, மணிமண்டபம் அமைக்க வேறு இடம் ஒதுக்கித் தருவது குறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் மாற்று இடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந் நிகழ்ச்சியில், மாநில கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் ப.கோபாலகிருஷ்ணன், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் சேமலையப்பன், கொங்கு கந்தசாமி, யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    
ஈரோடு மேயரின் அரசாங்க செய்திகளை நிருபர்களுக்கு தர மறுப்பதாக மக்கள் செய்தித்தொடர்பு அதிகாரி (pro)  மீது புகார் வந்தவண்ணம் உள்ளது. மேயர் நடவடிக்கை எடுப்பாரா?
 



On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    

On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு: அளவு குறைவாக, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து, ரேஷன் கடைகளில் எடையளவு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி திவ்யநாதன் தலைமையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தாகிர் அலி முன்னிலையில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில், கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருட்கள், அதிக விலைக்கு விற்கபடுகிறதா?. பொட்டல பொருட்கள் மீது விற்பனை குறிப்புகள் உள்ளதா?. தண்ணீர் பாக்கெட், குளிர் பானங்கள் குறித்த விலையில் விற்கப்படுகிறதா என, தினசரி மார்க்கெட், பொட்டலங்கள் தயார் செய்து அடைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பம்ப்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. விற்பனை குறிப்பு இல்லாத பொட்டல பொருட்கள், 35 கைப்பற்றப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய காலத்தில் மறு முத்திரையிடப்படாத எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, முத்திரையிடப்படாத மற்றும் மறுபரிசீலனை சான்றினை உரியவாறு வெளிக்காட்டப்படாத, 54 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அளவு குறைவு மற்றும் மறு பரிசீலனை சான்று, வெளி காட்டி வைக்கப்படாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெட்ரோல், டீஸல் மற்றும் மண்ணெண்ணெய் பம்ப்கள் ஆய்வு செய்து, அளவு குறைவாக விற்பனை செய்த, மூன்று நிறுவன பம்ப் நிறுத்தம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொட்டல பொருட்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், பொட்டலங்களில் தயாரிப்பாளர், பேக்கரி பெயர், முகவரி, கஸ்டமர் கேர் எண், தயாரிக்கப்பட்ட, பேக் செய்த மாதம், ஆண்டு, நிகர எடை, விற்பனை விலை, வரி உள்ளிட்ட விபர குறிப்புகள் அனைத்தும், பொட்டல பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். முத்திரையிடப்படும் எடை அளவைகள், காலம் தவறாது குறிப்பிட்ட காலத்துக்குள், மறு முத்திரையிட்டு, வணிகத்தில் பயன்படுத்த வேண்டும், என கேட்டு கொள்ளப்பட்டது.
On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    


ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் நேற்று காங்கயம் ஈ.பி.ஈ.டி. பொறியியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு கொடிச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ–மாணவிகளின் வீதி நாடகம் நடந்தது. குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நடித்துக்காட்டினர். விபத்தில் வாலிபர்கள் கால்கள் உடைந்து விழுந்து கிடப்பது, தலையில் படுகாயம் அடைந்து உயிரிழப்பது, உறவினர்கள் கதறி அழுவது போன்ற காட்சிகளை மாணவ–மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டினார்கள். இந்த நாடகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்கலாம், மோகன்ராஜ், கல்லூரி டீன் ஏ.ஜி.என்.நாராயணன், பேராசிரியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் நாடகக்குழுவை திருப்பூர் அரிமா சாலை பாதுகாப்பு திட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வழிநடத்தினார்.
On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    


கூட்டுறவு கடன்சங்க உறுப்பினர்களின் பணத்தை கையாடல் செய்த சங்க செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூட்டுறவு சங்க செயலாளர்

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில், நெருஞ்சிப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடந்த 2005-2006-ம் ஆண்டுகளில் நெருஞ்சிப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த எஸ்.முருகேசன் (வயது 49) என்பவர் செயலாளராக இருந்தார். உதவி செயலாளராக நெருஞ்சிப்பேட்டை இந்திரா வீதியை சேர்ந்த முருகன் (51) என்பவரும், காசாளராக முத்துசாமி வீதியை சேர்ந்த கே.பழனிச்சாமி (47) என்பவரும் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் நெருஞ்சிப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினரான அர்த்தநாரீஸ்வரன் என்பவருக்கு அரசு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதன்படி அவருக்கு ரூ.25 ஆயிரத்து 100 கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இது அர்த்தநாரீஸ்வரன் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அவருக்கு கடன் தள்ளுபடி குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் கோபி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளரிடம் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணை

துணைப்பதிவாளர் விசாரணையின் போது சங்கத்தின் செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் முருகன், காசாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் இதுபோல் பலரிடம் முறைகேடு செய்து பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது. எனவே கோபி துணைப்பதிவாளர் சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் மேற்பார்வையில் ஈரோடு குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.பி.முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரூ.2 லட்சம் கையாடல்

அப்போது சங்க செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் முருகன், காசாளர் பழனிச்சாமி ஆகியோர் செய்த கையாடல்கள் வெளி வந்தன. சங்க உறுப்பினர் எம்.ராமசாமி என்பவருடைய சர்க்கரை ஆலை ஒப்பந்த கடன், சின்னப்பகவுண்டர் என்பவருக்கு வரவேண்டிய தொகையை முத்துக்குமார் என்பவருடைய கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தது, விஸ்வநாதன் என்பவருக்கு சர்க்கரை ஆலை ஒப்பந்த கடன் என்று சுமார் 10 உறுப்பினர்களுக்கான ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 820 கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு வணிககுற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.முருகேசன், முருகன், பழனிச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்ய போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.
On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    
லேப்டாப் வழங்ககோரி அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் மனு கொடுக்க வந்த மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.எஸ்.ஐ. ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 447 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு இலவச லேப்டாப், சைக்கிள்களை வழங்கினார். இவ்விழாவில் கலெக்டர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், கிட்டுசாமி, மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் பழனிச்சாமி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
மாலை 3 மணிக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு மதியம் ஒருமணிக்கே மற்ற பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வந்து விழா மேடை முன் நிற்க வைத்தனர். மற்ற பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே வந்திருந்தால் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி மாணவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வருகைக்காக பள்ளி மாணவ, மாணவிகளும் நீண்டநேரமாக காத்திருந்தனர். பின்னர் 4.30 மணியளவில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வந்த பிறகே விழா தொடங்கியது. 
விழாவில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் பேசிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. இதனால் 5 நிமிடங்களிலேயே பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசும்போது மின்தடை தொடர்ந்து இருந்ததால் பேட்டரி மைக் செட்டை கொண்டு வந்து வைத்தனர். இதனால் அமைச்சர் பேசியபோது சரியாக கேட்காததால் மாணவ, மாணவிகளிடையே சத்தம் அதிகமாக இருந்தது. அப்போது ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மின்வாரியத்தினரை போனில் அழைத்து டோஸ் விட்டனர். 20 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வந்தது. 

Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    

சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியினை கலெக்டர் சண்முகம் குத்துவிளக்கேற்றி வைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த கல்லூரி சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்நத 37 மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் கோராப்பட்டு புடவைகள், காட்டன் புடவைகள், அழகு ஆபரணங்கள், சணல் மற்றும் காட்டன் பைகள், மென் பொம்மைகள், மெழுவர்த்தி, நாப்கின், சுடிதார், நைட்டி வகைகள், ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. 
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 22 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், பிற மாவட்டங்களில் இருந்து 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த கண்காட்சி விற்பனையை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களை வாங்கினார்கள். 
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, கல்லூரி முதல்வர் ஜெயசங்கர், இயக்குநர் சிவக்குமார், உதவி தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு, : வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்ரோடு காளியண்ணன் வீதியைச் சேர்ந்தவர் பேபி. இவர் நேற்று பெண்களுடன் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பெருந்துறை பாண்டியன் வீதியைச் சேர்ந்த ஒருநபர் தான் வக்கீலாக வேலை செய்து வருவதாக கூறினார். அவரது வீட்டில் கடந்த 7 மாதங்களாக வேலை செய்து வந்தேன். அப்போது அவர் எனது அண்ணன் சி.எம். அலுவலகத்தில் பி.ஏ.வாக வேலை செய்கிறார். அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறினார். அப்போது எனது மகன் 10வது படித்து விட்டு வீட்டில் இருந்ததால் சத்துணவு பணியாளர் வேலைக்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் சுயஉதவிக்குழு மூலமாக பணம் வாங்கி தருவதாக மேலும் 70 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால் பணம் வாங்கிய பிறகு எந்த வேலையும் செய்து கொடுக்கவில்லை.
 இந்நிலையில் கடந்த 22ம்தேதி வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது போனிற்கு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இவரை பற்றி விசாரித்தபோது அந்த நபர் போலி வக்கீல் என தெரிய வந்தது. என்னை போலவே 5 பேரிடம் வேலைவாங்கி தருவதாக 9 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
பெருந்துறை, சாகர் கல்வி நிறுவனம் சார்பில், அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு, உலக சமாதனத்துக்காக, பள்ளி மாணவர்களுக்கான "மினி மாரத்தான்' போட்டி நடந்தது. கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், 1,200 பள்ளி மாணவர்கள், வகுப்பு வாரியாக பங்கேற்றனர். இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சௌந்திரராஜன், இணைச் செயலாளர் சுருதிமூர்த்தி, பொருளாளர் பழனிசாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், முதல்வர் அரசு பெரியசாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோட்டில் வருகிற செப்டம்பர் 4–ந் தேதி முதல் 11–ந் தேதிவரை நடைபெறும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
8 நாட்கள் ஆள்சேர்ப்பு
இந்திய ராணுவத்தில் சிப்பாய், சிப்பாய் பொதுப்பிரிவு, தொழில் நுட்ப பிரிவு, குமாஸ்தா உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 4–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை 8 நாட்கள் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடக்கிறது. இதில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
அனைத்து பிரிவுக்கும் கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிப்பாய் பொதுப்பிரிவுக்கு 17 வயது முதல் 19 வயது வரையானவர்கள் கலந்து கொள்ளலாம். தொழில்நுட்பம், குமாஸ்தா பிரிவுகளுக்கு 17 வயது முதல் 23 வயது வரையானவர்கள் கலந்து கொள்ளலாம். இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆள் சேர்க்கை முகாமுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 11 மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்கள் தேர்வில் சிரமமின்றி கலந்து கொள்ளவும், முகாமுக்கு வரும் அதிகாரிகளுக்கான வசதிகள் செய்வது, தேர்வுக்கான இட வசதிகள் செய்வது குறித்து வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், ஆர்.டி.ஓ. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மைய அதிகாரி கர்னல் எச்.பிரவீன் தலைமையில் மேஜர் எம்.எஸ்.தோமர், சுபேதார் மேஜர் தர்ஷன்குமார் ஆகியோர் ஆள்சேர்ப்பு குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
கலெக்டர் வி.கே.சண்முகம் பேசும்போது, ‘குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதிகள் முறையாக செய்யப்பட வேண்டும். இதில் எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார். கூட்டத்தில் வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை, போக்குவரத்துத்துறை, உள்ளாட்சித்துறை உள்பட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
தொடர்ந்து முகாம் நடைபெற உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தை கலெக்டர் வி.கே.சண்முகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஷாகுல் அமீது, துணைதாசில்தார் சிவகாமி, மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் அசோகன், பத்மாவதி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லட்சுமணசாமி, வெங்கடேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு: நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும், என்று, சி.ஐ.டி.யு., கேட்டு கொண்டுள்ளது. ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., பொது செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
அரசாணைக்கும், நடைமுறைக்கும் மாறாக, தன்னிச்சையாக விதிகளை உருவாக்கி, நல வாரியத்தை சீர்கேட்டுக்கு உள்ளாக்கி உள்ள தொழிலாளர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும். தொழிலாளர்களிடம் பெற்ற மனுக்களில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொடுப்பதற்காக, உரியவர்களிடம் கொடுத்திட வேண்டும். அனைத்து வகை சலுகைகளுக்காகவும் விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு, கால தாமதம் இன்றி, சலுகை தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், இரண்டாம் தேதி தொழிலாளர் அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதுபோல் வரும், 11ம் தேதி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கும், என்றார். அதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு, ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூத்தன் மகள் மரப்பாலம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் பாலு (எ) பாலசுப்பிரமணியம், 22. இருவரும் நெருக்கமாக பழகினர். ஆசை வார்த்தை கூறி, இருவரும், சுற்றித்திரிந்தனர். இதை அறிந்து, பெண் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ளுமாறு, பாலுவிடம் கூறினர். மூன்று மாதங்கள் கழித்து, திருமணம் செய்வதாக பாலு தெரிவித்தார். மூன்று மாதத்துக்கு பின்னரும், திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து, அனைத்து மகளிர் போலீஸில், புகார் செய்ய ப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலுவை தேடினர். தகவல் அறிந்த பாலு, ஈரோடு இரண்டாம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    



ஈரோடு ரெயில்நிலையத்தில் நேற்று இரவு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது பிளாட்பார பகுதியில் பள்ளிக்கூட சீருடையில் ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் கோவை மாவட்டம், சிட்டாப்பூர் பொன்நகர் லே அவுட் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கிஷோர்குமார் (வயது 14) என்பதும், அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
கிஷோர்குமாரை அவரது தாய் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி கோவை ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளான். பின்னர் அங்கு இருந்து பயணிகள் ரெயிலில் ஏறி ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கிஷோர்குமாரை கோவைக்கு அழைத்து சென்றனர்.

Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by TAMIL NEWS TV in ,    


புனித ஹஜ் பயணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் மெக்கா மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் பிரசித்தி பெற்ற தலங்களுக்கு சென்று வருவார்கள்.
அவ்வாறு செல்லும் இஸ்லாமியர்களுக்கு வெளி நாடுகளில் தொற்று நோய் ஏற்பட்டு பாதிக்கக்கூடாது என்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதேபோல் வெளிநாடுகளுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இன்று தொற்று நோய் தடுப்பூசி போடப்பட்டது.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் அதுல் கலாம் ஆசாத் தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 88 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.