Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
செந்துறை,
6 பெண்கள், குழந்தை உள்பட 8 பேரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது எப்படி என்பது பற்றி அந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒப்பந்தக்காரர்
செந்துறை அருகே உள்ள சேந்தமங்கலம் ஏரிக்கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியின் அருகில் உள்ள ஒரு சிமெண்டு ஆலையில் ஒப்பந்தக்காரராக இருந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களின் குழந்தைகள் மகாலட்சுமி, கீர்த்தனா, இன்பதமிழன். வேல்முருகன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோருடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேல்முருகனின் பெற்றோர் பெருமாள், மல்லிகா மற்றும் அவரது மகள் மகாலட்சுமி, மகன் இன்பத்தமிழன் ஆகியோர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று படுத்துக்கொண்டனர். வேல்முருகன், அவரது மனைவி பார்வதி, 1 வயது மகள் கீர்த்தனா ஆகியோர் குடிசை வீட்டில் தூங்கினார்கள்.
3 பேர் கொலை
மறுநாள் அதிகாலை வேல்முருகன் வீட்டிற்கு டிரைவர் விஜயகாந்த் டிராக்டரை எடுக்க சென்றார். அப்போது அங்கு வேல்முருகன் கோடாரியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் காயங்களுடன் குழந்தை கீர்த்தனா மயங்கி கிடந்தது. சிறிது தூரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மார்பில் சூலத்துடன் கூடிய சாமி சிலை ஒன்றும் கிடந்தது.
இதனைக்கண்ட விஜயகாந்த் அலறியடித்து கொண்டு ஓடி உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து மயங்கிய நிலையில் கிடந்த குழந்தை கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
5 தனிப்படை
இதே போல் அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. தனியார் அறவை ஆலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு 3 மகள்கள். இதில் ஒரு மகள் சரஸ்வதி (35) கணவரை பிரிந்து தாயுடன் குடிசை வீட்டில் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 29–ந் தேதியன்று இரவு வீட்டில் லட்சுமியும், சரஸ்வதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த 5 கொலைகள் தொடர்பாக துப்பு துலக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
வாக்குமூலம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பீடாக்கடை உரிமையாளர் செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி, பொருட்களை திருடிய வாலிபரை தம்மம்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்தரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்னக்கரை மகன் சுப்பராயன் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து சுப்பராயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாவது;–
நான் லாரி கிளீனராக வேலை பார்த்தேன். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் 2 நாட்களாக வேலை தேடி அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. சாப்பிடுவதற்கு பணம் இல்லாததால், சிமெண்டு ஆலை எதிரே இருந்த கோழிக்கடையில் உள்ளே புகுந்து ஒரு கோழியையும், கத்தியையும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். அதனை சுட்டு சாப்பிடலாம் என்று சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சேந்தமங்கலத்தில் தனியாக இருந்த வீட்டை பார்த்ததும் அதில் பணம், நகை கிடைக்கும் என்று உள்ளே சென்றேன்.
கோடாரியால் வெட்டினேன்
வீட்டிற்குள் சட்டையில் இருந்த 200 ரூபாய் மற்றும் வேல்முருகனின் செல்போனை எடுத்தேன். அப்போது பார்வதி எழுந்து எனது கையை பிடித்து விட்டார். அதனால் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து பார்வதியை வெட்டினேன். சத்தம் கேட்டு எழுந்த வேல்முருகனையும் வெட்டினேன். குழந்தை அழுது கொண்டு இருந்ததால் கோடாரியால் தாக்கினேன்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பார்வதியை கற்பழித்துவிட்டு, மேலும் பணம், நகைகள் உள்ளனவா என்று தேடி பார்த்துவிட்டு, அங்கே நிறுத்தி இருந்த வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றேன்.
பணம் கொள்ளை
அப்போது செந்துறை போலீசார் இரவு ரோந்தின் போது வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து பொன்பரப்பி சென்ற போது பெட்ரோல் தீர்ந்து விட்டதால் முந்திரி காட்டிலேயே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டேன். இதேபோன்று கயர்லாபாத்தில் தனியாக இருந்த தாய், மகளை கொன்றுவிட்டு அதில் சரஸ்வதியை கற்பழித்துவிட்டு அவர்கள் வைத்து இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருச்சி கல்லக்குடியில் ஜெயமேலு (82) என்ற மூதாட்டியையும், 2012–ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் பத்திரகவுண்டம்பாளையத்தில் பணம் தரமறுத்த தனது பாட்டியையும் கொலை செய்ததையும், தம்மம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்கல் குவாரியில் கிளீனராக வேலை பார்த்தபோது அங்கு வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணையும் கொடூரமாக கற்பழித்து கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 500–ஐ கொள்ளையடித்ததையும் சுப்பராயன் ஒப்புக்கொண்டார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அரியலூர், திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் சுப்பராயனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காமக்கொடூரன் ஜெய்சங்கர் போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருவனே இத்தனை கொலைகளை தடயமில்லாமல் செய்து இருப்பது போலீசாரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
பரமத்தி வேலூர் அருகே குடும்பத்தகராறில் மகன், மகளுடன் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் முன்பு கிடந்த அவர்கள் 3 பேரின் பிணங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முனியப்பன் (வயது 35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி (28). இவர்களுக்கு நரேந்திரபிரசாத் (11) என்ற மகனும், கவுசிகா (10) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்வரி கொந்தளம் வெங்கமேடு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது முனியப்பன் தனது மகன் நரேந்திரபிரசாத் மற்றும் மகள் கவுசிகா ஆகியோருடன் நண்பரது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

பிணங்களாக கிடந்தனர்

இந்த நிலையில் மகேஷ்வரி தந்தை வீட்டில் இருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டினுள் அமைக்கப்பட்டு இருந்த தென்னை கீற்று வேலி அருகே மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்ததையும், அந்த மோட்டார் சைக்கிளுக்கு கீழ் தனது மகன் நரேந்திரபிரசாத், மகள் கவுசிகா மற்றும் கணவர் முனியப்பன் ஆகியோர் பிணமாக கிடந்ததையும் பார்த்து மகேஷ்வரி கதறி அழுதார்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெஸ்கி, பரமத்தி வேலூர் துணை சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விஷம் குடித்து தற்கொலை

பின்னர் இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி டிரைவர் முனியப்பன் தன் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
தேன்கனிக்கோட்டை அருகே போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப் பட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது இருது கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஆவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் அதே ஊரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென் றார்.

அப்போது கடைக்காரரு டன் தகராறு செய்தார். இது தொடர்பாக தேன்கனிக் கோட்டை போலீஸ் நிலையத் தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேன்கனிக் கோட்டை போலீஸ் ஏட்டு வடிவேல் மற்றும் 2 போலீசார் இருதுகோட்டைக்கு சென் றனர்.

6 பேர் மீது வழக்கு

அப்போது அங்கிருந்த செல்வம், மற்றும் மரியப்பா, முனிராஜ், நாகராஜ். சாப் ரானப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், ஜெயராமன் ஆகிய 6 பேரும் சேர்ந்து போலீசாரை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

அது குறித்து ஏட்டு வடிவேல் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ் கர் வழக்குப்பதிவு செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக செல்வம் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். அவர்களில் முனிராஜ், சுரேஷ், ஜெயராமன் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். செல்வம், மரியப்பா, நாகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி அருகே 2 இடங்களில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் பிச்சைராமன் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், மாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரோந்துப்பணி

இந்த குழுவினர் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை வட்டம் உடையாண்டஅள்ளி அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் கேட்பாரற்று 15 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் இந்த ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல் ஒப்பதவாடி கூட் ரோடு அருகில் சாலையோரம் 14 மூட்டைகளில் ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதுவிசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 இடங்களில் இருந்தும் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றி, கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதன் மொத்த எடை 1½ டன் ஆகும். மேலும் இந்த ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
மார்த்தாண்டத்தில் இருந்து முக்கூட்டுக்கல்லுக்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் நேற்று முக்கூட்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் வந்ததும், அந்த பஸ் பழுதடைந்து சாலையில் நின்றது. தொடர்ந்து, அதில் இருந்த பயணிகள் இறக்கிவிடப் பட்டனர். 

பின்னர், போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை சீரமைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி கடைசி ஞாயிறு வழிபாட்டையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

ஆவணி சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு புகழ்பெற்ற புண்ணிய தலம் நாகர்கோவில் நாகராஜா கோவில். இதில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்றால் மிகவும் பிரசித்தம். களக்காட்டை தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட பூதல வீரஉதயமார்த்தாண்ட மன்னன் சருமநோயால் அவதிப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் வழிபட்டு குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கோவிலில் கட்டுமான பணிகளை முதன்முதலில் அந்த மன்னன் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. 

இத்தகைய சிறப்பு பெற்ற ஆவணி ஞாயிறு வழிபாடு அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மாத சிறப்பு வழிபாடு கடந்த 5 வாரங்களாக நடைபெற்றது. 5–வது ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, திருவனந்தபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நீண்ட வரிசை

இவர்களில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட வந்த பக்தர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். இந்த வரிசை, கோவிலில் இருந்து அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை நீண்டது. வழக்கமான நேரத்துக்கு முன்னதாகவே கூட்டம் அலைமோதியதால், அங்கு ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பே நேற்று திறக்கப்பட்டுவிட்டது. அதைப்போல மதியமும் நடை அடைக்கப்படுவதில் காலதாமதம் செய்யப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

அன்னதானம் 

மேலும், பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சி பாரம்பரியப்படி ஆண்டுதோறும் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய அன்னதான நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) சுப்பிரமணி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் ஹெரால்டு ஈனாக், அனிதாசாந்தி, உதவி பொறியாளர்கள் வல்சன்போஸ், ஜெயகுமார், மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

பக்தர்கள் வருகையையொட்டி கோவில் வளாகம் மற்றும் கோவிலின் எதிரில் உள்ள ரதவீதியில் திருவிழா கடைகள் தொடங்கப்பட்டிருந்தன. பால் விற்பனையும் நடைபெற்றது. நாகராஜா திடல் முழுவதும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. 

On Monday, September 15, 2014 by farook press in ,    
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீர மைக்ககோரி அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண் டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வாகனங் கள் பழுதடைந்த சாலையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்ற னர்.
இதனால் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைத்து பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சாலை அமைக்க ரூ.18 கோடி டெண்டர் விடப் பட்ட நிலையில் பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த் தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மத்திய– மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன், முதுகலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யூ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என். எல். அருட்செல்வம், செய்தலி, சுனில்குமார், பத்மநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார் முடிவில் ஒருங்கி ணைப்பு குழு பொருளாளர் அஜயகுமார் நன்றி கூறி னார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கொலக்கம்பையில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள் ளனர்.

கொலக்கம்பை கிராமம்

கொலக்கம்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் 50-க்கும் மேற்பட்டகிரா மங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகிறார் கள். மேலும் கொலக்கம்பை கிராமத்தில் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், வங்கிகள், தபால் நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன.

இதனால் இப்பகுதி மக்க ளின் நலனை கருத்தில்கொண்டு குன்னூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலக்கம்பையில் இருந்து ஊட்டி, மேட்டுப் பாளையம், திருப்பூர், உள் ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பஸ் இயக்க கோரிக்கை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப் பாளையத்தில் இருந்துகொலக் கம்பை வரை இயக்கப்பட்ட அரசு பஸ் திருப்பூர் வரை செல்ல வழித்தடம் நீட்டிக்கப் பட்டது. பின்னர் அதன் பயண நேரமும் மாற்றப்பட் டது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பள்ளி மாணவ- மாணவிகள், கூலி தொழிலா ளர்கள் பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற் பட்டு உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதி காரிகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொலக்கம்பையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை–மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது குண்டடம். குண்டடத்தில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த சுமார் 50–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பஸ் ஏறி வெளியூருக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் இங்கு காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே குண்டடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குண்டடத்தை சேர்ந்த திருநந்தி சித்தா மருத்துவ அறக்கட்டளை மருத்துவர் செல்வக்குமார் நிழற்குடை அமைக்கவும், பஸ் நிறுத்தம் அருகே உள்ள 4 ரோடு சந்திப்பை அழகுபடுத்தி பூங்கா அமைக்கவும் முன்வந்துள்ளார். அதற்காக அவர் ரூ.5 லட்சம் நிதியை ருத்ராவதி பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கி உள்ளார். அதை தொடர்ந்து பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் ருத்ராவதி பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சீனிவாசன், திருநந்தி சித்தா மருத்துவ அறக்கட்டளை மருத்துவர் செல்வக்குமார், கவுன்சிலர்கள் நந்தகுமார், வேல்ராமன், அ.தி.மு.க குண்டடம் நகர செயலாளர் தமிழரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
தாராபுரம்– ஒட்டன்சத்திரம் சாலை மோட்டல் அருகே காட்டுக்குள் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கோவை வடவள்ளியை சேர்ந்த காவலாளி மனைவி செல்லம்மாள் என அடையாளம் தெரிந்தது.
பெண் பிணம்
தாராபுரம்–ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஒரு மோட்டல் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஒரு புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கோவையில் புதைக்கப்பட்டது. மேலும் அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை ஆய்வு செய்ய அவருடைய உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தனிப்படை
முதலில் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏட்டு முகமது ரபி, சர்க்கிள் ஏட்டு சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்த பெண் உடல் அருகே பையில் இருந்து கைப்பற்றப்பட்ட பஸ் டிக்கெட்டை வைத்து அவர் கோவை சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தும் அடையாளம் காணமுடியில்லை. எனவே கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண் காணாமல் போனதாக புகார் ஆகி உள்ளதா? எனவும் விசாரித்தனர். ஆனால் புகார் எதுவும் வராததால் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அடையாளம் தெரிந்தது
இதற்கிடையில் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடவள்ளியை சேர்ந்த காவலாளி அழகர் (50) என்பவர் மணப்பாறை சென்ற தனது மனைவி செல்லம்மாளை (45) காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இது பற்றிய தகவல் தாராபுரம் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் ஏற்கனவே அந்த பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட பொருட்களை அழகரிடம், காட்டினார்கள். மேலும் அந்த பெண் உடலில் இருந்த மச்சங்களையும் எடுத்து கூறினார்கள். இதையடுத்து மோட்டல் அருகே இறந்து கிடந்த பெண் தனது மனைவி செல்லம்மாள் என்று அழகர் அடையாளம் காட்டினார். இதனால் மோட்டல் அருகே இறந்து கிடந்த பெண் ஒரு மாதத்திற்கு பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
மும்பையில் வீரார் பகுதியில் 
பாய் தாகூர் என்பவர் வீட்டிலும்,
அலுவலகத்திலும் வருமான வரித்துறை
யினர் நடத்திய சோதனையில்13000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய
"ரெய்டு" என்று கூறப்படுகிறது...





On Monday, September 15, 2014 by farook press in ,    
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, கோடை வெயில் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களில், நீர்இருப்பு கணிசமாக குறைந்தது. 

வறட்சி : இதனால், சோழவரம், வீராணம் ஏரிகள் வறண்டுவிடும் நிலையை எட்டின.சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானதால், வீராணம் ஏரியில், ஆழ்துளை குழாய்கள் அமைத்து, தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரிநீர், தற்போது வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

உயர்வு : தற்போதைய நிலவரப்படி, 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட, வீராணம் ஏரியில் தற்போது, 1,075 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. ஏரிக்கு, விநாடிக்கு 995 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதேநிலை, தொடரும்பட்சத்தில், விரைவில் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. இதேபோல, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியில், தற்போது 682 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. 

புழல் ஏரியில், 1,118 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில், 582 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.சோழவரம் ஏரியில் நீர் இருப்பு இல்லை என்ற போதிலும், மற்ற நான்கு ஏரிகளையும் சேர்த்து 2.40 டி.எம்.சி., நீர்இருப்பு கைவசம் உள்ளது.இதன்மூலம், சென்னையில் அடுத்த இரண்டரை மாதத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கிஉள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருவொற்றியூர் : திருவொற்றியூர் சுனாமி அரசு மருத்துவமனையில், கடந்த நான்கு மாதங்களாக, வலி நிவாரண மருந்தான, 'ஜெல் ஆயின்மென்ட்' கிடைக்காமல், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

திருவொற்றியூரில், சுனாமி நிவாரண திட்டத்தில், அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இரண்டு மாடிகள் கொண்ட அந்த மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.அங்கு, தினசரி, 600 முதல் 700 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.கடந்த நான்கு மாதங்களாக, உடல் வலியால் அவதிப்படும் முதியோருக்கு வழங்கப்படும், வலி நிவாரண மருந்தான, 'ஜெல் ஆயின்மென்ட்' இருப்பு இல்லை.இதனால், நீண்ட தொலைவிலிருந்து வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.'ஜெல் ஆயின்மென்ட்' மருந்தை, தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது.

வியாசர்பாடியில் பழமைவாய்ந்த ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. அது, மிகவும் தாழ்வாக இருப்பதால், கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கின. இதைகருத்தில் கொண்டு, வியாசர்பாடி சுரங்கப் பாலத்திற்கு மாற்றாக, 80.68 கோடி ரூபாய் செலவில், 1,720மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை இணைந்து, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் பணிகளை துவக்கின. கடந்த 2013ம்ஆண்டு மார்ச் மாதத்தில், மேம்பாலப்பணியை முடித்து போக்குவரத்துக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டது.ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்ததால், மேம்பாலப்பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக, ஆக்கிரமிப்புகள் அகற்றி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தன.

ரயில்வே நிர்வாகம், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மேம்பால பணியை துவங்காமல் காலம் தாழ்த்தியது. மேம்பால பணியை, கடந்தாண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் பழனிச்சாமி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.அதன்பிறகும், பணிகள் வேகமெடுக்கவில்லை. சமீபத்தில் நடந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திலும், அக்., மாதத்திற்குள் மேம்பால பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டது.ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், துாண்கள் அமைக்கும் பணியே இன்னும் நிறைவடையவில்லை. இதனால், அக்., மாதத்திற்குள் மேம்பால கட்டுமான பணிகள் முடிய வாய்ப்பில்லை.

On Monday, September 15, 2014 by farook press in ,    
மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுசக்தி வளாக கடற்பகுதியை, நவீன படகு மூலம் கண்காணிக்க, கடலோர பாதுகாப்பு குழுமம் முடிவெடுத்துள்ளது.

சென்னை, கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராயச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உட்பட முக்கிய அணுசக்தி நிறுவனங்கள் இயங்கி வரும் அணுசக்தி வளாகம் அமைந்துள்ளது. சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமான, மாமல்லபுரத்திற்கு தெற்கில், 3 கி.மீ., தொலைவில், கடலோர பகுதியில் இவ்வளாகம் உள்ளது. இவ்வளாகத்தை தகர்க்கப் போவதாக, பயங்கரவாதிகள், தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

காவல் நிலையம் அமைப்பு : இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையம் உட்பட முக்கிய பகுதிகள், ராணுவ கட்டுப்பாட்டிலும், பிற பகுதிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,), கண்காணிப்பிலும் உள்ளன. சுற்றுப்புற பகுதி நவீன ரேடார் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடற்பகுதியை, கடலோர பாதுகாப்பு குழுமம் கண்காணித்து வருகிறது. பயங்கரவாதிகள், கடல் வழியே ஊடுருவி, மும்பை நகரை தாக்கியதை தொடர்ந்து, அத்தகைய ஊடுருவலை, இங்கு தவிர்க்க, கடற்பகுதி கண்காணிப்பிற்காக, சதுரங்கப்பட்டினம், முதலியார்குப்பம் மற்றும் கோவளம் ஆகிய இடங்களில், கடலோர காவல் நிலையம் அமைக்கப்படுகிறது.

ஆய்வு : இந்நிலையில், கல்பாக்கம் கடற்பகுதி கண்காணிப்பிற்கென, படகு துறை அமைக்கவும், இக்குழுமம் முடிவெடுத்துள்ளது.இங்கு, 500 மெ.வா., முன்மாதிரி அதிவேக ஈணுலை (பாவினி) நிலையத்திற்கு, கடல்நீர் கொண்டுவரும் ஜெட்டி பகுதி, பக்கிங்காம் கால்வாய், கடலில் கலக்கின்ற முகத்துவாரம் ஆகிய இடங்கள், படகு துறைக்காக ஆய்வில் உள்ளன.காவல் துறை கூடுதல் இயக்குனர் (கடலோர பாதுகாப்பு குழுமம்) சைலேந்திரபாபு, கடந்த 11ம் தேதி, இந்திராகாந்தி அணு ஆராயச்சி மைய மின்னணு பிரிவு இயக்குனர் சத்தியமூர்த்தி, சி.ஐ.எஸ்.எப்., கண்காணிப்பாளர் (கமாண்டன்ட் ) காமா உட்பட பலருடன், பாவினி பகுதியில் ஆய்வு செய்தார்.

அலை சீற்றத்தை தடுக்க...
இதுகுறித்து, மாமல்லபுரம் ஆய்வாளர் வேலு கூறுகையில், ''கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கடற்பகுதியை கண்காணிக்க, நவீன கருவிகளுடன் கூடிய ரோந்து படகு பயன்படுத்த உள்ளோம். படகை நிறுத்த, பாவினி ஜெட்டி பகுதியை ஆய்வு செய்து வருகிறோம். அங்கு, கடல் நீரேற்று பகுதியில் உள்ள கான்கிரீட் துாண்களில், இரும்பிலான இணைப்பை ஏற்படுத்தி, படகை நிறுத்தும் வசதி உள்ளது. படகை நிறுத்துவதற்கேற்ப, அலை சீற்றத்தை தடுக்க, நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். அங்கு இயலாவிட்டால், முகத்துவார பகுதியில் அமைக்கவும், ஆய்வு செய்கிறோம்,'' என்றார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை சென்ட்ரலில் மெட்ரோ, ரயில், பேருந்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டத்துக்கு, 389 கோடி ரூபாய் தேவைப்படும் என, நகர்ப்புற வளர்ச்சி துறை மதிப்பிட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை பெறுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில், வண்ணாரப்பேட்டை- - விமான நிலையம், சென்ட்ரல் -- பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.இருவழித்தடங்களும், சென்ட்ரல், ஆலந்துார் ஆகிய இடங்களில் சந்திக்கின்றன.இரு மெட்ரோ வழித்தடங்கள், புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், வெளி மாவட்டம், வெளிமாநில ரயில்கள் வந்து செல்வது என, பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோரும் வந்து செல்லும் மிக முக்கியமான போக்குவரத்து முனையமாக இந்த சந்திப்பு அமைய உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில் உள்ள இப்பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஒருங்கிணைப்பு : ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இங்கு வருவோர், இந்த சந்திப்பில் இன்னொரு போக்குவரத்து சேவைக்கு மாறுவதில் எவ்வித தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில், பூங்கா நகர் மின்சார ரயில், ரிப்பன் கட்டடம், அரசு பொது மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை பொதுவாகவும், ஒன்றுடன் ஒன்றும் இணைக்கும் வகையில், அதிநவீன நடைமேம்பாலம் அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை துறை உருவாக்கியது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்பது குறித்து குழப்பம் நிலவும் சூழலில், இப்பகுதியில் பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய திட்டம் : இதுகுறித்து நகரமைப்பு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம், 70 ஆயிரம் ச.மீ., பரப்பளவுக்கு பூமிக்கடியில், அடுக்கு தளங்களை கொண்டதாக அமைக்கப்படும், மெட்ரோ ரயில் சேவையை, மக்கள் எளிதாக பயன்படுத்த, பிற போக்குவரத்து சேவைகளுடன் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். இதற்காக, 'சென்ட்ரல் ஸ்கொயர்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் பணிகள், நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில், 500 கார்கள், 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், அனைத்து தரப்பு மக்களும், எளிதாக, வெவ்வேறு வகை போக்குவரத்து சேவைக்கு செல்லும் வகையில், ஆறு வழித்தடங்கள் அமைப்பது என, இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தை செயல்படுத்த, 389 கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை, கட்டுமான திட்ட அனுமதியின்போது வசூலிக்கப்படும் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து பெறுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை : சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், கந்து வட்டிக்காரர்களின் 'அடாவடி' வட்டி வசூலில் இருந்து தப்பிக்க முடியாமல், கோர்ட் ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கதறுகின்றனர்.

கந்துவட்டிக் கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில், கந்து வட்டி சாவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. ஆனாலும், மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் 'கடுமை' காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கந்து வட்டிக்காரர்களின் நடவடிக்கை ஒரு படி மேலே போய், கடன் வாங்கியவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக்கொள்வது, பெண்களை சிறை வைப்பது, குழந்தைகளை கடத்துவது என, அடுத்தடுத்த இம்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலும், தங்க நகை தொழிலாளர்கள், ஜவுளி விற்பனையாளர்கள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் இக்கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். கந்து வட்டி வசூலிப்பவர்களின் நடமாட்டம் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதில் ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பது, கொடுமையான விஷயம். பணத்தேவையில் கஷ்டப்படுவோரை தேடிப்பிடித்து உதவி செய்யும் கந்து வட்டி ஆசாமிகள், அடுத்தடுத்த தவணைகளில் பணத்தை திரும்ப பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், கடும் வார்த்தைகளால், அர்ச்சனை செய்கின்றனர். இதற்கு பணம் வாங்கியவர்கள் வாய் மூடியாகவே இருக்கின்றனர். கடன் பெற்றவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு ஈடாக, 'கையெழுத்திட்ட செக்'கை முன் கூட்டியே ஒப்படைத்திருப்பது தான் காரணம்.

இக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியதன் விளைவு, கந்து வட்டி நபர்களை கைது செய்யவும், தடை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இச்சூழலிலும், இக்கொடுமை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கோர்ட் ஊழியர்களிடமும் பரவியுள்ளது. நீதிகேட்டு பாதிக்கப்படும் மக்கள் கோர்ட்களை அணுகி வரும் நிலையில், கோர்ட் ஊழியர்களே, கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் குடும்பத்தினரின் தொழில் அபிவிருத்திக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். இதற்கு மூன்று ரூபாய் வட்டி தர சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடன் தொகையை கட்ட முடியாமல் திணறுகின்றனர். வசூலுக்கு வரும் கந்து வட்டி ஆசாமிகள், கோர்ட் ஊழியர்கள் முன்னிலையில், நாகூசும் வார்த்தைகளால் பெண்களை மட்டுமல்லாது, ஆண் ஊழியர்களையும் திட்டுகின்றனர்.கோவையில் மட்டும், 86 ஊழியர்கள் கந்து வட்டி ஆசாமிகளிடம் சிக்கியுள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் கோர்ட்களிலும் கந்து வட்டி ஆசாமிகளின் கைவரிசை நீண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வட்டியை கட்ட முடியாமல் அவதிப்படும் ஊழியர்கள் வேறு வழியின்றி, சக ஊழியர்களிடம் தங்கள் இயலாமையை தெரிவித்து அழுகின்றனர்.இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட நீதிபதியை சந்தித்து, தங்களை கந்து வட்டிக் கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என முறையிட உள்ளதாக கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
குடும்ப பிரச்னையில் தற்கொலை : மண்ணரையை சேர்ந்தவர் மோகன்தாஸ், 44; ஸ்டீம் ஆப்ரேட்டர். திருமணமாகி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால், மதுவுக்கு அடிமையானார். இதனால், குடும்பத்தில் பிரச்னை அதிகரித்தது. வெறுப்படைந்த அவர், வீட்டில்யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆட்டோ திருட்டு: திருப்பூர், கரட்டாங்காடு 4வது வீதியில் வசிப்பவர் சிவகுமார், 40; சரக்கு ஆட்டோ இயக்கி வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். கடந்த 13ம் தேதி, மர்ம நபர்கள் சரக்கு ஆட்டோவை திருடிச் சென்றனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை விற்றவர் கைது: இடுவம்பாளையம், கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அதே பகுதியில், டீக்கடை நடத்தி வருகிறார். வீரபாண்டி போலீசார், இவரது கடையில் சோதனை நடத்தினர். புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார், ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடைகள் ஆக்கிரமிப்பு; போலீசார் வழக்கு: திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வந்த புகாரில், ரூரல் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் உள்ள இரண்டு பேக்கரி முன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல், ராம் நகர், ராமமூர்த்தி நகர் பகுதிகளில் வடக்கு போலீசார் ஆய்வு செய்தனர். அங்கும், மக்களுக்கு இடையூறாக கடைகள் போடப்பட்டிருந்தன. கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வடக்கு மற்றும் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி ஒருவர் பலி: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர், கலியபெருமாள் மகன் சாத்தப்பன், 26. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து திருவாரூர் செல்வதற்காக, பல்லடம் வழியாக தனது பைக்கில் வந்துள்ளார். கே.என்.புரம் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த லாரி பின்புறம், சாத்தப்பனின் பைக் மோதியது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருட்டு; வாலிபர் கைது: திருப்பூர், பூலுவப்பட்டி தோட்டத்து பாளையத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா, 34; பனியன் கம்பெனி தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர், 35, என்பவர் தர்மேந்திரா வசிக்கும் காம்பவுண்டுக்குள் சென்று, அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு லிட்டர் பெட்ரோலை திருடியுள்ளார். மேலும், அவரது வீட்டு ஜன்னலை திறந்து மொபைல்போனை திருடியுள்ளார். அதைபார்த்த தர்மேந்திரா, ராஜசேகரை பிடித்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், திருப்பூர் வீரர் வெண்கல பதக்கம் வென்றார்.
சென்னை ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, சென்னை அடுத்த அலமாதியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான சர்வதேச ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் பிரிவில், திருப்பூரை சேர்ந்த ரமேஷ்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, சென்னை ரைபிள் கிளப் செயலாளர் சீதாராமராவ், இணை செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர், பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூ.4.40 கோடி மதிப்பில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, மேஜைபந்து, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடத்தும் வகையில், மைதானம் ஏற்படுத்தப்படும்.அதேநேரத்தில், விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடைப்பந்து விளையாட்டுக்கு மட்டுமே, அரசு பயிற்சியாளர் உள்ளார். மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாததால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் வீரர், வீராங்கனைகள், வெளியூர் பயிற்சியாளர்களையே நம்பியுள்ளனர்.இந்நிலையில், விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டால், திறமையை வளர்த்து கொள்ள மாணவ, மாணவியருக்கு, பேருதவியாக இருக்கும்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் கூறுகையில், ""திருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி துரிதகதியில் நடந்து வருகிறது.""இவை முடிந்ததும், விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
பல்லடம் : பல்லடத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் திருப்பூர் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பல்லடம் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் சார்பில், விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டி நேற்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியை, எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 கி.மீ., போட்டியிலும்; 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 6 கி.மீ., ஓபன் பிரிவு மற்றும் 8 கி.மீ., போட்டியிலும்; 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கி.மீ., பிரிவிலும்; பெண்கள் 4 கி.மீ., பிரிவிலும் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவில் கோவை சேர்ந்த அம்பிகா முதலிடம் பெற்றார். கோவை கிருஷ்ணவேணி இரண்டாமிடம், திருப்பூரை சேர்ந்த சினேகா மூன்றாமிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடம் பெற்றார். திருப்பூரை சேர்ந்த மயில்சாமி இரண்டாமிடம், திருப்பூர் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். 10 முதல் 12ம் வகுப்பு மாணவியர் பிரிவு தொடர் ஓட்டத்தில், பல்லடத்தை சேர்ந்த கோகிலதேவி முதலிடம், திருப்பூர் சவுந்தர்யா இரண்டாமிடம், கோவை சிவசில்வா மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் பிரிவில், கோவை சக்திவேல் முதலிடம், கோவை பாலன் இரண்டாமிடம், திருப்பூர் ஆனந்தராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
பொதுப்பிரிவு பெண்கள் போட்டியில், திருப்பூர் பிரேமா முதலிடம் பெற்றார். கோவை விஜயாபாண்டி இரண்டாமிடம், பல்லடம் லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த மயில்சாமிக்கு முதலிடம் கிடைத்தது. கோவை ராமச்சந்திரன் இரண்டாமிடம், திருப்பூர் பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.

On Monday, September 15, 2014 by farook press in ,    
அவிநாசி : அவிநாசி அருகே, மந்தகதியில் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணியை, விரைவாக முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதூர் - மங்கலம் ரோட்டில், பாலமுருகன் கோவில் அருகில் பள்ளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் ரோடு மேடாக்கப்பட்டு, அதன் கீழ் மழை நீர் வடிகால் குழாய் பதிக்கப்பட்டது. அதன் மறுமுனையில், மழை நீர் வெளியேறும் வகையில், ஆறு அடி ஆழத்தில் வடிகால் கட்டப்பட்டது. அதன் முடிவில், காசிகவுண்டன்புதூரில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் இணைக்காமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயில், கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், "நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால் கட்டி, மூன்று மாதமாகிறது. நீர் வெளியேறும் பாதை (டிஸ்போசபிள் பாயின்ட்) அமைக்காததால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. விரைவாக பணியை முடித்து, கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "மழைநீர் வடிகால் வெளியேறும் வகையில், மங்கலம் ரோட்டில் அமைக்கப்பட்ட கால்வாயின் மறுமுனையை, சாக்கடை கால்வாயுடன் இணைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் அப்படியே நிற்கின்றன. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். காசிகவுண்டன்புதூர் வழியாக குழாய்களை பதித்து, கழிவுநீரை வெளியேற்றும் வகையில், பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்,' என்றார்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்; போக்குவரத்து பாதிக்கப்
படுகிறது.
திருப்பூர் பி.என்.,ரோட்டில், மேட்டுப்பாளையம் ஸ்டாப் உள்ளது. அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே செல்லும் குடிநீர் குழாயில், சில மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. சரி செய்யும் பணிக்காக குழி தோண்டி, அப்படியே போட்டு விட்டுச் சென்றனர்.பணியை முடிக்காததால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது; குழியும் பெரிதாகி வருகிறது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கும்; திருச்சி, தஞ்சாவூருக்கும் இவ்வழியாக பஸ்கள் செல்கின்றன. இது, ஒருவழி பாதை. மேலும், சாலை ஏற்கனவே குறுகலாக உள்ளது. போதாக்குறைக்கு, குழி தோண்டி, ரோட்டில் பாதியளவு மண் குவித்து வைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் வரும்போது பாதசாரிகளால் ஒதுங்கக்கூட முடிவதில்லை.கடைகளின் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களால், மேலும் இடைஞ்சல் ஏற்படுகிறது."பீக் ஹவர்ஸில்' போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை; தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்களை சரிசெய்து, குழியை மூடி, விரைவில் சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அப்பகுதி குடிநீர் ஆய்வாளர் சுகுமாரிடம் கேட்டபோது, ""மெயின் குடிநீர் குழாய் மற்றும் டேங்க், பங்களா ஸ்டாப்பில் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் சப்ளையை நிறுத்தும்போது, குழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்பே, பணி செய்ய வேண்டும்.""இந்த வாரம் மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கும்போது, தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும். அப்போது பணியை துவங்கி, விரைந்து முடிப்போம்,'' என்றார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
உடுமலை : கேரள மாநிலம் மறையூர் அருகே, கரும்புத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன.

கேரள மாநிலம் மறையூர், காந்தலுார் வனச்சரகம், பயஸ்நகர் பீட் பகுதியில், வேட்டைத்தடுப்புக் காவலர் நாகராஜூக்கு சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் இவரது தோட்டத்தின் ஒரு பகுதியில், மூன்று சாக்கு மூட்டைகள் கிடந்தன. சந்தேகமடைந்த நாகராஜ், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.துணை வனச்சரகர் அஜி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் அப்பகுதிக்கு வந்து, சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 14 சந்தன மரக்கட்டைகள் சாக்கு மூட்டைகளில் இருந்தது. சந்தன மரக்கட்டைகளை வெட்டி, மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து, வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரள வனப்பகுதி எல்லைகளில், இருமாநில வனத்துறையினரிடையே, எல்லை பிரச்னையால் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை யார் மேற்கொள்வது என தெரியாமல் திணறுகின்றனர். இருமாநில வனத்துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை பயன்படுத்தி, மர்ம நபர்கள் தொடர்ந்து, சந்தனக்கட்டைகளை கடத்தி வருகின்றனர்.கடந்த ஜூலை மாதம், மறையூர் வனப்பகுதியில், சந்தனக்கட்டைகளை தொடர்ந்து கடத்தி வந்த, சேலம் கரிமாந்துறையை சேர்ந்த லட்சுமணன், 45 மறையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டான். முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதினர்.

ஆனால், 3ம் தேதி, காந்தலுார் வனச்சரகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு சந்தன மரங்கள், மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டன. இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தில் குற்ற வாளிகள் பிடிபடாத நிலை யில், 10 நாள் இடைவெளியில் மீண்டும் சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
பல்லடம் : பல்லடம் அருகே, தனியார் டையிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், துணிகள் எரிந்து சேதமடைந்தன.
கரைப்புதூரில் விஜய் என்பவருக்கு சொந்தமான டையிங் நிறுவனம் செயல்படுகிறது. இப்பகுதியில் நேற்று மாலை யாரோ புகைபிடித்து விட்டு, அணைக்காமல் போட்டுச் சென்றுள்ளனர். நெருப்பு பரவி, டையிங் செட் அருகே இருந்த தென்னை ஓலை எரியத் துவங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள், தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குள், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதில், டையிங் செட் மேற்கூரை மற்றும் துணி எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒருமணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
அவிநாசி : அவிநாசி அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை, தீயணைப்பு துறையினர் நேற்று உயிருடன் மீட்டனர்.
அவிநாசி ஐயப்பன் கோவில் அருகே கரண்ட்காரர் தோட்டத்தை சேர்ந்தவர், மாரப்பன். இவரது தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில், 12ம் தேதி காலை புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை வீரர்கள், நேற்று முன்தினம் மானை மீட்க முயற்சித்தனர். வலை விரித்தோ, அல்லது மயக்க மருந்து செலுத்தினால் மட்டுமே மானை பிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அதனால், உடுமலை வனச்சரகம் அமராவதியில் இருந்து, நேற்று வலை கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மோகன், ஜெகன் ஆகியோர், 70 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி, மான் மீது வலையை வீசினர். மற்ற வீரர்கள், வலையை மேலே இழுத்து, மானை காப்பாற்றினர்.
வனவர் முருகேசன் கூறுகையில்,""கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானுக்கு, இரண்டரை வயதிருக்கும். கிணற்றுக்குள் இருந்ததால், மிகவும் பயந்துள்ளது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட மான், சிகிச்சைக்குபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்படும்,'' என்றார்.
அப்பகுதியினர் கூறுகையில், "இரண்டு நாட்களாக, கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய மானை, தீயணைப்பு துறையினர் போராடி, பத்திரமாக மீட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில்இடைத்தேர்தல் நடைபெற உள்ள, இரு வார்டுகளுக்கு வெளியிடப்பட்டுள்ள, புதிய வாக்காளர் துணை பட்டியலில், போட்டோக் கள் இல்லை. அதனால், கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு தீர்வு காண, மாநில தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 22வது வார்டில் 8,538 வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது 12 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். 45வது வார்டில் கடந்த தேர்தலில், 10 ஆயிரத்து 599 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 13 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012, 2013 மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 22வது வார்டில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்களில், 2,156 ஆண்கள்; 1,939 பெண்கள் என 4,095 வாக்காளர்களின் போட்டோ இல்லாமல், பட்டியல் தயாரித்து, "பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் போட்டோ மட்டும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள ஓட்டு பதிவாக அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டோவுடன் கூடிய துணை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""வாக்காளர் பட்டியல் போட்டோ இல்லாமல் இருப்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கொடுத்த கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் கமிஷனுடன் பேசி, வெகுவிரைவில் தீர்வு பெற்றுத்தரும்,'' என்றார்.

மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசியல் கட்சியினர் கொடுத்த கடிதங்கள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நாளை (இன்று) அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை மாநகரக் காவல் துறை , மாவட்டத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களிடம் இருந்து சமூகவிரோத செயல்களைப் பற்றியத் தகவல்களைப் பெறவும், நேரடியாக பொதுமக்களே எந்த ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும் மொபைல் எண்ணை அறிமுகப் படுத்தி இருக்கிறது. மெயில் மூலமாகவும் காவல்துறைக்குத் துப்புக் கொடுக்கலாம். எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய மொபைல் எண் : 9843100100 (இது நேரடியாக கமிஷனர் மற்றும் டெபுடி கமிஷனரின் பார்வைக்குப் போகும்) பொதுமக்கள் தொலைபேசியில் நேரடியாக டெபுடி கமிஷனரிடம் பேச : 0422-6545464 மெயில் மூலம் தகவல் தெரிவிக்க : copcbe@yahoo.com தொடர்ச்சியான ரோந்துப் பணியின் காரணமாகவும், காவல்துறையின் உடனடி நடவடிக்கையின் காரணமாகவும் , 2012 ம் ஆண்டை விட , 2013 ம் ஆண்டில் கோவையில் குற்றச் செயல்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றி காவல்துறையினால் மட்டுமே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆகவே நாமும் நம் காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றுவோம்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : பிரபல சிடி வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் புதுப்படங்களை சிடிக்களாக தயாரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இதில், செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த சண்முகப்பாண்டி (38) என்பவர் தொடர்ந்து புதுப்படங்களை சிடிக்களாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.  சண்முகப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை ஏற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், சிடி வியாபாரி சண்முகப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
புதுவண்ணாரப்பேட்டை, : புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு காவலர் முகமது இஸ்மாயில் (40). கடந்த 4 நாட்களுக்கு முன், புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, இவருக்கும், பைக்கில் வந்த 3 சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தாக்கப்பட்டதாக கூறி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முகமது இஸ்மாயில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டக்கல்லூரி மாணவர்கள் முகமது அன்சாரி, சதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதைக் கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பின்னர், துணை கமிஷனர் நெஜ்மல் ஹோடாவிடம், புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவில் இருந்த முகமது இஸ்மாயில், நேற்று மணலி புதுநகர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : கொரட்டூர் போலீசார் நேற்று பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். 
தீவிர விசாரணையில், மதுரை, முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கவாஸ்கர் (28) என்பதும், அவர் மீது சென்னை, புறநகர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
மேலும், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த சீனிமுகமது, (42) என்பவரிடம் கத்திமுனையில் பணத்தை பறித்து சென்றதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் 15 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.