Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி      கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏஸி' நிழற்கூடம் அமைக்கப்படுகிறது கரூர் மாவட்டத்தில், ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை பிரதானமாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினசரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு, பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். கரூர் சட்ட தொகுதியில், முக்கிய இடங்களில், பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்கூடங்களின் மேற்கூரை உடைந்துள்ளது. பயணிகள் உட்கார அமைக்கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமல் போய் விட்டது. கரூர் சட்டசபை தொகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நிழற்கூடம், பழக்கடையாகவும், மண்மங்கலத்தில் உள்ள நிழற்கூடம் பயனற்றும், கலைக்கல்லூரி உள்ள நிழற்கூடம், குடிமகன்களின் இருப்பிடமாகவும் உள்ளது. கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்ட், மகாதானபுரம், மணவாசி ஆகிய இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிழற்கூடம் கிடையாது. குளித்தலையில் சுங்ககேட், மணப்பாறை, திருச்சி, கரூர் ஆகிய மார்க்கத்தில், மேட்டுமருதூர், பரளி, கோட்டையார் தோட்டம், பனிக்கம்பட்டி, கணேசபுரம், சிவாயம் உள்ளிட்ட இடங்களில் நிழற்கூடம் இல்லை. அய்யர்மலை, ஈச்சம்பட்டியில் உள்ள நிழற்கூடம், பயனற்று கிடக்கிறது. கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் பல லட்சம் செலவிட்டு கட்டப்பட்ட நிழற்கூடம் பயனற்று கிடக்கிறது. இந்நிலையில், கரூர் நகரில் உழவர்சந்தை, தான்தோணிமலை ஆகிய இடங்களில் தலா, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், "ஏஸி' நிழற்கூடம் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது. 24 லட்சம் மதிப்பில் கட்டப்படும் "ஏஸி' நிழற்கூடத்தால் யாருக்கு பயன் என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
On Thursday, November 06, 2014 by Unknown in ,    
 நெடுஞ்சாலை போலீஸார் நியமனத்தில் குளறுபடி                                                                                                                                                                                                                                                                     தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்து அசம்பாவிதம் போன்றவற்றை தடுக்கும் வகையில், போக்குவரத்து ரோந்து பிரிவு (ஹைவே பேட்ரோல்) போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து பிரிவில், ஒரு எஸ்.ஐ., ஒரு ஏட்டு, ஒரு முதல்நிலை காவலர், ஜீப் டிரைவர் என நால்வர் பணியில் இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஐந்து இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, சுழற்சி முறையில் நியமிக்கப்படுவது வழக்கம். இதில், சீனியாரிட்டி போலீஸாரை முதலில் நியமிக்கின்றனர். இவர்கள், ஆறு மாதம் வரை தான் பணிபுரிய முடியும். அடுத்து, இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், சிலர் கலெக்ஷனுக்காக, அதே பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். போக்குவரத்து பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மற்ற போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Thursday, November 06, 2014 by Unknown in ,    
 

கரூரில்அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கக் கூட்டம்                                                    தமிழ்நாடு அண்ணல்காந்தி ஓட்டுனர் நடத்துனர், கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் சுப்புராமன் பேசினார். மனோகரன், ராமச்சந்திரன், துரைராஜ், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில், ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடத்துவது, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற உறுப்பினர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும். 
ஓட்டுனர், நடத்துனர்கள் பணியில் இருக்கும்போது அவசியம் வாகனத்தின் ஆவணங்களையும் ஓட்டுனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும். டிரிப் ஷீட் மிக கவனமாக பராமரிக்க வேண்டும். ஓட்டுனர் நடத்துனர் மோட்டார் வாகன சட்டத்தை மதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுரைகளை ஏற்று வாகனங்களை இயக்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
On Thursday, November 06, 2014 by Unknown in ,    

   

எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ரூ24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதியாம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், எழுதியாம்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செக்கணத்தில் எம்பி தொகுதி நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய சமுதாய கூடம், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி பாம்பரத்தான்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். திருக்காம்புலியூர் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி தலைவர் கல்யாணி, ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிடங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்து பேசினார். தொகுதி இணை செயலாளர் ராஜா, ஒன்றிய பேரவை செயலாளர் மணவாசி வீரமணி, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய மேற்பார்வையாளர் விமலா, கண்காணிப்பாளர் ரேணுகா, கிளை செயலாளர்கள் பெருமாள், மலையாளன், குணா, குமரவேல், ஊர் நாட்டாண்மை கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

வரவணை பகுதியில் குவாரியில் வெடித்த கற்கள் விவசாய நிலத்தில் விழுந்தது குளித்தலை ஆர்டிஓ ஆய்வு                   கடவூர் தாலுகா வரவணை பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கல் பறந்து விவசாய நிலத்தில் விழுந்ததால் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். 

கடவூர் தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வரவணை ஊராட்சியில் அதிக படியான குவாரிகள் உரிய அனுமதியோடும் மற்றும் அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் வரவணை அருகில் உள்ள தனியார் கல் குவாரியில் திடீர் என்று நில அதிர்வு போன்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. பின்னர் அதில் இருந்து பறந்த கற்கள் விவசாய பகுதியில் போய் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என குவாரியை முற்றுகையிட்டனர். 
அதன் பின்னர் நேற்று குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சித்திரைராஜ், மாவட்ட கனிம வள சுரங்கத்துறை  புள்ளியியல்  உதவி இயக்குனர் ஜெயபால், கடவூர் தாசில்தார் துரையரசன் ஆகியோர் குவாரியை ஆய்வு செய்தனர். இதில் அருகருகே உள்ள மூன்று குவாரிகளை ஆய்வு செய்தனர். 
பின்னர் உரிய ஆவணங்கள் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.

 மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர்  அப்பகுதி மக்கள் புகார் மனு ஒன்றையும் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர்  சித்திரைராஜிடம் வழங்கினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.     

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

 ராமேஸ்வரம் மீனவர் 5 பேருக்கு தூக்குதண்டனை எதிர்த்துகரூரில் வக்கீல்கள்  ஆர்ப்பாட்டம்                   ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை உடனே விடுவிக்க கோரியும், கரூர் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற வாயில் முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 5 தமிழக மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். வக்கீல்கள் ஜெகநாதன், ராஜேந்திரன், ராஜா, லட்சுமணன், மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

கரூரில் வங்கி மேலாளர்களுக்குஒருநாள் கருத்துப்பட்டறை 

 கரூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் குறித்து ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெற்றது.
நிதியியல் உள்ளாக்கம், நிதியியல் கல்வியறிவு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளை மேலாளர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் ஒரு நாள் கருத்துப்பட்டறையை கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்து பேசியதாவது:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2011ல் துவக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களில் புதுவாழ்வு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மற்றும் குளித்தலை வட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதுவாழ்வு திட்டத்துடன் இணைந்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்தில் நன்றாக செயல்படுகிறது. அரசு வழங்கும் திட்டங்கள் வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து உதவிடும் வகையில் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்த்திட வேண்டும். அதனடிப்படையில் கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசுத்துறைகள் வழங்கும் நிதியினை முறையாக ஏழை மக்களுக்கு வங்கிகள் மூலம் சென்றடையவும், இலக்கு மக்களை ஒருங்கிணைத்து நிலைத்த மற்றும் நீடித்த தன்மையுடைய வலுவான மக்கள் அமைப்புகளான சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒரே தொழில் செய்யும் கூட்டமைப்புகளுக்கு நிதி வழங்கிட இந்த கருத்துப்பட்டறை நடைபெறுகிறது. இதன் நோக்கம் புதுவாழ்வு மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என அனைவரும் இணைந்து தகவல் பரிமாற்றம் செய்து இலக்கை சரியாக அடைவது மட்டுமின்றி விவசாயம், தொழில் என கலாசாரத்திற்கு ஏற்றவாறு உதவ வேண்டும் என்பதாகும். இந்த கருத்துப்பட்டறையில் அனைவரும் கலந்தாலோசித்து முழு ஒத்துழைப்பை வழங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் முகமது சகாப்தீன், புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல், உதவி திட்ட இயக்குநர்கள் லட்சுமணன், விஜயகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், மாவட்ட வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் தமயந்தி, லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் (ஓய்வு) ராமச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் (நுண்நிதி) முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
அனுமதியில்லாத உரம் விற்பனைக்கு தடை -   கரூர் மாவட்டகலெக்டர் உத்தரவு                                                                                                               கரூர் மாவட்டத்தில், அனுமதியின்றி உரம் விற்பனை செய்ததாக, 27 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 46 மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது' என, கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை தீவிரமாக துவங்கியதால், சம்பவ பருவ நெல் சாகுபடிக்கான நடவுப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தேவைப்படும் ரசாயன உரம் போதுமான அளவில், துவக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில், யூரியா உரம் உற்பத்தி இல்லாதததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால், கரூர் மாவட்டத்துக்கு தேவையான உரம், பிற நிறுவனங்கள் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட, சாகுபடி பயிர்களுக்கு தேவையான, யூரியா உரம், நவம்பர் மாதத்தில், 1,800 மெட்ரிக் டன்னாகும். இருப்பினும், பற்றாகுறை ஏற்படாமல் கூடுதலாக, 600 மெட்ரிக் டன் சேர்த்து, 2,400 மெட்ரிக் டன்னுக்கு, தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வினியோகிக்க வேளாண்மை இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், உர வினியோகத்தை கண்காணிக்கும், சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 74 தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்து, ஒன்பது உரமாதிரி எடுக்கப்பட்டது..
தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 46 மெட்ரிக் டன் உரம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 27 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அனைத்து விவசாயிகளுக்கும், தேவைப்படும் உரங்களை தட்டுபாடு இல்லாமல் வழங்க, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசீது பெற்றால் மட்டும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள், யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ளஅங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு கலெக்டர் ஜெயந்தி அழைப்பு                       கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என, கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், 97 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ஒரு குறு அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும், 124 அங்கன்வாடி உதவியாளர்களுக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.விண்ணப்பப்படிவம், காலிப் பணியிட விவரம் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்களை, அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன், சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டை இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர், 10ம் தேதி மாலை, 5.45 மணிக்குள், அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

அதிகாரிகள் மெத்தனத்தால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு .................  கரூர் மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வரும் மெத்தனப் போக்கால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டீக்கடைகள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எளிதில் மக்கிப்போகாது. மேலும் மறுமுறை பயன்படுத்தவும் முடியாது. இந்த பிளாஸ்டிக் கப்புகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. வடிகால்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. துப்புரவு பணியிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்யவேண்டும் என நீண்ட காலமாக சுற்றுச்சூழல் இயக்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். நகராட்சிகளாக செயல்பட்ட கரூர், இனாம்கரூர், தாந்தோணி பகுதிகளில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. தற்போது ஒரேநகராட்சியாக இணைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒருங்கிணைந்த நகராட்சியிலும் தடை தீர்மானம அமலுக்கு வந்தது. இருந்தும் பாலிதீன் பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்படவில்லை.


அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்கினறனர். எனினும் உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கினர். துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து பேப்பர் கப் அல்லது கண்ணாடி கிளாஸ்களில் தான் டீ வழங்கப்பட்டு வந்தது. தொடர் நடவடிக்கை இல்லாமல் போனதால் மீண்டும் பயன்பாட்டில் அத்தனை பொருட்களும் உள்ளன. மொத்தமாக டீ, காபி போன்றவற்றை வாங்கி சென்று விநியோகிப்பவர்கள் பிளாஸ்டிக் கப்புகளையே பயன்படுத்துகின்றனர்.

தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாக மீண்டும் பிளாஸ்டிக் கப்புகள் டீக்கடை மட்டுமின்றி, திருமண மண்டபங்கள், கூட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவிழாக்களிலும் பிளாஸ்டிக் கப் தான், மேலும் இவை களை மிஞ்சும் வகையில் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டு கொள்ளாத நிர்வாகம்
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகள்  அதிக அளவில் டாஸ்மாக் பார்களில் இருந்து தான் வருகிறது. டாஸ்மாக் பார்கள் அரசின் மேற்பார்வையில் இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ உரிய நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால் என்னகாரணத்தினாலேயோ டாஸ்மாக் நிர்வாகம் இதனை கண்டுகொள்வதில்லை. பல மாவட்டங்களில் பேரூராட்சி, பஞ்சாயத்து நிர்வாகங்கள் கூட பிளாஸ்டிக்பொருள் பயன்பாட்டை தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பல கடைகளில் போர்டு வைத்துள்ளனர். கேரிபேக்குக்குகட்டணம் வசூல் என அறிவித்து அதன் பயன்பாட்டை குறைக்கின்றனர். பெரிய அளவில் பறிமுதல் செய்து அழித்துவிடுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் கரூர் மாவட்டத்தில் இல்லை என்று புகார் தெரிவித்தனர்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தேவைக்கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை ...........                                                                   கரூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப உரங்களைத் தட்டுப்பாடு இல்லாமல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக தொடங்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, சம்பா நெல் சாகுபடிக்கான நடவுப் பணி  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குத் தேவைப்படும் ரசாயன உரங்கள் போதுமான அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில் யூரியா உரம் உற்பத்தி இல்லாததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால் கரூர் மாவட்டத்துக்குத் தேவையான உரங்கள் பிற நிறுவனங்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உயரி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட சாகுபடி பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் நவம்பர் மாதத்தில் 1800 மெ.டன் ஆகும். இருப்பினும் பற்றாக்குறை ஏற்படாமல் யூரியா உரத் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 600 மெ.டன் சேர்த்து 2400 மெ.டன்னுக்கு தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், பெருமளவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கும் படி வேளாண் இணை இயக்குநரும், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.

உர விநியோகத்தை கண்காணிக்க கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 74 தனியார் உரக்கடைகளை ஆய்வுசெய்து 9 உர மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவைப் பொருத்து சட்டரீதியாக அல்லது துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 46 மெ.டன் உரங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சிறிய குற்றங்கள் மேற்கொண்டமைக்காக 27 உரக்கடைகள் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ரசீது கேட்டுப் பெற வேண்டும்
உர மூட்டைகளின் மேல் உள்ள விற்பனை விலைப்படியே உரம் விற்பனை செய்யப்பட வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகள் கண்டிப்பாக ரசீதை கேட்டுப் பெற வேண்டும். ரசீது பெற்றால் மட்டுமே தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள் யூனியின் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திலோ உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும், மண்ணின் தன்மைக்கேற்ப மண்மாதிரி முடிவுகளின்படியே உரமிட வேண்டும். அதிகளவு யூரியா இடுவது மண்ணின் வளத்தை பாதிப்பதோடு பயிர்களுக்கும் பூச்சிகளால் அதிக சேதராம் ஏற்படும். ஆகவே, தேவையறிந்து உரமிட்டும், புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா         வேலாயுதம்பாளையம் : கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள செட்டிதோட்டம், கற்பக விநாயகர் கோவில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். பின், கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கலந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
கரூர் அ.தி.மு.க., தொண்டர் குடும்பத்துக்குநிதியுதவி         வேலாயுதம்பாளையம் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அதிர்ச்சியில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டரின் குடும்பத்துக்கு, நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட தளவாபாளையம், ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் ஜீவா (எ) பாக்கியராஜ், 40. அ.தி.மு.க. தொண்டர். இவருக்கு ரேகா என்ற மனைவியும், சிவதி, 17, ஹரி கிருஷ்ணா, 13, மகன்களும் உள்ளனர்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதித்ததால், அதிர்ச்சியில் பாக்கியராஜ் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு, நிவாரண நிதியாக, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கரூர் தொகுதி செயலாளர் திருவி.கா., காகித ஆலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் மார்க்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..  
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே 2 பிரிவினர் மோதல் விவகாரத்தால் போலீசார் தொடர்ந்து முகாம்                                   கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- நாகவள்ளி. தம்பதியின் மகள் வினிதா (17), கடந்த ஜூன் 23ம் தேதி இப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போதும் இதுவரை குற்றவாளிகள் யார் என்று கண்டறியப்படவில்லை.

இதனிடையே, கடந்த 2ம் தேதி இரவு சிலர் போதையில் ஒரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக வந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
 இருந்த போதும், நேற்று காலை சிலர் அங்கிருந்த வீடுகளின் முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர். மற்றும் சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த சின்னாதாராபுரம் ஏட்டு ஆனந்தன், கிராமத்தை சேர்ந்த கனகா (18), சித்ரா (17), பூர்ணிமா (16), சுரேஷ் (18) ஆகியோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மாயனூர் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 40 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிச்சம்பட்டி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வழியாக வருவோர்  தீவிர விசாரணைக்கு பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பிச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.மேலும், அக்கிராமத்தில் கரூர் எஸ்பி ஜோஷிநிர்மல்குமார், திருச்சி எஸ்பி ராஜேஸ்வரி, குளித்தலை ஆர்டிஓ சித்திரைராஜ், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வேணி ஆகியோர் தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.
On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

கரூர் 80 அடி சாலையில் போலீஸ் அறிவிப்பை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி  -            காவல் துறை அறிவிப்பை மீறி, 80 அடி சாலையில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். கரூர்- கோவை சாலை அருகே 80 அடி சாலை உள் ளது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளான செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் பகுதிகளுக்கு வேன்கள் லாரிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. இச்சாலையில் வாகனப்பெருக்கம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது., லாரிகள் மினிலாரிகள், வேன்களை இந்த சாலையில் நிறுத்திவைத்துவிட்டு பின் னர் ஓட்டுநர்கள் எடுத்து செல்கின்றனர். இதனால் வழக்கமாக சாலையில் செல் லும் கார்கள், இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொள்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 80அடிசாலையில் வாகங்களை நிறுத்தி வைக்கக்கூடாது என போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். இதுபற்றிய அறி விப்பு பலகையும் இச்சாலை யில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கின்றன., ஆனால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் அறிவிப்பையும் மீறி வாகனங்கள் தொடர்ந்து இந்த சாலையில் பார்க்கிங் செய்யப்படுகின்றன.

 சனிக்கிழமை டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சனிக்கிழமை இந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனவே காவல் துறை உயர்அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு வாகனங்களை நிறுத்தாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கி அறிவித்து அந்த இடத்தில் வாகங்களை நிறுத்தி வைக்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.             

Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
போலீஸ் குடும்பத்தினர் குற்றச்சாட்டு ரேஷன் பொருட்கள்                                                                                                                              போலீஸாரின் குடும்பத்தினருக்கு, மானிய விலையில் வழங்கும் ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை,'' என்று போலீஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும், 1.20 லட்சம் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், தனியே ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, ரேஷன் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ரேஷனில் சரியாக பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கரூரில் பணிபுரியும் போலீஸார் கூறியதாவது:
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சரிவர கிடைப்பதில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை எப்போதாவது தான் தருகின்றனர். எங்களுக்கு மாதக் கடையில், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை தான் ரேஷன் பொருட்கள் வழங்குகின்றனர். இது குறித்து ரேஷன் கடைக்காரரிடம் கேட்டால், போலீஸார் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பொருட்கள், இன்னும் வந்து சேரவில்லை, என்று கூறுகின்றனர். கோதுமை சுத்தமாக கொடுப்பதே இல்லை.
இதனால், போலீஸாரின் குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இது குறித்து கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விக்னேஷ்வரன் கூறியதாவது:
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன் பின், மற்றவர்களுக்கு வழங்கி வருகிறோம். மாதக்கடைசியில் பொருட்கள் வழங்கப்படுவது, என்று போலீஸார் கூறுவது போல் இல்லை. ஸ்டாக் இருந்தால், அனைவருக்கும் கொடுக்கப்படும். போலீஸாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு இருந்தால், சம்மந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மூலம் தெரிவிக்கலாம். உடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்றால், அந்த கடைகளை குறிப்பிட்டு, புகார் வந்தால் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜோசி நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸார் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
On Monday, November 03, 2014 by Unknown in ,    
வாக்காளர் பெயர் சேர்ப்பு கரூர் கலெக்டர் அதிரடி                                                                                                           கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை பார்வையிட்ட கலெக்டர் ஜெயந்தி, கம்ப்யூட்டர் மூலம், புதிய வாக்காளரை பதிவு செய்தார்.
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் தாலுக்கா மண்மங்கலம் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி, கரூர் தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை, கலெக்டர் ஜெயந்தி பார்வையிட்டார். கம்ப்யூட்டர் மூலம் தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் (ஆன்லைன்) பதிவு செய்யப்படுவதையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் பதிவுகளை சரியான முறையிலும், விரைவாக செய்யுமாறு உத்தரவிட்டார். தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், புதிய வாக்காளர் ஒருவரின் விண்ணப்பதை பெற்று, கலெக்டர் ஜெயந்தி, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தார். கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், கரூர் தாசில்தார் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
On Monday, November 03, 2014 by Unknown in ,    
அரசு மருத்துவமனையில் கழிவறை இடிப்பு : நோயாளிகளின் உறவினர்கள் தவிப்பு                            கரூர் அரசு மருத்துவமனையில், ஆண்களுக்கான கழிப்பறை இடிக்கப்பட்டதால், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனை நகரின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் வெளி நோயாளியாக வருபவர்கள் பயன்படுத்த பிரேத பரிசோதனை அருகே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே கழிவறை இருந்தது. மருத்துவமனை போலீஸாருக்கு என்று தனியே கழிவறை இருந்தது. கரூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் கூடுவதால் அருகே அமைந்துள்ள கழிவறை பயன்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென, இரண்டு நாட்களுக்கு முன் ஆண்கள் கழிவறை மற்றும் போலீஸார் பயன்படுத்தும் கழிவறை திடீரென இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நோயாளிகளை பார்க்க வருபவர்களும், வெளி நோயாளிகளும் கழிவறை இன்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து, கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் கூறியதாவது:
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், கரூர் அரசு மருத்துவமனை வந்து செல்கின்றனர். ஆண்களுக்கு, என இருந்த பொதுக்கழிப்பிடத்தை திடீரென இடித்து விட்டனர். இதனால், பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் பலர் கழிவறை இல்லாததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவறை இடிக்கும் முன், மாற்று ஏற்பாடாக ஆண்கள் கழிவறைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். உடனடியாக, அதே இடத்தில் மீண்டும் கழிவறை கட்டித்தரப்பட வேண்டும். இதற்கு உடனடியாக, கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து கரூர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
கரூர் அரசு மருத்துவமனையில், இடிக்கப்பட்ட ஆண்கள் கழிவறை இடத்தில் யோகா மற்றும் இயற்கை வாழ்க்கை முறை சிகிச்சை அளிக்க கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்காக, தனியே டாக்டர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்குள் இப்பணிகள் முடிவடையும். பிரேத பரிசோதனைக்கு வரும் உறவினர்கள் தங்குவதற்கும் சேர்த்து, மொத்தம், 30 லட்சம் செலவில் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கரூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். இதற்கு தற்காலிகமாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கை. 
On Monday, November 03, 2014 by Unknown in ,    
அங்கன்வாடி மையம்எம்.எல்.ஏ., திறப்பு                    லாலாபேட்டை: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கட்டிட திறப்பு விழா திருக்காம்புலியூர் பகுதியில் நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டபை தொகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எழுதியாம்பட்டி பகுதியில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., காமராஜ் திறந்து வைத்தார். அதேபோல், முத்துரெங்கம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 5.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். திருக்காம்புலியூர் பஞ்சாயத்தில், 9.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பணிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில், தொகுதி எம்.எல்.ஏ., காமராஜ், யூனியன் சேர்மன் முத்துசாமி, பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர் பழனிசாமி, பி.டி.ஓ., அன்புமணி, குழந்தைகள் திட்ட மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்..

Sunday, November 02, 2014

On Sunday, November 02, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பயிற்சி முகாம்                                                 கரூர், :  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த பயிற்சி முகாமை அரெட்ஸ் தொண்டு நிறுவனம் கரூர் பசுபதிபுரம் கள அலுவலகத்தில் நடத்தியது. இதில் 112 பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறுவயதிலிருந்தே குழந்தை வளர்ப்பில் அக்கறை எடுக்கவேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ லட்சுமி, தலைமைக்காவலர் விஜயலட்சுமி, முத்துலட்சுமி, கலந்து கொண்டனர்.