Showing posts with label Thoothukudi. Show all posts
Showing posts with label Thoothukudi. Show all posts

Monday, February 08, 2016

On Monday, February 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேக திருப்பணி அலுவலகம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி கோயில்களில் கும்பாபிஷேகம் ரூ.3கோடி செலவில் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த அக்டோபரில் தொடங்கிய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 

இன்று கும்பாபிஷேக திருப்பணி அலுவலகத்தை இன்று தொழிலதிபர் ஏ.வி.எம்.வி.மணி திறந்துவைத்தார். அச்சமயம் அர்ச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பணிக்குழுத் தலைவர் பி.எஸ்.எஸ்.கே.ராஜா சங்கரலிங்கம், செயலாளர் பி.விநாயகமூர்த்தி, கமிட்டி பொருளாளர் ரமேஷ், உறுப்பினர்கள் பாஸ்கர்,ஆறுமுகம்,கமலஹாசன்,கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர், அலுவலர்கள்,பக்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
On Monday, February 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி பூபாலராய புரத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தியது.

பின்னர் அந்த கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. வெகுநேரமாக போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் துப்பு துலக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Saturday, February 06, 2016

On Saturday, February 06, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிருக்கு சிறு வணிகக் கடன் தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் குழுவினரும் இந்த கடனுக்கு விண்ணப்பம் அளித்தனர். கடந்த 30 ந்தேதி இதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு அனைத்து ஒன்றியத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. ஆனால் மிக அதிகமானவர்களுக்கு கடன் வழங்கும் தகவல் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கும் நாள்களை நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதற்கிடையில் இந்த விண்ணப்பம் நேற்று 5ந்தேதி வரை கொடுக்கலாம் என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த விண்ணப்ப மனுவை யாரிடம் கொடுக்க எங்கே வாங்குகிறார்கள் என்பது தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிலர் தூத்துகுடிக்கு நேரில் சென்றால் கடன் கிடைக்கும் என தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு படையெடுத்தனர். அங்கும் சரியான பதில் இல்லை.

இது குறித்து செய்துங்கநல்லூர் மகளிர் குழுவை சேர்ந்த நளினி கூறும்போது: சிறு வணிகக் கடன் அளிக்கவேண்டும் என்றால் அந்த தொழில் செய்பவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இருக்கவேண்டும். மேலும் ஆண்கள் பெண்கள் எல்லோரும் சிறுதொழில் செய்கிறார்கள். ஆனால் மகளிர் குழுவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கடன் என்று கூறியதால் குழுவில் இருப்பவர்களை தவிர வேறு யாரும் கடன் வாங்க விண்ணப்பம் கொடுக்கவில்லை. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வங்கிக்கு சென்று கோட்டால், அதற்கு வேறு விண்ணப்பம், இதற்கு வேறு விண்ணப்பம் என்று கூறுகிறார். 

இதுபோல குழப்பத்தினை தவிர்க்க மாவட்ட ஆட்சி தலைவர் இந்த கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் தேதியை நீடித்து, அதற்கு எப்படி எங்கே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று முறையாக தெளிவாக தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் கடன் காலம் முடிந்துவிட்டது. இனி யாரும் யாரை நம்பியும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் என்றாவது தகவல் தெரிவிக்க வேண்டும். என்று அவர் கூறினார்.

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் காரணத்தினால் சிறுவணிகக் கடன் உதவி திட்டத்தில் வழங்கப்படும். அதன் பின் பணம் எல்லாம் மானியமாக அறிவித்து விடுவார்கள். எனவே இந்த திட்டத்தில் எப்படியாவது இடம்பெற்று விடவேண்டும் என்று பொதுமக்கள் மும்முரமாக அழைகிறார்கள். அவர்களை ஸ்ரீவைகுண்டம் போங்கள், தூத்துக்குடி போங்கள் என அலைகழிக்க வைக்கிறார்கள். எனவே முறையான அறிவிப்பை ஆட்சிதலைவர் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
On Saturday, February 06, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடியில் முதல் மற்றும் 2வது ரயில்வே கேட் அருகே  நேற்றிரவு 8 மணியளவில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்தாராம். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும் அவர் எழுந்திருக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரயில் அந்த வாலிபர் மீது மோதியது. 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ரயில் அடிப்பட்டு இந்த நபர், அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் சுடலைமணி (20) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் 2வது கேட் பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடிபோதையில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாரா? என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Friday, February 05, 2016

On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்கு பதிவின்போது மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 1,521 வாக்கு சாவடிகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு வாக்கு பதிவு எந்திரங்கள் தேவை குறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள் தூத்துக்குடிக்கு வர உள்ளதாக கலெக்டர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட 2,300 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களும், 2,300 கட்டுப்பாட்டு கருவிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன.
கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட எந்திரங்களை தாசில்தார் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அனைத்து எந்திரங்களும் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்கு பதிவு எந்திரங்களை கலெக்டர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யூனியன் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றிடும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (பிப்ரவரி 6ம்) நடக்கிறது. 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சுகாதார மாவட்டத்தை நோக்கி... பின்வரும் 8 தாலுகாவில் பிப்ரவரி 6ம் தேதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

மாரத்தான் ஓட்டம் துவங்கும் இடம்

1. தூத்துக்குடி தாலுகா:  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம்.

2. திருவைகுண்டம் தாலுகா:  கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி, திருவைகுண்டம்

3. திருச்செந்தூர் தாலுகா: செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்

4. சாத்தான்குளம் தாலுகா: T.D.T.A.R.M.P. மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்

5. கோவில்பட்டி தாலுகா: வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி

6. ஓட்டப்பிடாரம் தாலுகா: மெக்காய் ரூரல் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம்

7. விளாத்திகுளம் தாலுகா: அரசு மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம்

8. புதூர் தாலுகா:  எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி, எட்டையாபுரம்

இப்போட்டியில் திரளான மாணவ மாணவிகள் பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றிடும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜெயசூரியா. அவருடைய மகன் அசோக் பாபு (53). நிதி நிறுவன அதிபர். இவரிடம், மேலசண்முகபுரம் வண்ணார் 2-வது தெருவை சேர்ந்த பால கணேசன் (40) என்பவர் ஆடிட்டராக உள்ளார். அசோக் பாபு கடந்த 5 வருடமாக வருமான வரி செலுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், கடந்த 2014-ல் வருமான வரி செலுத்துவதற்காக, பால கணேசனிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை அசோக்பாபு கொடுத்துள்ளார். ஆனால் பாலகணேசன் அந்த பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக் பாபு தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ஆடிட்டர் பால கணேசன் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Thursday, February 04, 2016

On Thursday, February 04, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஜனவரி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று சர்வதேச தரவரிசை சதுரங்க போட்டிகள் இன்று தொடங்கி (4ம் தேதி) 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் துவக்க நிகழ்ச்சி இன்று காலை காமராஜர் கல்வி அரங்கத்தில் நடைபெற்றது. பிடே (FIDE) எனப்படும் உலக சதுரங்க கழகம், அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் டீகே செஸ் மையம் இணைந்து நடத்தும் சர்வதேச தரவரிசை செஸ் போட்டியில் சுமார் 300 போட்டியாளர்கள் பங்கு பெறுகிறார்கள். 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்தும், இங்கிலாந்து நாட்டில் இருந்தும் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள். சர்வதேச மாஸ்டர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஆச. மேனுவல் ஆரோன் போட்டிகளை துவக்கி வைத்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பிரிவு தலைவர் ஹரிகரன் வாழ்த்துரை வழங்கினார். டீகே செஸ் மையத்தின் தலைவர் டாக்டர். வசீகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

சர்வதேச நடுவர் அனந்தராமன், மற்றும் எப்ரேம் ஆகியோர் போட்டிகளுக்கான விதிமுறைகளை போட்டியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 64 பரிசு கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டீகே செஸ் மையத்தின் செயலாளர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை கற்பகவள்ளி, பேராசிரியர்கள் சாந்தி, ரெமோனா, சுபாஷினி, தேவராஜ், ராஜேஷ், IQAC ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, அலுவலர்கள் பொன்ரத்தினம், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
On Thursday, February 04, 2016 by Unknown in , ,    
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
 
பா.ம.க. வரைவு தேர்தல் அறிக்கை அறிவிப்பு பொதுக்கூட்டம், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலையில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் உஜ்ஜல் சிங் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் லிங்கராஜ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அரிச்சந்திரன், மத்திய மாவட்ட தலைவர் சேசையா பர்னாந்து, தெற்கு மாவட்ட தலைவர் ச.வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் மு.சின்னத்துரை வரவேற்றுப் பேசினார். 

கூட்டத்தில், பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாமக ஆட்சிக்கு வந்தால் மக்களை தேடி வருவேன். போலீஸ் பாதுகாப்பு எதுவும் தேவையில்லை.  மதுவையும், ஊழலையும் ஒழிப்பதுதான் மாற்றம். பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வியும், சுகாதாரமும் இலவசமாக வழங்கப்படும். ஏழை மாணவரும், வசதி படைத்தவரும் ஒன்றாக படிக்கும் வகையில் கல்வி வழங்கப்படும்.
 
தமிழகத்தில் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். அவர் பெயரளவிற்குத்தான் இருக்கிறார். எதிர்கட்சியாக இருந்து அவர் ஏதாவது பேசியுள்ளாரா? மக்களுக்காக குரல் கொடுத்துள்ளாரா? எதிர்கட்சி தலைவராவே அவரால் செயல்பட முடியவில்லை. இந்நிலையில் அவர் முதல்வராக இருந்தால் தான் என்ன செய்துவிட முடியும். மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்க்கமுடியும்.  மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்று ஒரு நாடகத்தை நடத்திவருகிறார். இருப்பினும் மக்கள் அதனை காமெடியாகத்தான் பார்த்து வருகின்றனர். 

4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் துணை முதல்வர் அப்போது அவருக்கு விவசாயிகள், நெசவாளர்கள் நிலை குறித்து தெரியவில்லையா? அதவரது தந்தையோ யாரவது கூட்டணிக்கு வாருங்கள் என கையேந்தி வருகிறார். திமுகவுடன் கூட்டணிக்கு செல்ல எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களை நம்பியே பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது.  

அவருக்கு என்ன அம்னீசியா வந்துவிட்டதா? திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்.  திமுக தலைவர் கருணாநிதி  யாரவது கூட்டணிக்கு வாருங்கள் என கையேந்தி வருகிறார். திமுகவுடன் கூட்டணிக்கு செல்ல எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களை நம்பியே பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது. 

முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளை மக்கள் மறக்கமாட்டார்கள்.  அதிமுக மீது மக்கள் தற்போது கடும் கோபத்தில் உள்ளனர். நமது முதல்வர் வீட்டை விட்டு வெளியே வரவேமாட்டார். சென்னையில் வெள்ளம் வந்து ஆயிரக்கணக்கானோர் அவதிப்படும் போதுகூட அவர் வெளியே வரவில்லை.  சுதந்திர இந்தியாவில் அதிகம் ஊழல் செய்தவர்கள் தான் தற்போது ஆட்சியில் உள்ளனர். இன்னும் 2 மாதம் தான் அதற்கு பின்னர் அம்மா ஆணை, பூனை என எதுவும் இருக்காது. கூடாரமே காலியாகிவிடும். 

அதிமுக கொள்ளையடித்த காசை கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் தேடும் இளைஞர்களை நம்பித்தான் நான் களமிறங்கியுள்ளேன். ல கட்சிகள் கூட்டணிக்காக வாங்க வாங்க என கூவிக்கொண்டே இருக்கின்றனர். அதிமுக திமுக முடிந்துபோய்விட்டது. இன்னும் 4 பேர் கடந்த மாதம் இருந்தனர். இந்த மாதம் 3 பேர் இருக்கின்றனர். அடுத்தமாதம் தேர்தல் வரும்போது யாரும் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவும், திமுகவும் மக்களை இலவசங்களை வழங்கி மக்களை சுயமரியாதை இழக்க செய்துவிட்டனர். 

பாமக கூட்டணிக்கு யார் வந்தாலும் மகிழ்ச்சிதான். யாரும் வராவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்.  விஜயகாந்த் செல்லுமிடமெல்லாம் துப்பிக்கொண்டே செல்கிறார். பாமக கடந்த 4 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட போராட்டம், 8 மாநாடுகளை நடத்தி, தேர்தல் அறிக்கையை ஒரு வருடத்திற்கு முன்னரே தாயாராக வைத்துள்ளது. நாங்கள் தனித்து போட்டியிடும் முடிவை மக்களை நம்பித்தான் எடுத்துள்ளோம். எங்கள் தைரியம் யாருக்கும் வராது.  60 வயது திமுகவும், 44 வயது அதிமுகவும் தனித்து போட்டியிட தயாரா? பாமக வின் வளர்ச்சி மற்ற கட்சிகளுக்கு பயமாகிவிட்டது. பாமக ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும். 
 
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் நேர்மையான, கண்ணியமான ஆட்சி நடந்தது. அப்போது பல தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்புகளை காமராஜர் கொண்டுவந்தார். இதனால்தான் அனைவரும் காமராஜர் ஆட்சி வரவேண்டும், என்கிறார்கள். அந்த ஆட்சியை கொண்டு வர எனக்கு வாய்ப்பு தாருங்கள். நடித்தவர்கள் ஆண்டது போதும். இனி படித்தவர்கள் தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள். சினிமாவில் நடித்தால் உடனடியாக அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. ‘கட்அவுட்‘க்கு பாலாபிஷேகம் செய்வது தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. 

இதை எல்லாம் மாற்ற, கலாசார மாற்றம் வர வேண்டும். நான் சினிமாவுக்கு எதிரானவன் அல்ல. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவன். நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக பூரண மதுவிலக்கை கொண்டு வருவேன். ஊழல் இல்லாத ஆட்சி அமையும். சேவை பெறும் உரிமை சட்டம், லோக் அயுக்தா கொண்டு வருவோம்.  இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அன்னத்தாய், மாவட்ட துணைத்தலைவர் இசக்கிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர அமைப்பாளர் எ.பாலமுருகன் நன்றி கூறினார். 

Wednesday, February 03, 2016

On Wednesday, February 03, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப்ரவரி 05ம் தேதி முதல் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.  

இக்கூட்டத்தில் பதிவு செய்த சமூக  ஆர்வலர்கள், ஊர்த் தலைவர்கள், பெரியவர்கள் அவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.  அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து  கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
On Wednesday, February 03, 2016 by Unknown in , ,    

சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக  தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சித் துறை பொதுமேலாளர் எம்.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது, சுய உதவிக் குழு - வங்கிக் கடன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதில் தனியார் துறை வங்கிகளில் 2014-2015 ஆண்டிற்கான மிகச் சிறந்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசினை பெற்றுள்ளது.  

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) சென்னையில் நடத்திய விழாவில், இவ்விருதினை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மிகிஷி வழங்க, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எம்.செய்யது முகமது பெற்றுக்கொண்டார். நபார்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளர் கே.வெங்கடேஸ்வர ராவ் உடனிருந்தார்.
On Wednesday, February 03, 2016 by Unknown in , ,    

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 1500 குடும்பங்களுக்கு இன்று வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் தூத்துக்குடி மற்றும் அருகாமாமையில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அய்யனடைப்பு, மறவன்மடம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பக்கெட், அரிவாள்மனை மற்றம் இதர சமையல் பாத்திரங்கள் ஆகியவை உள்ளடக்கிய நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டன. 

ஸ்டெர்லைட் காப்பர் வணிகத் தலைவர் தனவேல், தூத்துக்குடி தாசில்தார் சந்திரன் ஆகியோர் இணைந்து நிவாரண பொருட்களை வழங்கினர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மனதார பாராட்டினார். ஸ்டெர்லைட் காப்பர் சமுதாய வளர்ச்சி பிரிவு மற்றும் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். கைலாசம், மக்கள் தொடர்பு தலைவர் இசக்கியப்பன், மற்றும் தட்டப்பாறை வருவாய் ஆய்வாளர் ஜானகி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tuesday, February 02, 2016

On Tuesday, February 02, 2016 by Unknown in , ,    
பஞ்சாயத்து தலைவியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஹரீஸ் ரவி (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பால் என்பவரது கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக பொது இடத்தில் வாய்க்கால் வெட்டினாராம். இதற்கு கடையனோடை ஊராட்சி மன்றத் தலைவர் ரோஸ் ஜெயக்கொடி (64) தடை விதித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஹரீஸ் ரவி, தனது ஆதரவாளர்களான அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (29), ஜெயசீலன் (50), ஆகியோருடன் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து ரோஸ் ஜெயக்கொடியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினாராம். 

இதில் ரோஸ் ஜெயக்கொடி பலத்த காயம் அடைந்தார். அலுவலகத்திலிருந்த மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரீஸ் ரவி உட்பட 3பேரையும் கைது செய்தனர். கடந்த 14.09.2012-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா ஹரீஸ் ரவிக்கு 2 ஆண்டு சிறை, 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு இன்று கூறினார். சாட்சியம் இல்லாத காரணத்தினால் மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜரானார். 
On Tuesday, February 02, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின இருசக்கர மோட்டார் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தொடங்கி வைத்தார்.

மகாத்மாகாந்தி  நினைவு நாளான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது இந்திய அளவில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை இரு வார தொழுநோய் விழிப்புணர்வு இயக்கமாக நடத்தப்படுகிறது. இதன் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலங்கள், கருத்தரங்குகள், தொழுநோய் சிகிச்சை முகாம, மாற்றுத்திறனாளிகள் முகாம், நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற பல நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகிறது.

இதையொட்டி மதுரை மாவட்டத்திலிருந்து தொடங்கிய வாகனப் பேரணி மூலம் குமரி மாவட்டம் வரை இலட்சக்கனக்கான மக்களை சந்தித்து தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த இருசக்கர மோட்டார் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து ஆட்சியர் எம்.ரவி குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Monday, February 01, 2016

On Monday, February 01, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்பாளரும், மாவட்ட செயலாளருமான சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜான்ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் ஜெயராஜ், பாக்கிய ரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சரத்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதிலும் தென்காசி தொகுதிக்குதான் அதிக வாய்ப்பு உள்ளது.
எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சி தொண்டர்களின் விருப்பத்தை பரிசீலித்து வருகிறேன். எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதற்காக வருத்தப்படவில்லை.
இவர்கள் வெளியேறியதால் எங்களது கட்சிக்கு பலம் அதிகரித்துள்ளது. பலவீனம் ஏற்படவில்லை. வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் வருகிற 7–ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்.
தற்போது நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருந்து வருகிறோம். அ.தி.மு.க.வை நான் விமர்சித்ததாக கட்சியை விட்டு வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழகத்தில் தற்போது அனைத்து கட்சியினரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஏன் நாங்கள் முதல்வராக கூடாது. எங்களுக்கும் அந்த ஆசை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, January 30, 2016

On Saturday, January 30, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணக்காடு வன்னிமா நகரத்தைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி, இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
2–வது மகன் சிவகுரு (வயது 30). இவருக்கு திருமணமாகவில்லை. விவசாயம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுருவின் பெற்றோர் இறந்து விட்டனர். எனவே சிவகுரு தனது சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுரு தனது மோட்டார் சைக்கிளிள் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காலை பக்கத்து ஊரான சண்முகபுரத்தில் இருந்து ராணி மகராஜாபுரம் சாலையின் அருகில் காட்டுப்பகுதியில் சிவகுரு தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளிலும் தனியாக கிடந்தது. சிவகுருவின் தலையில் கல்லால் தாக்கி அவரை மர்ம நபர்கள் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுருவை கொலை செய்தது யார்? சொத்து தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக வன்னிமாநகரம், தளவாய்புரம் பகுதிகளை சேர்ந்த சிவகுருவின் நண்பர்கள் 10 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடைசியாக சிவகுருவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என டி.எஸ்.பி. கோபால் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கொலையாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்று கூறினார்.

Friday, January 29, 2016

On Friday, January 29, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் சீரிய திட்டமான அம்மா மக்கள் சேவை மையம் தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்டது. இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் விண்ணப்பங்கள் மூலம் தங்கள் குறைகளை மண்டல அலுவலகங்களில் கொடுக்கலாம். 

பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு கணினி மூலம் பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் கைப்பேசியில் குறுந்தகவல் மூலம் பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பது தெரிவிக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் தலைமை தாங்கினார். 

மண்டல உதவி ஆணையாளர்கள் (பொ) சரவணன், சுப்புலெட்சுமி, ரவீநாதன், (பொ)கல்யாண சுந்தரம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பெருமாள்தாய், மகாலெட்சுமி, சாந்தி, முப்பிடாதி, மெஜீலா, சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சர்மிளா அருள்தாஸ், பொன்ராஜ், சரவணன், ஆனந்தகுமார், சகாயராஜ், கமலக்கண்ணன், ஜெயக்குமார், தனராஜ், செல்வராஜ், தவசிவேல், மனோகர், சுடலைமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Friday, January 29, 2016 by Unknown in , ,    
ஸ்டெர்லைட் காப்பர் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 'கலர்ஸ்' என்ற ஓவியப் போட்டி வரும் ஜனவரி 31-ம் தேதி தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள விகாசா பள்ளியில் நடைபெற உள்ளது.

இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எனது மகிழ்ச்சி என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம், இரண்டாயிரம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 8 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும்.

வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ. 500 மதிப்புள்ள 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ மக்கள் தொடர்பு பிரிவு, ஸ்டெர்லைட் காப்பர், புறவழிச்சாலை, சிப்காட் வளாகம், தூத்துக்குடி - 2 என்ற முகவரிக்கோ அல்லது ளவநசடவைநஉழிpநசஉழடழரசளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-4242940 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, January 21, 2016

On Thursday, January 21, 2016 by Unknown in , ,    
திருச்செந்தூர் பகுதியில் 2 குழந்தைகளிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருச்செந்தூர் கீழவெயிலு கந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தனது கைக்குழந்தையுடன் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சிறுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியுள்ளான். குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோல் மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (32). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். தனது கைக்குழந்தையுடன் ஜெயபால் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி விட்டான். இதுகுறித்து ஜெயபால் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்கள், நகைகள், குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் முறையாக கண்காணிப்பில் ஈடுபடாமல் மெத்தனம் காட்டி வருவதால் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட மிரண்டு போய் உள்ளனர். 
On Thursday, January 21, 2016 by Unknown in , ,    
குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளை பராமரிப்பதற்கு, வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுவதாக, ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தாெடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வளர்த்து பேணுதல் வழிகாட்டுதல் 2015-ன்படி இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் உள்ள தத்துக் கொடுப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்டறியப்பட்டு, இக்குழந்தைகளை குடும்பச் சூழலில் வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிட வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுகிறது.

வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் - என்பவர் சொந்த குழந்தைகள் இருந்தோ அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர்களாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம். சமுதாயத்தில் உள்ள குழந்தைகளில் பெற்றோர்கள் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் அல்லது பெற்றோர் இன்றி தவிக்கும் குழந்தைகளை - வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்ற வகையில் பராமரிப்பு செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள் நேரடியாக பின்கண்ட முகவரியில் செயல்படும் குழந்தைகள் நலக்குழு தலைவர் / உறுப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை அணுகலாம்.

வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நிதி உதவி தேவைப்படும் வளர்ப்பு பராமாரிப்பு பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பாரமாரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். 

விண்ணப்பம், நிபந்தனைகள், நடைமுறைகளை பெற்றோர்கள், அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், http://wcd.nic.in. என்ற இணையதளத்திலிருந்து Model Guidelines for Foster Care, 2015 - India என பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: தலைவர், குழந்தைகள் நலக்குழு, 176, முத்துக்குவியல் பில்டிங், மணிநகர், பாளைரோடு, தூத்துக்குடி 628 003. கைப்பேசி எண்: 9366700579

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 176, முத்துச்சுரபி பில்டிங், மணிநகர், பாளைரோடு, தூத்துக்குடி 628 003. கைப்பேசி எண்: 9488433375