Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Monday, July 06, 2015

On Monday, July 06, 2015 by Unknown in ,    
மதுரையில் அதிகவட்டி தருவதாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என, காவல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை கே.கே.நகரில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குட்டியான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தலைமறைவாக உள்ளனர். எனவே, நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், மதுரை தாசில்தார் நகர் பெரியார் தெருவில் கதவு எண் 2 இன் கீழ் 316 இல் இயங்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். தொலைபேசி எண்: 0452-2532161
On Monday, July 06, 2015 by Unknown in ,    
கோவில் திருவிழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால், மனமுடைந்த பிளஸ்–2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சூர்யா (வயது 17). பிளஸ்–2 படித்து வந்தார்.
அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி, சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து பிளக்ஸ் பேனர் வைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டார்.
படிக்கிற வயதில், பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமா? என்று பெற்றோர் சூர்யாவுக்கு அறிவுரை கூறியதுடன், இதற்காக பணம் தரவும் மறுத்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்த சூர்யா, நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார்.
On Monday, July 06, 2015 by Unknown in ,    
மதுரையில் 7–ந்தேதி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை மீட்டு தந்தது வைகோ என்பதை உலகம் அறிந்ததே. இந்த அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்த, கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது அணைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு, வழக்கம் போல் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து மத்திய படை பாதுகாப்பை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
கேரளத்தின் சதி செயலுக்கு துணை போகும் விதத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களால் அபாயம் ஏற்படும் என்று அபாண்டமாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 7–ந்தேதி, மதுரை காளவாசல் சந்திப்பில் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
On Monday, July 06, 2015 by Unknown in ,    
மதுரையில் வீட்டு போர்வெல் தண்ணீரை வீதியில் விட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: மேயர் நடவடிக்கை
வீட்டு போர்வெல் தண்ணீரை வீதியில் விட்ட 2 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.
மதுரை 50–வது வார்டு வடக்கு மாரட் வீதியில் வசிப்பவர்கள் மதன்குமார், சந்தோஷ்குமார். இவர்கள் தங்கள் வீட்டிற்கு ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர். அப்போது வெளியான தண்ணீரை பொது சாலையில் விட்டதாக மாநகராட்சி மேயருக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின்பேரில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் நாராயணன் மேற்பார்வையில் செயற்பொறியாளர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது விதிமுறைகளை மீறி வீதியில் தண்ணீரை விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்

Tuesday, June 09, 2015

On Tuesday, June 09, 2015 by Unknown in ,    
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் வாலிபர் ஒருவரது உடல் இரு துண்டாக கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் இன்று காலை பார்த்தனர். இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் துண்டாகி கிடந்த வாலிபர், இன்று அதிகாலை அந்த வழியே மதுரை சென்ற ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தற்கொலை செய்த வாலிபரின் பெயர் தவமணி சங்கர் (வயது 26) என்பதும் கேட்டரிங் பட்டதாரியான அவர் பெற்றோருடன் கப்பலூரில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
On Tuesday, June 09, 2015 by Unknown in ,    
மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திருவாதவூரில் உள்ள பி.கே.எஸ். கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருவாதவூர் பகுதியில் மேலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த குவாரியில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் கிரானைட் கற்களை உடைத்து லாரி மற்றும் டிராக்டரில் கடத்த முயன்றது தெரியவந்தது.
உடனே அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து, அந்த கும்பல் வைத்திருந்த வாகனங்களை மேலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் கைப்பற்றினார். விசாரணையில், அவர்கள் லாரி டிரைவர் பனைக்குளத்தை சேர்ந்த பெருமாள், டிராக்டர் டிரைவர் டி.உலகுபிச்சான்பட்டியை சேர்ந்த ராஜு (வயது 26), லாரி உரிமையாளர்கள் டி.பழையூரை சேர்ந்த வீரணன்(32), மாயாண்டி (42), ஒத்தக் கடையை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
On Tuesday, June 09, 2015 by Unknown in ,    
மதுரையில் அதிகநேரம் பணியில் ஈடுபட கிளை மேலாளர் வற்புறுத்துவதாக புகார் தெரிவித்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  முதல் அரசுப் பேருந்து ரிசர்வ் பணி ஓட்டுநராக பணியில் உள்ளார். மாநகர் அரசு பேருந்துகளில் ஓட்டுநராக உள்ள செந்தில்குமார், ஞாயிற்றுக்கிழமை  பகலில் பணிக்கு வந்து இரவு 9 மணிக்கு பணியை முடித்துள்ளார்.
பணியை அவர் முடித்த நிலையில், வெளியூர் பேருந்துக்கு ஓட்டுநராகச் சென்றுவர மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளர் கூறியுள்ளார். வெளியூருக்குச் செல்ல முடியாத நிலையிலிருப்பதாக கூறிய செந்தில்குமார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீண்டும் மாநகர் பேருந்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதியில் கிளை மேலாளருக்கும், ஓட்டுநர் செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், செந்தில்குமார் தான் வைத்திருந்த கேனிலிருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக்கொண்டு கிளை மேலாளரைக் கட்டிப்பிடித்து தற்கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள் செந்தில்குமாரைத் தடுத்து, சமரசம் செய்தனர். பின் செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளரைக் கண்டித்து    திங்கள்கிழமை காலையில் அரசுப் போக்குவரத்துக் கழக புதூர் பணிமனை முன்பு பேருந்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் (சிஐடியூ) போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரைக் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக துணைமேலாளர் (கூட்டாண்மை) துரைராஜ் அங்கு வந்து, ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக சிஐடியூ தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறுகையில், ஓட்டுநர்களுக்கு அதிக நேரம் பணிகளை ஒதுக்குவதால் மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர். இச்செயலை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும், என்றார்

Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றி மதுரை வடமலையான் மருத்துவமனை டாக்டர்கள் சாதனைமதுரையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கோவர்த்தனன். இவரது மனைவி ஜோதி. இவர் செயற்கை முறை மருத்துவத்தில் கர்ப்பம் அடைந்தார். 6½ மாத கர்ப்பமாக இருந்தபோது டிசம்பர் மாதம் மதுரை வடமலையான் மருத்துவமனையில் ஜோதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மிக மிக குறைந்த எடையில் 3 குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி, பச்சிளம் குழந்தைகள் நல டாக்டர்கள் ஜலஜா அசோக், வினோத் ஆகியோர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:–
இந்தியாவிலேயே மிக மிக எடை குறைவாக 3 குழந்தைகள் மதுரை வடமலையான் மருத்துவமனையில் கோவர்த்தனன்–ஜோதி தம்பதியருக்கு பிறந்தது. குழந்தைகளின் தாய் ஜோதி 6½ மாதம் கர்ப்பமாக இருந்தபோது எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். சேர்ந்த 7 நாட்களில் அவருக்கு சிசேரியன் மூலம் 2 பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் பிறந்தன.
பொதுவாக ஒரு குழந்தை பிறப்பதற்கு 10 மாதங்கள் ஆகும். ஆனால் இங்கு 12 வாரங்களுக்கு முன்னதாகவே குழந்தைகள் பிறந்தன. இயல்பாக பிறந்த குழந்தையின் எடை ஏறத்தாழ 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால் ஜோதிக்கு பிறந்த 3 குழந்தைகளும் 1.5 கிலோ, 500 கிராம், 540 கிராம் எடையுடன் இருந்தது.
ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 3 குழந்தைகளும் மிக மிக எடை குறைந்ததாக இருந்ததால் மதுரை வடமலையான் மருத்துவமனையின் அதிநவீன சிசு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. இந்த சாதனை இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்தது கிடையாது.
இதற்கு முன்பு 2004–ம் ஆண்டில் உலகிலேயே மிக குறைவாக 240 கிராமில் பிறந்த குழந்தை சிகாகோவில் காப்பாற்றப்பட்டது. அதன் பிறகு 2012–ம் ஆண்டில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 450 கிராம் எடை கொண்ட குழந்தை காப்பாற்றப்பட்டது. தற்போது வடமலையான் மருத்துவமனையில் குறைந்த எடை கொண்ட 3 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்த குழந்தைகள் 3.168 கிலோ 1.320 கிலோ, 1.476 கிலோ எடையுடன் நலமாக உள்ளனர். இந்த குழந்தைகள் பிறக்கும் போது ஒரு கையளவு மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தைகள் பிறப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் மதுரை வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் தீவிர அர்ப்பணிப்பு சேவை முக்கியமானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், வடமலையான் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு சார்பில் ‘‘டாரிகா குழந்தைகள் நலத் திட்டம்’’ செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 மாதம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறலாம். இந்த திட்டத்தில் மருத்துவ ஆலோசனை பெற ரூ.250 மட்டுமே பெறப்படுகிறது. தற்போது மதுரை வடமலையான் மருத்துவமனையில் பிறந்த எடை குறைந்த 3 குழந்தைகளுக்கும் டாரிகா திட்டத்தில் ஒரு வருட காலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.
On Friday, April 17, 2015 by Unknown in ,    
கிராமப்பகுதிகளில் தனிநபர் கழிவறை கட்டுவதை ஊக்குவிக்க சுயஉதவிக்குழுவுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்
மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தை திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2015–16–ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையில் 15 லட்சம் தனிநபர் இலக்க கழிப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 66 ஆயிரத்து 800 கழிப்பறைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 25 ஆயிரத்து 91 கழிப்பறைகளும் கட்டப்படும். ஒவ்வொரு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கும் தகுதி வாய்ந்த பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
ஊரக பகுதிகளில் தனிநபர் இல்லங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கான தேவையினை உருவாக்குவது மற்றும் கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து உபயோகப்படுத்துவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு போன்றவைகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தனிநபர் இல்ல கழிப்பறைக்கு ரூ.300 ஊக்கத்தொகையாக இந்த அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாக கிடைக்கும்.
இத்திட்டம் கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும். கிராம ஊராட்சி தலைவரின் வேலை உத்தரவு பெற்றவுடன், 3 மாதங்களுக்குள் தனிநபர் இல்ல கழிப்பறையை கட்டி முடிக்கப்பட வேண்டும். இப்போது ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் தனிநபர் இல்ல கழிப்பறைக்கான மானியத் தொகை 2 தவணைகளாக விடுவிக்கப்படும். அடித்தளம் முடிந்த பிறகு முதல் தவணையும், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் 2–வது தவணையும் விடுவிக்கப்படும். எனவே தனிநபர் இல்ல கழிப்றை இல்லாதோர் முழுமையாக இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும், ஊராட்சிகளுக்கும் சிறந்த களப்பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்

Tuesday, April 14, 2015

On Tuesday, April 14, 2015 by Unknown in ,    
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 நூல்கள் வெளியீட்டு விழாவில், அவர் ஆற்றிய சிறப்புரை:
திருவள்ளுவர், பாரதியார் போன்ற பல காலத்தை வென்ற பெருமைமிகு கவிஞர்களை இந்த உலகுக்கு தமிழ் மொழிதான் அளித்துள்ளது. பத்திரிகைகளில் வரும் தலையங்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவை தமிழின் பல தளங்களை எடுத்துரைக்கும் சாதனங்களாகவே கருதவேண்டும்.
இதில், தலையங்கம் எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. அதற்கென்று ஒரு தனித்த சிந்தனைப் பார்வை வேண்டும். தலையங்கத்தில் விவாதப்பூர்வமான பல விஷயங்களை குறிப்பிட்டு, இறுதியில் தமக்கான ஒரு நிலைப்பாட்டை குறிப்பிடவேண்டும். நமது நிலைப்பாட்டை வாசகர்கள் ஒப்புக்கொள்ளுமாறு எழுதுவதே, தலையங்கத்தின் தனிச்சிறப்பு.
பத்திரிகை தலையங்கம் மிக எச்சரிக்கையாகவும், பக்குவத்துடனும் எழுதப்பட வேண்டும். பத்திரகையின் முகத்தைக் காட்டக்கூடிய கண்ணாடியாக இருப்பது தலையங்கம்தான். எனவே, எதிர்காலத்திலாவது நாளிதழ்களில் இலக்கியத்தை மையப்படுத்தி தலையங்கங்கள் எழுதப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், சுவாமி சதாசிவானந்தா, உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலர் ந. மணிமொழியனார், புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் பி. வரதராஜன், பேராசிரியர் மு. அருணகிரி, எழுத்தாளர் புதுகை மு. தருமராஜன், சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tuesday, April 07, 2015

On Tuesday, April 07, 2015 by Unknown in ,    
Displaying 7.4.2015 3.jpg
மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7-ம் தேதி) இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிறந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால், அதை மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் மூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை இம்முகாம் நடைபெறும் இடங்கள்: அருள்தாஸ்புரம், செல்லூர், நரிமேடு, பீபிகுளம், கே.புதூர், சாத்தமங்கலம், முனிச்சாலை, பாலரெங்காபுரம், அனுப்பானடி, வில்லாபுரம்., சுந்தரராஜபுரம், பைக்காரா, பெத்தானியபுரம், திடீர்நகர், அன்சாரி நகர், புட்டுத்தோப்பு, அண்ணாத்தோப்பு.
முகாம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அரசு, தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு ஊசி போடப்படும்.
குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகள் விவரம்: குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி., போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஒன்றரை மாதத்தில் பெண்டாவேலண்ட்02, போலியோ-2, மூன்றரை மாதத்தில் பெண்டாவேலண்ட் 3, போலியோ 3, ஒன்பது மாதம் முடிவில் தட்டம்மை, ஜப்பானிஸ் என்செபலைடிஸ் 1, ஒன்றரை வயதில் ஜப்பானிஸ் என்டிசபலைடிஸ் ஊக்குவிப்பு ஊசி, ஒன்றரை வயதில் டி.பி.டி. ஊக்குவிப்பு ஊசி, தட்டம்மை ஊக்குவிப்பு ஊசி அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
கர்ப்பிணிகள் ஊசி: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரணஜன்னி முதல் தவணை, ஒரு மாதம் கழித்து மீண்டும் ரணஜன்னி இரண்டாவது தவணை, இத்தகைய ஊசி போடாத கர்ப்பிணிகளுக்கு முகாமில் ஊசிகள் போடப்படும் என்றும் மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On Tuesday, April 07, 2015 by Unknown in ,    
நெல் மூட்டைகளில் கலப்படம்: மதுரை குடோன்களில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் சவடுமண் கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாரி டிரைவர்கள் ராஜா, சிங்கராஜா, நெல் வியாபாரியின் நண்பர் அருண்ஜான் ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
நெல் வியாபாரிகள் சத்தியமூர்த்தி, ஜேம்ஸ், செங்கல் சூளை அதிபர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் கப்பலூர், ஆஸ்டின்பட்டி பகுதிகளில் உள்ள திறந்த வெளி குடோன்களில் நேற்று 4–வது நாளாக தரக்கட்டுப்பாட்டு மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி சந்திரமோகனும் தனியாக ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ராமநாதபுரத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளில் கலப்படம் இருந்ததால் அந்த மாவட்டத்தில் இருந்து வந்த நெல் மூட்டைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. சந்தேகிக்கப்படும் மூட்டைகள் தனியாக அடையாளமிடப்பட்டுள்ளது. ஆய்வில் சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகள், தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய சங்க செயலாளர்கள் செல்லக்கண்ணு, தேவராஜ், வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த நெல் மூட்டைகளில் பெரும்பாலானவை பதர் மூட்டைகளாக இருந்ததை கண்டறிந்தனர். சில நெல் மூட்டைகளில் இருந்து கல் மற்றும் மணல்களை சேகரித்த எம்.எல்.ஏ.க்கள் அவற்றை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் காட்டி புகார் செய்தனர்.
இது குறித்து பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–
2 கிட்டங்கிகளில் ஆய்வு செய்ததில் பல நெல் மூட்டைகளில் கல், மணல் இருந்தது. சில மூட்டைகளில் நெல்லே இல்லாமல் பதர் மட்டுமே இருந்தது. இந்த கலப்பட முறைகேடு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
நெல் கலப்பட பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் பேசினோம். முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கலப்படம் நடந்துள்ளது.
பால் கொள்முதலில் கலப்படம் இருந்ததால் பால் வளத்துறை அமைச்சர் பதவி நீக்கப்பட்டார். அதேபோல நெல் கலப்பட விசாரணை முடியும் வரை உணவுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த முறைகேடுக்கு எதிராக வருகிற 11–ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். லாரி டிரைவர் உள்பட சாதாரண நபர்களே இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

Sunday, April 05, 2015

On Sunday, April 05, 2015 by Unknown in ,    
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிறுநீரகம், நரம்பியல், இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை உபகரணங்கள் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.97 கோடி மதிப்பில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, மகப்பேறு உள்பட பல்வேறு துறை சார்ந்த பிரிவுகளில் தலைமை மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். 500 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு சராசரியாக 300 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவ மனைக்கு இணையாக இந்த மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 16 படுக்கைகள் உள்ளன.
ஆனால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வருவோருக்கு எம்ஆர்ஜ ஸ்கேன் வசதி இல்லாததால் மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கே பரிந்துரை செய்கின்றனர். இந்த ஸ்கேன் வசதியை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விரைந்து நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பணிபுரியும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மதுரையிலிருந்தே வந்து செல்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு போதிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சிறுநீரகம், நரம்பியல், இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை. பல், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் இருந்தும், அதற்கான உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்கவில்லை. மேற்கண்ட பிரச்னைகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்வதுடன், மக்கள் பிரதிநிதிகளும் இம்மருத்துவமனையின் தரத்தை உயர்த்தவும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Sunday, April 05, 2015 by Unknown in ,    
Displaying news 1 cnvocation.JPG
மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு  புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை தொழில்நுட்ப  அதிகாரி டாக்டர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இதில்  அண்ணா பல்கலை கழகத்தின் மல்டி மீடியா ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் கௌரி,  , செயலாளர்  பாத்திமா மேரி,  கல்லூரி முதல்வர்  நெல்சன் ராஜா மற்றும் மாணவர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Thursday, April 02, 2015

On Thursday, April 02, 2015 by Unknown in ,    
மதுரை ரெயில் நிலையத்தில் அனைத்து பிளாட்பாரங்களிலும் எஸ்கலேட்டர் அமைக்க பயணிகள் கோரிக்கை
தென் தமிழகத்தில் பெரிய ரெயில் நிலையமாக இருப்பது மதுரை ரெயில் நிலையம். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் மதுரை சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும், யாத்திரிகர்களும் தினசரி ரெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் பல்வேறு ஊர்களுக்கு மதுரையில் இருந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை பயணிகளின் நீண்டநாள் கனவான எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் உள்ள 6 பிளாட் பாரங்களில் 2, 3 மற்றும் 6–வது பிளாட் பாரங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் முதலாவது பிளாட்பாரம் மற்றும் 4–வது 5–வது பிளாட் பாரங்களில் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. 4–வது மற்றும் 5–வது பிளாட்பாரத்திலிருந்தான் ராமேசுவரத்திற்கு செல்லும் ரெயில்களும், ராமேசுவரத்திலிருந்து வரும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரத்திற்கு செல்வோரில் முதியோர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிக அதிக அளவில் உள்ளனர். மேலும் செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் பெரும்பான்மையான நேரங்களில் பிளாட்பாரம் 4 மற்றும் 5 லிருந்து தான் இயக்கப்படுகிறது.
எனவே 4 மற்றும் 5–வது பிளாட்பாரத்தில் உடனடியாக எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து இறங்கி 2 மற்றும் 3–வது பிளாட்பாரம், 4 மற்றும் 5–வது பிளாட் பாரம் மற்றும் 6–வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் ரெயிலில் மாறி பயணம் செய்ய செல்வோர் முதலாவது பிளாட்பாரத்தில் எஸ்கலேட்டர் வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
ஆகவே முதலாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ஏறி செல்வதற்கு மட்டுமாவது உடனடியாக எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Thursday, April 02, 2015 by Unknown in ,    
Image result for கல்யாணி மதிவாணன்
நெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் உதவித் தொகையுடன் பிஎச்டி ஆராய்ச்சியை (Non-NET Phd Fellowship) மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10 கோடியை பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கியுள்ளது என்று துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.
 பல்கலை.யின் மு.வ. அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியது:
 ஆற்றல்சார் பல்கலை. அந்தஸ்து பெற்றுள்ள மதுரை காமராஜர் பல்கலை.க்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், யுஜிசி ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களும் உதவித் தொகையுடன் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலை.யில் கூடுதலாக 100 மாணவர்கள் பிஎச்டி ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
 மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மதுரை காமராஜர் பல்கலை. விண்ணப்பித்துள்ளது. அதில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 உயர்கல்வி நிறுவனங்களில் மதுரை காமராஜர் பல்கலை.யும் இடம் பெற்றுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை. உறுப்புக் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, தமிழக அரசு ரூ.2.41 கோடி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிக்கான முதல் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பல்கலை.யின் உறுப்புக் கல்லூரிக்கான நிரந்தரக் கட்டடம் கட்ட அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையிடம் இருந்து இதற்கான நிலம் இலவசமாகப் பெறப்படும் என்றார்.
 வரும் நிதியாண்டுக்கான (2015-16) பட்ஜெட் அறிக்கை செனட் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்தில் காணொலி காட்சி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், ரூ.15 லட்சத்தில் மொழி ஆய்வகங்கள்,  ரூ.20 லட்சத்தில் தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 பல்கலைக்கழக பதிவாளர் என்.ராஜசேகர், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
On Thursday, April 02, 2015 by Unknown in ,    
விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் குற்றங்கள் குறையும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.
 மதுரை மாநகர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட நேரமின்றி உள்ளனர். குழந்தைகள் படிப்பு, தொலைக்காட்சி பார்த்தல் என இருப்பதால் விளையாட நேரம் கிடைப்பதில்லை. பெரியவர்கள் வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடிவதில்லை.
 வியாபாரம், விளையாட்டு, சமூகசேவை என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் வாழ்வு சிறப்பாக இருக்கும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் குற்றங்களும் குறையும். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக்கு விளையாட்டு  சிறந்த பாலமாக இருக்கிறது. தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது என்றார்.
 மதுரை மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா வாழ்த்திப் பேசுகையில், நாட்டிலேயே விளையாட்டுக்கு அதிக நிதி அளித்திருப்பது தமிழக அரசுதான். மாநிலத்தில் 24 விளையாட்டு விடுதிகள் மூலம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது. விளையாட்டை மேம்படுத்தினால் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.
 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்தில் (ஆண்கள் பிரிவு) போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரியும் முதலிடம் வகித்தன. கபடியில் ஆண்கள் பிரிவில் கலாசிமிண்ட், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி ஆகியவை முதலிடம் பெற்றன.
 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் காசிமாயனும், 400 மீட்டரில் அதே கல்லூரி மாணவர் இளமுருகுவும், பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி கல்லூரி கார்த்திகாவும் முதலிடம் வகித்தனர்.
 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சேத்தனா பள்ளி மாணவர் சசிகுமாரும், பெண்கள் பிரிவில் அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.பிரியாவும் முதலிடம் வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் மாநகர்  காவல் துறை அணியை ஊர்க்காவல்படை அணியினர் வென்றனர்.
  பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநகர் துணை ஆணையர் ராஜராஜன் (தலைமையிடம்) வரவேற்றார். காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பரிசுகளை வழங்கினார். துணை ஆணையர் (குற்றப்பிரிவு) உமையாள் வாழ்த்திப் பேசினார். ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
On Thursday, April 02, 2015 by Unknown in ,    
மேலூர் பகுதியில் லாரிகளில் கிரானைட் கற்கள் கடத்தப்படுகிறதா?: சகாயம் குழுவினர் அதிரடி சோதனைமதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்கும் முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா 2 வழக்குகளும், தற்போதைய கலெக்டர் சுப்பிரமணியன் 144 வழக்குகளும், மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பி.ஆர்.பி. உள்பட பல நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் பல இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்குவதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் நில அளவையர்கள் மூலம் அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட கிரானைட் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனுடன், கனிம வள உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், துணை தாசில்தார் இளமுருகன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மேலூர் பகுதிகளில் பல இடங்களில் மேலும் கிரானைட் கற்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் அரசுடமையாக்க கோரி மேலும் 20 வழக்குகள் வரை விரைவில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இந்த நிலையில் மேலூர் மற்றும் திருவாதவூர் பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் அனுமதி பெறாமல் லாரிகளில் கடத்தப்படுவதாக சகாயம் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சகாயம் குழுவை சேர்ந்த ஆல்பர்ட், வேளாண் உதவி இயக்குநர் ஜெயசிங் ஞானதுரை மற்றும் அதிகாரிகள் மேலூர் பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அனைத்து லாரிகளையும் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது 3 லாரிகளில் கிரானைட் கற்கள் ஏற்றப்பட்டு வந்தது. அதனை நிறுத்தி அதிகாரிகள் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கிரானைட் கற்களை லாரிகளில் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களை காண்பித்தனர். அதனை தொடர்ந்து அந்த 3 லாரிகளும் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்

Tuesday, March 31, 2015

On Tuesday, March 31, 2015 by Unknown in ,    

தமிழகத்தில் தான் பொது விநியோக துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் சில நியாய விலை கடை பணியாளர்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர் .எடுத்துக்காட்டாக விருதுநகர் மாவட்டம் ரயில்வே பீடர் ரோடு -1 பகுதியில் உள்ள கடை A O001 ல் உள்ள பணியாளர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்கள் பொருட்களை வாங்கிவிட்டு தங்களது ரேசன் கார்டை மறந்து விட்டு சென்று விட்டால் அந்த ரேசன் கார்டை எடுத்து வைத்துக் கொள்ளும் இவர் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களை அ
ரேசன் கார்டை மறந்தால் 1000 ரூபாய் அபராதம் :கூட்டுறவு துறை அமைச்சர் கவனிப்பாரா ??லைய விடுவதோடு அவர்களிடம் 1000 ரூபாய் அபராதமாக தனக்கு தந்தால் மட்டுமே கார்டை திருப்பி தருவேன் என கூறுகிறார் .1000 ரூபாய் தர மறுக்கிற பட்சத்தில் ரேசன் பொருட்களை தருவதற்கு மறுக்கிறார் .இதனால் இப்பகுதி நுகர்வோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .இது பற்றிய புகார்களை யாரிடம் அளித்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தொடர்ந்து இதே போன்ற நூதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது நியாய விலைக்கடைகள் அநியாய விலைக்கடைகளாக மாறலாமா ?இதில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
On Tuesday, March 31, 2015 by Unknown in ,    

புகார்களில் முகாந்திரம் இருந்தும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதே நடவடிக்கை குறித்துதான் மதுரைக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த டி ஜி பி அசோக் குமார் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்துள்ளார் .மேலும் நீதிமன்ற உத்தரவில் காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டிய தேவையில்லை. புகார் உண்மை இல்லை என்று தெரியவந்தால் புகார் முடிக்கப்பட்டதற்கான காரணத்தை புகார்தாரருக்கு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
ஊழல், வணிக குற்றங்கள், குடும்பத்தகராறு, மருத்துவம் மீதான புகார்கள் மீது 7 நாட்களுக்குள் முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும். அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பேட்டில் குறிப்பிட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தமிழக காவல்துறை இயக்குநர் தெரிவிக்க வேண்டும். அதனை போலீசார் சரியாக நடைமுறைப்படுத்துகிறார்களா என்று குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் போலீசார் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்
ஆனால் இது எந்த அளவில் நடைமுறைக்கு சாத்தியம் என்பது மில்லியன் டாலர் கேள்வி
ஏனென்றால் இன்று சாமான்ய மக்களுக்கு உடனடி நியாயம் கிடைக்கிற இடமாக தமிழகத்தில் காவல் நிலையங்கள் இல்லை என்பதே வெட்ட வெளிச்சமான உண்மை
ஒருவர் சாதரணமாக திருட்டு புகார் கொடுக்க சென்றாலே வெள்ளை பேப்பர் ,டீ ,செலவுக்கு காசு என அடுக்கி அவர்களிடம் இருந்து முழுதாக உரித்து விடுவதால் புகார் கொடுக்க வருகிறவர்களின் நிலை பரிதாபத்திற்குரிய நிலை ஆகி விடுகிறது .
வண்டி தொலைந்து போன புகார்களில் ஆளாளுக்கு புகார் கொடுத்தவர் பந்தாடப்பட்டு கடைசியில் வண்டியை மறக்க வேண்டிய சூழலே ஏற்படுகிறது" காவல் துறை உங்கள் நண்பன் உண்மைதான்
நண்பனால் மட்டும்தான் உரிமையாக காசு கேட்க முடியும் … "என்ற வரிகள் சொல்வது போல் சில காவல்துறை அதிகாரிகளை தவிர பெரும்பாலும் காவல்நிலையங்களில் பணியாற்றுவோர்கள் எப்படி காசு பார்க்கலாம் என்ற நிலையிலே பணி செய்கின்றனர் .
பெண்கள் தனியாக புகார் அளிக்க வந்தால் அவர்களுக்கு தரப்படும் வேறு மாதிரியான கவனிப்புகள் பெண்களை காவல்துறை அதிகாரிகள் என்றாலே மிரண்டு ஓட செய்து விடுகிறது
ஆர்ப்பாட்டம் ,பொதுக் கூட்டங்களில் ஆங்காங்கு கரை வேட்டிகளிடம் காசு பார்த்திடும் இவர்கள் புகார் கொடுக்க வரும் அப்பாவி பொது மக்களையும் கடைசி மூச்சு வரை காசு வாங்காமல் விடுவதில்லை
மக்கள் சேவகர்கள் என்பதை மறந்து போய் அதிகார தொனியிலேயே பொதுமக்களை அணுகுகின்றனர் .சில நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் திருந்தாத புல்லுருவிகளால் கெட்ட பெயரே மிஞ்சுகிறது
மக்கள் கொடுக்கும் புகாரினை காவல் துறையினர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. காவல் துறையினர்தங்கள் முன் வரும் புகார்களில் முகாந்திரங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு CSR அல்லது திமிஸி பதிவு செய்வது அவசியம். அவ்வாறாக பதிவு செய்ய மறுப்பது சட்டத்தின் முன் ஏற்புடைய செயல் அல்ல. பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் தலைமை காவல் அலுவலருக்கு பதிவு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ புகாரை அனுப்பி பதிவு செய்யலாம். அப்படியும் பதிவு செய்யப்படவில்லை எனில் நீதிமன்ற ஆணை பெற்று பதிவு செய்ய சட்டத்தில் வழிஉண்டு. காவல் துறையினர் புகாரை பதிவு செய்வதுடன் முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை புகார் கொடுப்பவருக்கு இலவசமாக அளிப்பது சட்டப்படி அவசியம்.
சட்டங்களும், காவலை துறை விசாரிப்புகளும் எளிமையானால் மக்கள் தைரியமாக புகார் கொடுப்பார்கள் இவர்கள் மாற வாய்ப்பு இருப்பதாக எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்பதே கசப்பான உண்மை !