Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
கரூரில் தி.மு.க. கூட்டத்தில் மோதல்–சட்டை கிழிப்பு: தொண்டர்கள் தள்ளு முள்ளுகரூரில் தி.மு.க. கூட்டத்தில் மோதல்–சட்டை கிழிப்பு: தொண்டர்கள் தள்ளு முள்ளு ....                                     கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது எழுந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இன்று கரூர் அண்ணாநகரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரச்சனைக்குரிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சனை குறித்து சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு, மற்றும் நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜிற்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருவருக் கொருவர் தாக்கினார்கள். இதில் கனராஜின் சட்டை கிழிந்தது.
இதனை கண்டதும் நன்னியூர் ராஜேந்திரன் கனகராஜை அறிவாலயத்திற்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது கனக ராஜின் ஆதரவாளர்கள் பாலகுருவை தாக்குவதற்காக தடியுடன் கூடினார்கள். அப்போது அங்கு வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கூட்டத்தை கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டார். அப்போது கனகராஜின் ஆதரவாளர்கள் ஆண்டாள் பாலகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க ஆக்ரோஷமாக பாய்ந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நிலைமை மோசமானதால் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்த கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அறிவாலயம் பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

தரைப்பாலம் சீரமைக்கும் பணி                              கரூர்  கடந்த 1967ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் பழுதடைந்ததால் உயர்மட்டப்பாலம் இதே இடத்தில் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையத்தையும், ஐந்துரோடு பகுதியையும் இணைக்கும் வகையில் புதிய உயர்மட்டப்பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ம்தேதி புதிய பாலப்பணி துவக்கி வைக்கப்பட்டது. பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்டப்படுவதால்  பழைய பாலம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இந்த இடத்தில் புதிய உயர்மட்ட பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் வேலை தற்போது நடைபெற்று வந்தது.

 புதிய பாலப்பணிகள் நடைபெறுவதால் பசுபதிபாளையம்- கரூர் இடையே பொதுமக்கள்  போக்குவரத்துக்கு தற்காலிக குழாய் பாலம் இதன் அருகே அமைக்கப்பட்டுள்ளது. புதிய ராட்சத சிமெண்டு குழாய்களை அமைத்து அதன்மேல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் தற்போது இருசக்கர வாகனங்கள். ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் சென்று வந்தன. கடந்த ஓராண்டாக இப்பாலத்தில் டூ வீலர்கள், ஆட்டோ, வேன்கள் சென்று வந்தன. மண்பாலம் தொடர்மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் அமராவதி அணை நிரம்பியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கடந்த 22ம்தேதி பசுபதிபாளையம் தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

 தற்போது அமராவதி ஆற்றில் வெள்ளநீர் வடிந்து விட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தற்காலிக தரைப்பாலத்தை மீண்டும் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இருபுறமும் உள்ள அணுகுசாலையை செப்பனிடும் பணி அடுத்து நடைபெற உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.    

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம்                          கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு நடவு முன்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் அணை நிரம்பி வந்த காலங்களில் முப்போகம் கரூர் மாவட்டத்தில் சாகுபடியானது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்புவதும், கரூர் மாவட்டத்திற்கு ஆற்றில் தண்ணீர் வருவதும் எப்போதாவது நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர்உரிமையும் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு கைகொடுக்கவில்லை. இதனால் வேளாண் பணிகளை மேற்கொள்ளவில்லை. சோளம், அவுரி செடி போன்றவைகளை மட்டும் பயிரிடப்பட்டது. 
ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கடந்த மாதம் அமராவதி அணை நிரம்பியது. தற்போதும் நீர்மட்டம் 85அடிக்கு மேல் உள்ளது.
 இதனால் கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபோக சாகுபடியாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதேபோன்று கரும்பு விவசாயிகளும் கரும்பு பயிர் நடவு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு           

கரூர் அருகே உள்ள தாந்தாணிமலை கணபதிபாளையம் வடக்கு விக்னேசுவரா நகரில் வசிப்பவர் ராஜா (46). ஓசூர் அருகே இவரது மாமியார் வீடு உள் ளது. மனைவி அங்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக நேற்றுமுன்தினம் ராஜா ஓசூருக்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கேடின் பூட்டை திறந்து உள்ளே சென்றபோது மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்து. திருடுபோன நகை களை வங்கியில் அடமானம் வைத்திருந்து நேற்றுமுன்தினம் தான் திருப்பி வந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

புதிய தமிழகம் கரூரில் ஆர்ப்பாட்டம்                                   கரூர்புதிய தமிழகம் கட்சியினர் கரூரில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 மள்ளர், பள்ளர் உள்ளிட்ட உட்பிரிவுகளை ஒன்றாக இணைநத்து தேவேந்திர குலவேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரரும், இமானுவேல்சேகரன் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்தனம், முருகேசன், சசி, அருண், தினேஷ், ஜெய், முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். சுப்பிரமணியன், சுகராஜா, ஸ்டீபன்ராஜ், ஆறுமுகம், தனம், தமிழரசி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்ணுசாமி, மனோகரன் நன்றி கூறினர்.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

மாவட்ட தடகள போட்டி சேரன் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்              கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே யான தடகள போட்டி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றது. இதில் வெண்ணைமலை சேரன் மெடரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் விக்னேஷ் 400மீ, 600மீ ஓட் டம் முதல் இடம், உயரம் தா ண்டுதலில் 2ம்இடம் பெற்றார். 17வயது பிரிவில் அஜீத்குமார் 100மீ, 200மீ ஓட்டம் முதலிடம், கரண் 400மீ ஓட் டம் 2ம்இடம், நவநீத் 800மீ, 1500மீ ஓட்டம் முதல்இடம் பெற்றனர். கிஷோர்குமார் உயரம் தாண்டுதலில் முதல்இடம், அஜய்கண்ணன் வட்டு எறிதலில் 2ம்இடம், 4-100மீ தொட்ஓட்டத்தில் அஜீத்குமார், பிரேம்குமார், சரவணா, கரண் ஆகியோர் முதல்இடம் பெற்றனர்.

 19வயதுக்குட்பட்டோர் பிரிவில் தினேஷ்குமார் உயரம் தாண்டுதல் முதல்இடம், 400மீ ஓட்டத்தில்2ம்இடம் பெற்றார், அதீப்ராஜ் வட்டுஎறிதலில் 2ம்இடம், கோபிநாத் வட்டுஎறிதல் 3ம்இடம், ஹரிவிஜெய் ஈட்டிஎறிதல் முதல்இடம், 4-400மீ தொடர்ஓட்டபோட்டியில் உதயநிதி, கார்த்திக்ராஜா, கவின், நிக்கீத் முதல்இடம் பெற்றனர். 400 மீ தொடர் ஓட்டத்தில் தினேஷ்குமார், தினகரன், கரன், விக்னேஷ் 3இடம் பெற்றனர். 74 புள்ளிகளுடன் மாவட்ட அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரிவில் வென்றனர். தொடர்ந்து 7வதுமுறையாக ஒட்டு மொத்தசாம்பியன் பட்டத்தை வென்றனர்.

 குழு போட்டியில் டென்னிஸ், இறகு பந்துபோட்டிகளில் வெற்றிபெற்று மண்டல அளவி லான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றிபெற்ற மா ணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை சேரன்பள்ளிகளின் தலைவர் கருப்பண்ணன், தாளாளர் பாண்டியன், நிர்வாகி பெரியசாமி, ஆலோசகர் செல்வதுரை, முதல்வர் பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.       

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

பொசியம்பட்டியில் நாளை சாம்பியன்ஷிப் கபடி போட்டி                           கடவூர்அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை பொசியம்பட்டியில் நடக்கிறது. 

கரூர் மாவட்ட அளவில் அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டி தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் நாளை (9ம்தேதி) நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் 80 கிலோ எடைக்குள் இருந்தால் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தர்மபுரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்படும் என அமெ ச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அரசு மருத்துவமனைகளில் மெட்ராஸ் ஐக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்          கரூர், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐக்கு தேவை யான சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.

 கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 மெட்ராஜ் ஐ எனப்படும், விழி வெளி இமை தொற்று நோய் அடினோ என்ற வை ரஸ் கிருமி மூலம் உண்டாகிறது. இந்நோய் பாதித்தவர் களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய்பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். கண்வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர்வடியும், கண்அழுத்தம் இருக்கும். காலையில் கண்விழிக்கும்போது கண் களை திறக்க கடினமாக இரு க்கும். கண்கள் ஒட்டி காண ப்படுவது போன்றவை கண் நோ யின் அறிகுறிகளாகும். 
 கண்ணில் இருந்து வடியும் நீரினால் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதி ப்புள்ள அந்த நீர் பிறர் கை யில் படும்போது அவருக்கும் கண்நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. கண்நோய் பாதித்தவர்களின் படுக்கை, துண்டு, கைக்கு ட் டை போன்றவற்றை மற்றவர் கள் பயன்படுத்தக்கூடாது. அதன்மூலம் அவை பரவும்.

 எனவே மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர் கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்நோய் வந்தால் குறை ந்தது ஒருவாரம் முதல் 10நாட்கள் வரை இருக்கும். அரு கில் உள்ள கண் மருத்து வரை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி தானே போட்டுக்கொள்ளக்கூடாது. இந்நோய்க்கு தேவையான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.         

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டத்தில் இன்று ரேசன் Image result for karur collector    குறைதீர் கூட்டம்                                                                            கரூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தில் ரேஷன்கடை குறைபாடு, குடும்பஅட்டையில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தம் புதியஅட்டைகோருதல், போன்ற குறைகளை களைவதற்கு பொதுவிநியோக குறைதீர்நாள் கூட்டம் இன்று (8ம்தேதி) கரூர் தாலுகா கே.பிச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது. அரவக்குறிச்சி தாலுகாவில் வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி அலுவலகத்திலும், குளித்தலை தாலுகாவில் ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பாலராஜபுரம் வீரராக்கியம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கடவூர் தாலுகாவில் கீழப்பகுதி ஊராட்சி அலவலகத்திலும், மண்மங்கலம் தாலுகாவில் பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடக்கிறது. சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தீர்வு செய்துகொள்ளலாம் என கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.         

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம்                                                                                கரூர்,அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு நடவு முன்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் அணை நிரம்பி வந்த காலங்களில் முப்போகம் கரூர் மாவட்டத்தில் சாகுபடியானது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்புவதும், கரூர் மாவட்டத்திற்கு ஆற்றில் தண்ணீர் வருவதும் எப்போதாவது நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர்உரிமையும் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு கைகொடுக்கவில்லை. இதனால் வேளாண் பணிகளை மேற்கொள்ளவில்லை. சோளம், அவுரி செடி போன்றவைகளை மட்டும் பயிரிடப்பட்டது. 
ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கடந்த மாதம் அமராவதி அணை நிரம்பியது. தற்போதும் நீர்மட்டம் 85அடிக்கு மேல் உள்ளது.
 இதனால் கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபோக சாகுபடியாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதேபோன்று கரும்பு விவசாயிகளும் கரும்பு பயிர் நடவு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை                                                                               கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரக்கிடங்கு அமைக்க போதுமான இடம் இல்லாததால் நங்கவரம் பண்ணையின் தலைவர் பாலா, செயலாளர் ராஜகோபால் ஆகியோரிடம் இடம் ஒதுக்கித் தர கோரப்பட்டது. இதன்பேரில் நங்கவரம் தெற்கு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பேரூராட்சிக்கு தானமாக பதிவு செய்து அதுதொடர்பான பத்திரம் மற்றும் ஆவணங்களை கலெக்டர் ஜெயந்தியிடம் நேற்று ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் நங்கவரம் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் முத்து, செயல் அலுவலர் உமாராணி, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் கலந்து கொண்டனர்    

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

பசுபதிபாளைய பாலப்பணி தாமதம் பொதுமக்கள் கடும் அவதி பாமக குற்றச்சாட்டு      பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.

கரூர் மாவட்ட பாமக நிர்வாககுழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர்.  நிர்வாகிகள் சண்முகம், யுவராஜ், ராமச்சந்திரன், கார்த்திக், புகழேந்தி, பாஸ்கரன், மூர்த்தி, சாதிக்அலி, முருகன், பழனிசாமி, தாந்தோணிஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
 வரலாறு காணாத அளவுக்கு தமிழக அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், பால்விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், மின்சார கட்டண உயர்வை கண்டிப்பது, இலங்கையில் பொய்வழக்கு போட்டு5 அப்பாவி தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கொடும்பாவ செயல், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக  அவர்களை மீட்டு வரவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கரூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வாங்கல் வாகன போக்குவரத்து பாலத்தை உடனடியாக கட்டிமுடிக்க வேண்டும்.
 பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்குகிறது. இதனை வன்மையாக கண்டிப்பது, கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர்தேங்கி நிற்கிறது.இதனால்  நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக  மருத்துவ முகாம் நடத்தவேண்டும். வரும் 10ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்வது, நவம்பர் 14ம் தேதி கரூர் மாவட்டத்தில் பால்விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, மதுபானக் கடைகளை அகற்றாதது போன்றவற்றை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி                              அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தியது. இதில் தடகளபோட்டிகளில் கரூர் என்எஸ்என் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று 2ம் இடம் பெற்றனர். இவர்கள் தங்கம் 6, வெள்ளி6, வெண்கலம் 4 என 16 பதக்கம் பெற்றனர். மேலும் திண்டுக்கல்லில் நடைபெற்ற கபடி போட் டியில் மாணவர் அணியினர் 3ம் இடம் பெற்றனர். வெ ற்றி மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.                                              

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது                                       க.பரமத்தி அருகேயுள்ள விசுவநாதபுரி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 83 மனுக்கள் பெறப்பட்டது. 

க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்த முகாம் தொடக்க விழாவில் க.பரமத்தி ஆர்ஐ சௌந்தரவள்ளி வரவேற்றார். அரவக்குறிச்சி தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார். 
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ராமாயி பழனிச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகி கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமை ஊராட்சி தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். 
முகாமில் வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா,  வீட்டு பட்டா மனு, முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, விதவை, கணவரால் கைவிடப்பட்ட மக்கள் உள்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் மனுக்களை பெற்று கொண்ட அரவக்குறிச்சி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் இந்த மாத இறுதியில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார். 

முகாமில் விஏஓவினர் கதிர்வேல், வேலாயுதம் கோபாலகிருஷ்ணன், சசிகலா, வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விசுவநாதபுரி விஏஓ (பொ) வேலாயுதம் நன்றி கூறினார்.                                     

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூரில் 16ம் தேதி தேசிய நூலக வாரவிழா சதுரங்க போட்டி                                                                      கரூர் :  47வது தேசிய நூலக வாரவிழாவையொ ட்டி கரூர் மாவட்ட கரூர் மாவட்ட மைய நூலக வாச கர் வட்டமும், கரூர் மாவ ட்ட சதுரங்க கழகமும் இணைந்து கரூர் மாவட்ட அள விலான சதுரங்கபோட்டி யை வரும் 16ம் தேதி (ஞாயி று) காலை 9மணிக்கு கரூர் கோவைசாலை விஎன்சி மகாலில் நடத்துகிறது. 

இந்த சதுரங்க போட்டி மாணவ, மாணவிகள் பிரிவு,  வாசகர்கள் பிரிவு(ஓபன்) என 2 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 9வயது, 12வயது, 15வயதுக்குட்பட்டோருக் கும், வாசகர்களுக்கு வயது வரம்பில்லாமலும் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட சது ரங்க வீரர், வீராங்கனைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். 4 முதல் 10வரை யிலான இடங்களை பெறுவோருக்கு அன்றே பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு நூலக வார விழாவில் பரிசளிக்கப்படும். எனவே மாணவ மாணவிகள், வாசகர்கள் போட்டியில் பங்கேற்குமாறு கரூர் மாவட்ட மைய நூலக அலுவலர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கல்லூரி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கினர்                                                                                  கரூர் அருகேயுள்ள மாயனூர் காவிரி கதவணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் செல்வநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (20). இவர் கரூர் தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கோகுல் பிரசாத் (21) இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பரான கார்த்திக் (21)  ஆகியோர் நேற்று மதியம் 3 மணியளவில் பைக்கில் மாயனூர் கதவணைக்கு குளிக்க சென்றனர். ஆபத் தான பகுதி என்பதால் அங் கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது மறுகரையில் உள்ள 3 ஷட்டர்களில் மட்டும் தண்ணீர் வெ ளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிக்கு 3 பேரும் சென்றனர். கரையில் பைக்கை நிறுத்தி விட்டு கார்த்திக்கும், கோகுல்பிரசாத்தும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக்கண்ட கரையில் இருந்த கார்த்திக் அவர்களை காப்பாற்ற உதவி கேட்டு சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். இரவு வரை மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

பயன்பாடின்றி கிடக்கும் பழைய எஸ்பி அலுவலக கட்டிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மாற்றப்படுமா?                                                                            பயன்பாடின்றி கிடக்கும் பழைய எஸ்பி அலுவலக கட்டடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் அமைக்கப்படு மா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம் கடந்த 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கடந்த 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் திருச்சி மாவட்டத்தின் துணை அலுவலகமாக செயல்பட்டது. கரூர் போலீஸ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த மாவட்ட அலுவலகம் அதன்பின்னர் கரூர் காமராஜ் ரோட்டில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இடவசதி போதுமானதாக இல்லை. இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் அலுவலகத்திற்கு வருபவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அலுவலகத்திலும் கணினி போன்ற உபகரணங்களை வைத்தும் அலுவலர்கள் அமர்ந்தும் பணியாற்ற இயலாத அளவுக்கு இடப்பற்றாக்குறை  உள்ளது.

 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து  வேலைவாய்ப்பிற்காக ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் பதிவை புதுப்பிப்பதற்காகவும், கூடுதல் கல்வித்தகுதியை பதிவு செய்வதற்காகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கு வேலை வாய்ப்பு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கும், உதவித் தொகை பெறுவதற்காகவும்  விண்ணப்பம் அளிக்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு புதிய சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் சரியான இடம் கிடைக்கவில்லை. தற்போது அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரூ.1.50 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் இடம் கிடைக்காததால் புதிய அலுவலகம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 இதுகுறித்து அதிகாரிகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடத்தில் அமைய வேண்டும். ஒருசில இடங்கள் பார்க்கப்பட்டது,. அந்த இடங்கள் ஊருக்கு வெளிப்புறத்தில் இருக்கிறது. வேலை தேடிவருவோர் எளிதில் வரும் வகையில் அந்த இடங்கள் அமையவில்லை. விரைவில் இடம் தேர்வு செய்யப்படும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 கரூர் அரசு கல்லூரி அருகே கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் முன்பு எஸ்பி அலுவலகம் செயல்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய கட்டடத்தில் மாவட்ட காவல் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இடம் தேடிவரும் நிலையில் இந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயன்பாடற்று கிடக்கும் இந்த இடம் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் புதிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தால் கலெ க்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு செ ல்லும் சாலை என்பதால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.      

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூரில் லாரி திருடிய 2 பேர் சிக்கினர்                           கரூர் அருகே லாரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து லாரியை மீட்டனர்.

கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் டெர்மினல் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 11ம் தேதி பெரம்பலுர் கண்ணபாடியை சேர்ந்த டிரைவர் நாகராஜன்(33) என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது மர்மநபர்கள் லாரியை திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து நாகராஜன் வாங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் மதுரை சிவமுருகன்(22), தேனி தங்கபாண்டி ஆகியோர் லாரியை திருடியது தெரிய வந்தது .இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் லாரியை மீட்டனர். மேலும் இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
மேய்ச்சல் நிலமாகும் நெடுஞ்சாலை தடுப்பு     கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோடு டிவைடரில் புற்கள் அதிகம் முளைத்துள்ளதால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் சாலைகளை பிரித்து தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்வதால், வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுப்புறச்சூழல் ஏற்படாதவாறு, அரளிப்பூ செடிகள் நடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் அதிக மழை பொழிவு இருந்ததால், ரோடு தடுப்புச்சுவரில் புற்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. இதனால், இப்பகுதி விசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இருப்பினும், மேய்ச்சலுக்கு மாடுகளை விடும் போது, கனரக வானகங்கள் மோதி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
On Thursday, November 06, 2014 by Unknown in ,    
விவசாய நிலத்தை மனையாக்க கூடாது நகராட்சி கமிஷனர் அதிரடி ......                  குளித்தலை நகராட்சி பகுதியில், விவசாய நிலங்களை வீட்டுமனையாக்கி, விற்க கூடாது,'' என, நகராட்சி தலைவர் பவுன்ராஜ் தெரிவித்தார். கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால், விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்கள் வீட்டுமனையாக்குவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், குளித்தலை பெரியபாலம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷினர் பவுன்ராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் விவசாய நில வீட்டு மனைகளை பொதுமக்கள், வாங்கவோ, நில உரிமையாளர்கள் விற்பனை செய்யவோ கூடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலஉரிமையாளர், வீட்டுமனைகள் வாங்கிய இருவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும், பத்திர பதிவு அவலகத்துக்கும் வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்