Showing posts with label Coimbatore. Show all posts
Showing posts with label Coimbatore. Show all posts

Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி கட்சி முகவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

மின்னணு எந்திரங்கள்

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.

மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.

சின்னங்கள் பொருத்தும்பணி

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.

அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

‘சீல்’ வைக்கப்பட்டன

இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

தனியார் கல்லூரி

கோத்தகிரியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கட்டபெட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கல்லூரி முதல்வர் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 11-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாததால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் ராம்குமார், வருவாய் அதிகாரி கலைச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராம்குமார் மாணவர்களிடம் உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.

இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 கும்கிகள் வரவழைப்பு

தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.

இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை : சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், கந்து வட்டிக்காரர்களின் 'அடாவடி' வட்டி வசூலில் இருந்து தப்பிக்க முடியாமல், கோர்ட் ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கதறுகின்றனர்.

கந்துவட்டிக் கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில், கந்து வட்டி சாவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. ஆனாலும், மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் 'கடுமை' காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கந்து வட்டிக்காரர்களின் நடவடிக்கை ஒரு படி மேலே போய், கடன் வாங்கியவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக்கொள்வது, பெண்களை சிறை வைப்பது, குழந்தைகளை கடத்துவது என, அடுத்தடுத்த இம்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலும், தங்க நகை தொழிலாளர்கள், ஜவுளி விற்பனையாளர்கள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் இக்கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். கந்து வட்டி வசூலிப்பவர்களின் நடமாட்டம் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதில் ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பது, கொடுமையான விஷயம். பணத்தேவையில் கஷ்டப்படுவோரை தேடிப்பிடித்து உதவி செய்யும் கந்து வட்டி ஆசாமிகள், அடுத்தடுத்த தவணைகளில் பணத்தை திரும்ப பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், கடும் வார்த்தைகளால், அர்ச்சனை செய்கின்றனர். இதற்கு பணம் வாங்கியவர்கள் வாய் மூடியாகவே இருக்கின்றனர். கடன் பெற்றவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு ஈடாக, 'கையெழுத்திட்ட செக்'கை முன் கூட்டியே ஒப்படைத்திருப்பது தான் காரணம்.

இக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியதன் விளைவு, கந்து வட்டி நபர்களை கைது செய்யவும், தடை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இச்சூழலிலும், இக்கொடுமை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கோர்ட் ஊழியர்களிடமும் பரவியுள்ளது. நீதிகேட்டு பாதிக்கப்படும் மக்கள் கோர்ட்களை அணுகி வரும் நிலையில், கோர்ட் ஊழியர்களே, கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் குடும்பத்தினரின் தொழில் அபிவிருத்திக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். இதற்கு மூன்று ரூபாய் வட்டி தர சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடன் தொகையை கட்ட முடியாமல் திணறுகின்றனர். வசூலுக்கு வரும் கந்து வட்டி ஆசாமிகள், கோர்ட் ஊழியர்கள் முன்னிலையில், நாகூசும் வார்த்தைகளால் பெண்களை மட்டுமல்லாது, ஆண் ஊழியர்களையும் திட்டுகின்றனர்.கோவையில் மட்டும், 86 ஊழியர்கள் கந்து வட்டி ஆசாமிகளிடம் சிக்கியுள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் கோர்ட்களிலும் கந்து வட்டி ஆசாமிகளின் கைவரிசை நீண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வட்டியை கட்ட முடியாமல் அவதிப்படும் ஊழியர்கள் வேறு வழியின்றி, சக ஊழியர்களிடம் தங்கள் இயலாமையை தெரிவித்து அழுகின்றனர்.இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட நீதிபதியை சந்தித்து, தங்களை கந்து வட்டிக் கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என முறையிட உள்ளதாக கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை மாநகரக் காவல் துறை , மாவட்டத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களிடம் இருந்து சமூகவிரோத செயல்களைப் பற்றியத் தகவல்களைப் பெறவும், நேரடியாக பொதுமக்களே எந்த ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும் மொபைல் எண்ணை அறிமுகப் படுத்தி இருக்கிறது. மெயில் மூலமாகவும் காவல்துறைக்குத் துப்புக் கொடுக்கலாம். எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய மொபைல் எண் : 9843100100 (இது நேரடியாக கமிஷனர் மற்றும் டெபுடி கமிஷனரின் பார்வைக்குப் போகும்) பொதுமக்கள் தொலைபேசியில் நேரடியாக டெபுடி கமிஷனரிடம் பேச : 0422-6545464 மெயில் மூலம் தகவல் தெரிவிக்க : copcbe@yahoo.com தொடர்ச்சியான ரோந்துப் பணியின் காரணமாகவும், காவல்துறையின் உடனடி நடவடிக்கையின் காரணமாகவும் , 2012 ம் ஆண்டை விட , 2013 ம் ஆண்டில் கோவையில் குற்றச் செயல்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றி காவல்துறையினால் மட்டுமே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆகவே நாமும் நம் காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றுவோம்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை, : நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிலிம் கிளப் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமது மாணவர்களின் திரை துறை ஆர்வம் மேம்படவும், திரை துறையில் மாணவர்கள் விருப்பத்துடன் ஈடுபடுவதற்காக ‘நேரு பிலிம் கிளப்’ துவக்கியுள்ளது. இதற்கான விழாவில் கல்லூரி முதல்வர் அநிருதன் வரவேற்றார். திரை இயக்குநர், நடிகர்  பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பிலிம் கிளப்பை துவக்கி வைத்தனர். 
கல்லூரி செயலாளர் கிருஷ்ணகுமார் பேசு கையில், ‘ நேரு கல்விக்குழுமம் திரை இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்கள் பயிற்சி காலத்தில் திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள், பிரபலங்களுடன் கலந்து ஆராய்ந்து அனுபவங்கள் பெற இயலும்’ என்றார். மாணவர்கள் பாக்யராஜூடன் திரை க்கதை, வசனம், இயக்கம் ஆகிய துறை சார்ந்து கலந்துரையாடினர். 
கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன், துணை பேராசிரியர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை, :சமூக விஞ்ஞான பயிலரங்கின் முதலாம் ஆண்டு விழா மற்றும் எழுத்தாளர் ப.பா.ரமணி எழுதிய ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளியீட்டு விழா, கோவை ரயில் நிலையம் எதிரில் திவ்யோதயா அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்திய கலாசார நட்புறவுக் கழக பொதுச்செயலாளர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக விஞ்ஞான பயிலரங்க நிர்வாகி குணசேகர் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் டி.ஞானையா ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூலை வெளியிட, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொன்னீலன் பெற்றுக் கொண்டார். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் ப.பா.ரமணி பேசியதாவது:
தமிழகத்தில் பிறந்து பொதுவுடைமை இயக்கத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவர் பார்வதி கிருஷ்ணன். குமாரமங்கலம் ஜமீன் குடும்ப பின்னணி, சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயன் மகள், லண்டன் ஆக்ஸ்போர்டில் கற்ற கல்வி, பெற்ற பட்டம் ஆகியவற்றை துச்சமாக கருதி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டியவர் பார்வதி கிருஷ்ணன். மாணவர் இயக்க தலைவர், இந்திய நாடக மன்றத்தின் முதல் அமைப்பாளர், உலகறிந்த தொழிற்சங்க தலைவர், துணிச்சல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர், தனது கணவர் என்.கே.கிருஷ்ணன் உடன் கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்.
அனைத்திற்கும் மேல் சுயவிளம்பரத்தை விரும்பும் ஆர்ப்பாட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஓர் எளிமையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். இத்தகைய சிறப்புமிக்க பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்பாக ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் பார்வதி கிருஷ்ணனின் எளிமையான வாழ்க்கையை குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவர் வழி நடக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு ப.பா.ரமணி பேசினார். 
விழாவில், கவிஞர் புவியரசு, மூத்த வங்கி ஊழியர் சங்க தலைவர் ஜோசப், வடிவேலு, சுந்தரம், மவுனசாமி, சுப்ரமணியம், ராஜம், ரகுபதி, கோட்டியப்பன், ராம்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை, : அறுவடை செய்த சூரியகாந்தி விதைகளை விவசாயிகள் உடனடியாக விற்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. 
வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சாகுபடியாகும் சூரியகாந்தியின் நிலப்பரப்பில் 79 சதவீதம் மற்றும் உற்பத்தியில் 80 சதவீதம் பங்களிப்பை கரூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தர்மபுரி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அளிக்கிறது. 
சூரியகாந்தி கார்த்திகை (அக்-நவ), சித்திரை(ஏப்-மே) பட்டங்களில் பயிரிடப்படுகிறது. அதிகமான வரத்து மார்ச்-மே, ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் காணப்படுகிறது. தற்போது, சித்திரை பட்டத்தில் (ஏப்-மே) விளைவித்த சூரியகாந்தி சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வெள்ளகோவில், மூலனூர், கொடுமுடி ஆகியன முக்கிய சூரியகாந்தி சந்தைகளாகும். சன்பிரட், கங்கா காவேரி ஆகிய வீரிய சூரியகாந்தி விதைகள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இறவை சாகுபடியில், சராசரியாக ஏக்கருக்கு 1000 முதல் 1200 கிலோ வரை சூரியகாந்தி விதை மகசூல் எடுக்கலாம்.
ஆனால், தண்ணீர் பற்றாக்குறை, பூச்சித்தாக்குதல் மற்றும் வேலை ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்த பருவத்தில் சூரியகாந்தி விதை மகசூல் ஒரு ஏக்கருக்கு 600 முதல் 700 கிலோ வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியகாந்தியின் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் குறைந்துள்ளதால் சந்தைக்கு வரும் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. 
வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விற்பனை தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம் சார்பில், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 13 வருடங்களாக நிலவிய சூரியகாந்தி விதைகள் விலையின் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகளின் படி, சூரியகாந்தி விதையின் பண்ணை விலை செப்டம்பர் 15 முதல் நவம்பர் மாதம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ.33-35 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்க பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்ம சுந்தரி துரைசாமியை ஆதரித்து காமாட்சிபுரம் 5வது வார்டு, குடியிருப்பு பகுதி மெயின் வீதியில்  மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம், அங்கமுத்து, ஜல்லிபட்டி ராமசாமி, இருகூர் துரைசாமி, பாபு என்கிற ஜெயச்சந்திரன், கவுன்சிலர் பிரகாஷ், பள்ளபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேச்சிமுத்து, ஆகியோர் வீடு,வீடாக சென்று  இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைதேர்தலில் அண்ணா தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.தங்கராசுவை ஆதரித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பஸ் நிலையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கோவை மாவட்ட செயலாளரும்,அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி  மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ், சூலூர் ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு என்கிற பாலசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் குட்டியப்பன்,சூலூர் அங்கமுத்து, கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்,தொகுதி செயலாளர் லிங்கசாமி, நகர நிர்வாகிகள் போலீஸ் கந்தசாமி, வழக்கறிஞர் கந்தநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    



கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்தவரை கையும் களவுமாக பாஜக-வினர் பிடித்தனர். பாஜக-வினரிடம் சிக்கி அடி உதை வாங்கிய மாற்றுக் கட்சித் தொண்டர் தப்பி ஓடினர். மர்மநபர் வந்த அதிமுக சின்னம் பொறித்த காரை பாஜக-வினர் சிறைபிடித்தனர். 
On Sunday, September 14, 2014 by farook press in ,    
கோவை மாவட்ட அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1994–ம் ஆண்டு நல வாரியம் அமைத்து தொழிலாளர்களுக்கு தனி அந்தஸ்து வழங்கியும்,தொழிலாளர்களின் நலன் கருதி 0.3 சதவீதமாக இருந்த நல வாரிய நிதியை ஒரு சதவீதமாகவும்,மத்திய திட்டத்திலும் ஒரு சதவீத வரியை பிடித்தம் செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தொழிலாளர் நலன் காக்க ஓய்வூதியமாக ரூ.ஆயிரம் ஆகவும், கட்டிட விபத்து, மரண நிதி ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தியுள்ளார். தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு மறுபதிவு என்பதை 5 ஆண்டுகளாக உயர்த்தியும், கட்டுமான தொழிலாளர்கள் நலன் காக்க நடமாடும் மருத்துவமனை, அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார்.எனவே நாளை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணியினர் திரண்டு முதல்–அமைச்சரை வரவேற்க வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
On Sunday, September 14, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். இதைதொடர்ந்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கோவை வருகை
கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 18–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவையில் 12–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சுற்றுப்பயணம்
இந்த நிலையில் கோவை மேயர் வேட்பாளர் கணபதிராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். அவருடைய சுற்றுப்பயண விவரம் வருமாறு:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்டு ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலை யில் உள்ள அண்ணா சிலை இருக்கும் இடத்துக்கு வருகிறார். அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.
சென்னை திரும்புகிறார்
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஜெயலலிதா கார் மூலம் அருகில் உள்ள வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு வருகிறார். அங்கு கோவை மேயர் வேட்பாளராக போட்டியிடும் கணபதிராஜ்குமாரை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் அவர் கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
விழாக்கோலம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோவை வருகையையொட்டி கோவை விழாக்கோலம் பூண்டுள்ளது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் கோவை அவினாசி சாலை மற்றும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அ.தி.மு.க கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன, விமான நிலையம் முதல் வ.உ.சி. பூங்கா வரை உள்ள அவினாசி சாலையில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் ஏராளமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஜெயலலிதாவின் பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவினாசி சாலையின் இரண்டு புறமும் அ.தி.மு.க, கொடிகள் கட்டப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்தை சுற்றிலும் இரவை பகலாக்கும் வகையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பேசுவதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகர போலீசார் மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக் கல், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், தஞ்சை ஆகிய மாவட்ட போலீசாரும் கோவைக்கு இன்று வருகிறார்கள். முதல்–அமைச்சர் வருகைக்காக கோவை மாநகர போலீசார் 1,500 பேர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் 1,500 பேர் என்று மொத்தம் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்–அமைச்சர் கோவை வருகையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவைக்கு வரும் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வ.உ.சி.பூங்கா மற்றும் அண்ணா சிலை ஆகிய இடங்களில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
குனியமுத்தூர், செப்.13–
கோவை ஈச்னாரி பாட சாலை வீதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 27). இவர் இன்று காலை 6.30 மணியளவில் பால் வாங்குவதற்காக வெளியே வந்தார்.
கடைக்கு சென்று பால் வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் மழைக்கோட்டு அணிந்தபடி நின்று கொண்டிருந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கலைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். 
இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் கூறம்போது பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். நகைகள் அணிந்து சாலையில் வரும்போது அவை வெளியே தெரியாத வண்ணம் சேலை அல்லது துப்பட்டாவால் மறைத்து கொள்ள வேண்டும்.
சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது பின் தொடர்ந்தாலோ அல்லது தென்பட்டாலோ அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகை பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்றார்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
கோவை, செப்.13–
தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மன பலத்துக்கும், பண பலத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதும், கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை போல் பேசுகிறார்கள்.
தற்போது நடைபெறும் இந்த தேர்தல் தேவையில்லாத ஒன்றாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு மாற்றாக பா.ஜனதா கட்சி போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக எங்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் தேர்தலில் ஒதுங்கியிருக்கும் மற்றும் புறக்கணித்திருக்கும் கட்சிகளும் பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்கள் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கோவையில் முகாமிட்டுள்ளனர். பிரசாரத்துக்கு குவிந்துள்ள அமைச்சர்கள் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க இதேபோல் வந்திருந்தால் அவர்களை வரவேற்று இருப்போம்.
கோவை பா.ஜனதா வேட்பாளர் நல்ல திறமையானவர். அவரை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்தால் கோவை மாநகரை சிறந்த நகரமாக உருவாக்க பாடுபடுவார்.
குஜராத் மாநிலம் போல் கோவை மாநகரை சிறந்த நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார். இதை உணர்ந்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழக மீனவர் பிரச்சினையில் தமிழக பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜனதா வேட்பாளர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார், கூட்டணி கட்சி தலைவர்கள் மோகன் குமார், தமிழ்முருகன், மயில்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
வால்பாறை, செப்.13–
கோவை மாவட்டம் வால்பாறை டேன்டீ எஸ்டேட்டில் சின்கோனா 2–வது குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சுற்றி திரிந்து வருகின்றன.
பகலில் வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் இரவில் குடியிருப்பு பகுதிகள் உலா வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தியும், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தாய் யானை ஒன்று தனது குட்டியுடன் வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றன. அப்போது தாய் யானை கால் தவறி குடியிருப்பு பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் தொட்டிக்குள் விழுந்தது.
இதையடுத்து யானை கடுமையாக பிளிறியது. யானையின் அலறல் சத்தம் கேட்டு அந்த குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் தொட்டியை சுற்றி நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால் காட்டு யானைகள் ஆக்கிரஷோமாக இருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் ரப்பர் தூள்கள், மரக்கட்டைகள் மற்றும் மண் மூட்டைகளை போட்டு யானையை மேலே கொண்ட வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
குனிமுத்தூர், செப். 13–
கோவை பொள்ளாச்சி ரோடு சிட்கோ எதிர்புறம் இண்டோசெல் டி.வி.எஸ். ஷோரூம் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இரவு 9.30 மணிக்கு ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது ஷோரூமின் மேற்கூரை துளையிடப்பட்டிருந்தது. மேஜை டிராயர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், கொள்ளையன் எந்த ஆயுதமும் இல்லாமல் துளையிட்டு கொள்ளையடித்து சென்றிருக்கிறான். ஷோரூமின் பக்கத்திலுள்ள மெயின் கேட்டில் காவலாளி கண் அசரும் நேரம் கொள்ளையன் உள்ளே நுழைந்திருக்கிறான். பின் வழியாக சென்று ஆஸ் பெஸ்டாஸ் சீட்டை பிரித்து உள்ளே நுழைந்து அருகிலிருந்த ஆக்ஸ்லாபிளேடு மூலம் மேற்கூரையை அறுத்து (அட்டை சீட்) துளையிட்டிருக்கிறான். பின்னர் பின் பக்கம் கிடந்த டியூப்பை எடுத்து அதனை மேலே கட்டி அதன் மூலமாக உள்ளே இறங்கியிருக்கிறான். சூடம் காட்டக்கூடிய கரண்டியை எடுத்து அதன் மூலமாக மேஜை டிராயரை குத்தி கிழித்து திறந்து உள்ளேயிருந்த பணம் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்திருக்கிறான். இது தவிர வேறு ஏதும் அவன் கையில் சிக்கவில்லை. ஏராளமான புதிய இரு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தூக்கி செல்ல முடியாத காரணத்தால் வேறு வழியின்றி வந்த வழியாக ஏறி சென்று விட்டான்.
இதையெல்லாம் பார்க்கும் போது அடிக்கடி ஷோரூமிற்கு வந்தவன் தான் நோட்டமிட்டு திருடியிருக்கிறான். புதிதாக யாரேனும் வந்து இந்தளவு நுட்பமாக திருட முடியாது என்று கூறினர்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போன்று அருகிலிருக்கும் பொருளை எடுத்து புதிய தொழில் நுட்ப முறையில் கொள்ளையடித்த கொள்ளையனை பற்றி சுந்தராபுரம், சிட்கோ முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
வடவள்ளி, செப்.13–
கோவை செல்வபுரத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் சாலையில் புட்டுவிக்கி பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் நொய்யலாற்றின் இடையே தரைப்பாலமாக இருந்து வந்தது. இப்பாலத்தை டவுன்ஹால், உக்கடம் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன் படுத்தி வந்தனர்.
இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கோவைப் புதூர், சுண்டக்காமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் சுற்றுப்பாதை வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகரை அடைந்து வந்தனர். இதற்கு தீர்வு கோரி அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து ரூ.15 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 70 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட பெரிய மேல்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
சிமெண்டு கான் கிரீட்டிலான 5 தூண்களுடன் பிரமாண்டமாக பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உக்கடத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் வரையிலான இணைப்பு சாலையை 7 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி கூறும்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னர் பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றார்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
பீளமேடு, செப்.13–
கோவை 4 தமிழ்நாடு என்.சி.சி. பட்டாளியன் கமென்டிங் பிரிவின் கீழ் இயங்கும் மாணவர்களில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்.சி.சி. மாணவர்களை தேர்வு செய்யும் முகாம் லெப்டினட் கர்னல் ஜோசப் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் நடைபயிற்சி, துப்பாக்கி ஏந்திய நடைபயிற்சி, சிறப்பு அணிவகுப்பு, துப்பாக்கிகளை கையாளும் விதம். வரைபட பயிற்சி உள்ளிட்ட அணிவகுப்பு பயிற்சிகளும், ஆக்கி, கால்பந்து, மேசை பந்து, இறகு பந்து, கபடி மற்றும் கோகோ போன்ற விளையாட்டு போட்டிகளுக்குகான பயிற்சிகளும், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,800 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் கோவை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு லெப்டினட் சுபேதார் வேல்முருகன், கல்லூரிகள் துணை என்.சி.சி. அலுவலர் ஸ்ரீதர், என்.சி.சி. முதன்மை அதிகாரி இருதயராஜ், லெப்டினட் ஜெயசீலன், கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு காந்திய மக்கள் இயக்க வேட்பாளராக டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளை போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒரு மாநகராட்சி மேயர் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு ஆட்சிப்பொறுப்பில் உள்ள 15–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இங்கு வந்து முற்றுகையிட்டு இருப்பதும், முதல்–அமைச்சரே இங்கு வந்து பிரசாரம் செய்ய உள்ளதும் எந்த வகையிலும் ஆரோக்கியமான அரசியல் அல்ல.
இத்தகையை சூழலில் நாங்கள் எளிமையாய், சத்தியம் சார்ந்து இந்த தேர்தலில் சரித்திரம் படைப்போம். எங்கள் இயக்க வேட்பாளர் வெற்றி பெற்றால் கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் துறையை விட சிறந்து விளங்கிடவும், சிறப்பான சேவை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பார். ஊழலில் நிழல்படாத, அற்புதமாக நிர்வாகத்தை தருவதற்கு எங்கள் வேட்பாளர் இருப்பார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி அ.தி.மு.க.வை எதிர்ப்பதற்காக பா.ஜனதாவுக்கு திருப்ப கூடும். ஆனால் எல்லா கட்சிகளிலும் நேர்மையான பொது அரசியல் இருக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் இயக்க வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.
ஸ்தாபன காங்கிரசில் இருந்து வந்தவர்கள் அத்தனை பேரும் எங்கள் இயக்கத்துக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் 80 சதவீத காங்கிரஸ் தொண்டர்கள் ஜி.கே.வாசனுடன் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கொடுப்பதில்லை. காமராஜரின் பெயரைச் சொல்வதற்கு அவர் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவர் போன்றவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை.
ஆகவே காங்கிரசை விட்டு விரைவாக அவர் வெளியே வரவேண்டும். வெளியே வந்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்போடு கைகொடுக்க காந்திய மக்கள் இயக்கம் தயாராக உள்ளது.
இதன் மூலம் 2016–ல் ஒரு மாற்று அரசியல் அணியை உருவாக்க முடியும். குறிப்பாக அவர் உருவாக்கும் அமைப்பு, எங்களது இயக்கம் மற்றும் ம.தி.மு.க, இடதுசாரிகளை வைத்து ஒரு மாற்று அணியை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
கோவை, செப். 13–
கோவை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முத்துசாமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பஸ் நிலையத்தில் இவருக்கும் தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த தனியார் பஸ் டிரைவர், போலீஸ்காரர் முத்துசாமியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அந்த பஸ்சை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன் 7 பேர் சேர்ந்து வழிமறித்து டிரைவரை தாக்கினார்கள். இந்த சம்பவம் போலீஸ்காரர் முத்துசாமியின் தூண்டுதலின்பேரில் தான் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து விசாரிக்குமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முத்துசாமி விதிமுறையை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில் முத்துசாமியை பணி இடைநீக்கம் செய்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.